உப்புச்சப்பில்லாத தியானச் செய்திகள்
Tue Feb 02, 2016 4:35 am
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவம் வேதபூர்வ மான இறையியல் பஞ்சத்தால் வாடிவருவதை திருமறைத்தீபத்தின் மூலம் அடிக்கடி வாசகர்களுக்கு நினைவுறுத்தி வருகிறோம். பிரசங்கம் என்ற பெயரில் ஆவியும் அனலுமில்லாத சுருக்கமான பேச்சுக்களும், தனிமனித அனுபவங்களும், அரைவேட்காட்டு சாட்சிகளும் சபைகளை அலங்கரித்து ஆத்துமாக்களை ஆத்மீக பஞ்சத்தில் அலைய விட்டுக் கொண்டிருக்கின்றன. சத்தான, வேதபூர்வமான இறையியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் பெந்தகொஸ்தே/கெரிஸ்மெடிக் ஆக்கிரமிப்பில் இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் நம்மக்கள். கருத்துள்ள, பொருளுள்ள கிறிஸ்தவ இலக்கியம் என்பது தமிழுலகம் பெருமளவில் அறியாததொன்றாக இன்றும் இருந்து வருகிறது. மொத்தத்தில் இந்தக் கணினி யுகத்தில் நாமே நம்மைப் பார்த்து வெட்கப் பட்டு நிற்க வேண்டிய நிலையில் தமிழ் கிறிஸ்தவம் இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு நான் தமிழகத்தில் இருந்து எங்கள் நாட்டுக்கு வந்த ஒரு விசுவாசக் குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது. சென்னையில் ஒரு “பெரிய” பெந்தகொஸ்தே சபையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க ளோடு பேசிப்பார்த்தபோது விசுவாசத்தைக்குறித்தும், மனந்திரும்புதலைக் குறித்தும் வேத அறிவில்லாதவர்களாகக் காணப்பட்டனர். கத்தோலிக்க மதத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகூட அவர்களுக் குத் தெரியாதிருந்தது. வேதப்பகுதிகளை எப்படி வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே அறியாதவர்களாக இருந்தார்கள். சபை வரலாற்றை அவர்கள் தங்கள் வாழ்நாளில் கேள்விப்பட்டதில்லை. ஐந்து வயது குழந்தைப் பிள்ளைகளைப்போல அறிவில் வளராது, சிந்திக்கும் சக்தியிழந்து இருந்த அவர்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. தன்னிலை மறந்து அல்லேலூயா சொல்லி சத்தமாக ஜெபிக்கவும், துதி என்ற பெயரில் ஒருசில வார்த்தைகளை மட்டும் நூறுதடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லி சத்தமிடவும் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மெய்யான ஊழியக் காரர் யார்? போலிகள் யார்? என்று இனங்காணும் பக்குவமே இல்லாது இருந்தார்கள் அவர்கள். எல்லா நாடுகளிலும் தமிழ் கிறிஸ்தவம் இந்த நிலை யில்தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்லுவது எனக்குக் கேட்கிறது. நம்மக்கள் இப்படித் தொடர்ந்து எத்தனைக் காலத்துக்கு அறியாமையில் வாடப்போகிறார்கள்? விசுவாசிகள் என்ற பெயரில் விசுவாசமே இல்லாது வேதத்தைப் புறக்கணித்து உணர்¢ச்சி வெள்ளத்தில் நீச்சலடித்து தொடர்ந்தும் உயிரற்று இருக்கப் போகிறார்களா? இந்தக் கேள்விகளைக் கேட்காமல் மான முள்ள எந்த விசுவாசியும் இருக்க முடியுமா? கேள்விகள் மட்டும் பதில்களாக அமைந்துவிடாது என்பது எனக்குத் தெரியும். இந்த நிலைமாற நம்மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்திக்கும் பக்கு வமே இல்லாது, மூளையை வீட்டில் வைத்துவிட்டு, திருச்சபை ஆராதனை வேளைகளில் அல்லேலூயா கோஷமெழுப்பி வாழும் தமிழ் மகனைத் திருத்த ஊழியக்காரர்கள் இன்று செய்ய வேண்டியதென்ன? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது.
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் பிரசங்க ஊழியத்தை நான் அக்கறையோடு கவனித்து வந்திருக்கிறேன். அதேவேளை தமிழில் வெளிவரும் கிறிஸ்தவ இலக்கியங்களையும், இதழ் களையும், பத்திரிகைகளையும் பார்த்தும் படித்தும் வந்திருக்கிறேன். நூற்றுக் கணக்கில் அவை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரசங்கங் களும் சரி, இலக்கியங்களும் சரி, இதழ்களில் வெளிவரும் செய்திகளிலும் சரி, ஒரு முக்கியமான அம்சத்தை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இவை எல்லாமே வேத கொள்கைகள், கோட்பாடுகளற்ற (Doctrinal teaching) உப்புச்சப்பில்லாத தியானச் செய்திகளாகவே இருந் திருக்கின்றன, தொடர்ந்தும் இருந்து வருகின்றன. அதுவும் இவற்றை வெளிப் படையாக “தியானச் செய்திகள்” (Devotional messages) என்ற பெயரிலும் அழைத்து வருவது வழக்கில் இருக்கிறது. இந்தத் தியானச் செய்திகளில் எந்தவித வேதக் கோட்பாடுகளுக்கும் இடமிருக்காது. இந்த வகையில் பிரசங் கிக்கிறவர்களும், எழுதுகிறவர்களும் நிர்த்தாட்சன்யமாக வேதக் கோட் பாடுகளைப் புறக்கணிக்கிறார்கள். இதை நியாயப்படுத்திப் பேசும் இவர்கள், “ஆத்துமாக்களுக்கு அறிவென்பதே இல்லை, அவர்களுக்கு சிந்திக்கும¢ வழக்க மும் இல்லை, அதனால், அவர்கள் சிந்திக்க அவசியமில்லாமல், உணர்ச்சி வசப்படுகிறமாதிரி ஒரு சிறுசெய்தியை உதாரணத்தோடு கொடுத்தால் மட்டும் போதும்” என்று சொல்லுவார்கள். இன்றைக்கு தியானச் செய்திகள் என்ற பெயரில், “அன்றன்றுள்ள அப்பம்”, “அனுதின மன்னா”, “தின தியானம்”, “தினசரி தியான நூல்” என்று பல்வேறு பெயர்களில் நூற்றுக் கணக்கில் இந்தத் தியானச் செய்தி நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வேதமறிந்தவர்கள் மத்தியில் “தியான நூல்கள்” (Devotional writings) என்ற வார்த்தைகளுக்கு பொருளே வேறு. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் கருத்தை விட அது பொருளில் வேறுபட்டது. வேத மறிந்தவர்கள் உதாரணமாக, ஜோன் பனியன் எழுதிய மோட்ச பிரயாணம் (Pilgrims Progress), பரிசுத்த யுத்தம் (Holy War) போன்ற நூல்களை “தியான எழுத்துக்கள்” என்பார்கள். ஏனெனில், இவை வேதக் கோட்பாட்டு விளக்கங்களை நேரடியாக அளிக்காமல், அந்தக் கோட்பாடு களை உருவகங்களின் மூலம் அளிக்கின்றன. இந்த நூல்களை வாசிப்பதன் மூலம் வேதக் கோட்பாடுகளை அனுபவரீதியாக நாம் விளங்கிக் கொள்கிறோம். இந்த நூல்களில் வேதக் கோட்பாடுகள் நிச்சயமாக நிறைந்து வழிகின்றன, ஆனால், அவை விளக்கப்பட் டிருக்கும் விதம்தான் வித்தியாசமானது. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் “தியான நூல்கள்” இந்த வகையில் அமையவில்லை. அவை வேதக் கோட்பாடுகளையே குழிதோண்டிப் புதைத்துவிடுகின்றன. சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் எழுதிய, அனுபவரீதியாக வேதபோதனைகளைத் தரும் “தியான நூல்களை” கரும்புச் சாறுக்கு ஒப்பிட்டால், தமிழில் இன்றிருக்கும் பெரும்பாலான “தியான நூல்களை” கரும்புச் சக்கைக்கு ஒப் பிடலாம். வேத சத்தையெல்லாம் உறிஞ்சித் தள்ளிவிட்டு வெறும் சக்கையாக இருக்கும் பயனற்ற எழுத்துக்களே இன்று தழிலில் இருக்கும் அநேக “தியான நூல்கள்”.
நம் மக்களை அறிவுபூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டுமானால் இந்தத் “தியானச் செய்திகளை” மட்டும் வாசிக்கும் சோம் பேரித்தனத்தை நாம் முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும். ஆம்! இது சோம்பேறித்தனத்தின் அடையாளம்தான். ஒருவன் வேதத்தைத் தன் கையில் எடுத்து அதை வாசித்து, வாசி¢த்த பகுதியை கவனமாக ஆராய்ந்து, கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் கேட்டு அந்தப் பகுதி தரும் விளக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் நாம் எதைச் செய்ய வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முதலில் எத்தனை நேரம் தேவை? நேரத்தைத் தவிர எத்தனை உழைப்பு தேவை? அதுமட்டு மல்லாமல் மூளைக்கும் வேலை கொடுக்க வேண்டும். இந்த வம்பெல்லாம் எதற்கு என்று உதறி விட்டு சாம் ஜெபத்துரையின் “¢அன்றன்றுள்ள அப்பத்திற்கு” மாத சந்தா கட்டிவிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தியானச் செய்தியை வேக உணவு மாதிரி சுலபமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப் பதற்குப் பெயர்தான் சோம்பேரித்தனம். தோசை செய்வதற்கு உழுந்து வாங்கி, அதை ஊர வைத்து, உரலில் போட்டு ஆட்டி பின்னால் கஷ்டப்பட்டு தோசை செய்வதைவிட “திடீர் தோசை” மாவை வாங்கி சுலமாக எந்தக் கஷ்டமும் இல்லாமல் தோசை செய்து சாப்பிடுவதைப் போலத்தான் “தியானச் செய்திகளும்” பலருக்கும் பயன்படுகின்றன. அதனால்தான் இன்றைக்கு தியானச் செய்தி எழுதுகிறவர்களும், தியான நூல்கள் விற்பவர் களும் அதிகம். மற்ற எல்லாவற்றையும்விட இவைதான் இன்று விசுவாசிகள் மத்தியில் அதிகம் விலை போகின்றன. விலை போகாமல் என்ன செய்யும்? கஷ்டப்படாமல், உழைக்காமல் ஓசியில் யாரோ செய்திருக்கும் அசட்டுத் தியானத்தின் பலனை ஒரு சில ரூபாய்களைக் கொடுத்து வாசித்துப் பலனடைய கசக்கவா செய்யும்! இது தெரியாமலா சாம் ஜெபத்துரை நூற்றுக் கணக்கில் உப்புச்சப்பில்லாத தியான நூல்களை எழுதித் தள்ளிக் கொண் டிருக்கிறார். இது போதாதென்று போதகர்களையும், பிரசங்கிகளையும் சோம் பேறிகளாக்க, “365 நாட்களுக்கான செய்திகள்”, “52 வாரங்களுக்கான செய்திகள்” என்று சோம்பேரிப் பிரசங்கிகளின் சோம்பேறித்தனத்தை மேலும் வளர்க்க அவர்களுக்கு உப்புச்சப்பில்லாத “திடீர் செய்தி” தயாரித்தளிக்கும் பணியையும் இவர் செய்துவருகிறார்.
இந்தத் தியானச் செய்திகளால் வரும் ஆபத்தைப் பற்றி விளக்காமல் இருக்க முடியாது.
(1) முதலில், இவை விசுவாசிகளை சோம்பேறிகளாக வைத்திருக்கின்றன.
ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய தியானவேளைகளில் வேதப் புத்தகத்தைத் தானே வாசித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்றுதான் கர்த்தர் சொன்னாரே தவிர, தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யா மல் வேறொருவருடைய உழைப்பில் சுகம் காணச் சொல்லவில்லை. நான் இங்கே சொல்லுவது கர்த்தருக்கும் நமக்கும் இடையில் மட்டும் தனிமையில் நடக்கும் தனித்தியான வேளையைப்பற்றித்தான். அந்தத் தனித் தியானத்தில் நாம் நேரடியாக வேதத்தின் ஒருபகுதியை வாசித்து தியானித்து ஜெபம் செய்வதையே கர்த்தர் விரும்புகிறார். அதைச் செய்வதற்கு ஒரு விசுவாசி இறையியல் அறிஞனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நேரத்தைக் கொடுத்து கவனத்தோடு ஒரு வேதப்பகுதியை ஒவ்வொரு விசுவாசியும் வாசிக்க வேண்டுமென்பது கர்த்தரின் எதிர்பார்¢ப்பு. அதைக்கூடச் செய்ய சோம்பேறித்தனம் கொண்டவர்கள் உண்மையிலேயே கர்த்தரின் விசுவாசிகளா? என்ற சந்தேகம் எழுவதில் தப்பில்லை. இந்தத் தியான வேளையில் “தியான நூல்கள்” நுழையக்கூடாது. இந்தத் தனிப்பட்ட வேத தியானத்தில் சோம்பேறித்தனம் கொண்டவர்கள் ஆத்மீக வாழ்வில் வளர்வது கஷ்டம். இந்த விஷயத்தில் சோம்பேறித்தனத்தைத்தான் “தியான நூல்கள்” வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஸ்கொட்லாந்தில் போதகராக இருக்கும் மொரிஸ் ரொபட்ஸ் “ஒரு விசுவாசியினுடைய தனிப்பட்ட தியான நேரங் களில் ஸ்பர்ஜனுடைய பெயரில் வரும் தியான நூல்களை (Morning and Evening1) வாசிப்பதைக்கூட நான் அங்கீகரிப்பதில்லை” என்று தன்னுடைய பிரசங்கத்தில் ஒருமுறை கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் கூறிய அவர் “நாம் தியான வேளையில் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய அது ஆபத் தாக முடிகிறது” என்றார். ஸ்பர்ஜன் தன்னுடைய செய்திகளும், பிரசங்கங்களும் தியான நூல்களாக வெளிவருவதற்காக எழுதவில்லை. அவருடைய பிரசங் கங்களை நாம் தியானவேளை தவிர்ந்த வேறு நேரங்களில் வாசிப்பதே நல்லது. தியான நூல்களை எழுதி விற்கின்ற, இதை வாசிக்கின்ற அன்பர்களே! தயவு செய்து கர்த்தருடைய பிள்ளைகளின் சோம்பேறித்தனத்திற்குத் துணை போய் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இடையூராய் இருக்காதீர்கள்.
(2) யாரோ ஒருவர் எழுதுகிற தியானச் செய்தி, தனித்தியானத்தில் கர்த்தரோடு நமக்கிருக்க வேண்டிய உறவுக்கு இடையூராக அமையும்
ஒரு மனிதர் எத்தனை பெரிய அறிஞராக இருந்தாலும், ஏன்! லூதராக இருந்தாலும், ஸ்பர்ஜனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய தியான சிந்தனைகள் அவர்கள் கிறிஸ்துவில் அடைந்த அனுபவங்களே தவிர நம் முடைய அனுபவங்கள் ஆகிவிடாது. நமது தனிப்பட்ட தியானவேளையில் வேறு யாரையும் அல்லது “தியான நூல்களையும்” நுழையவிடுவது நாம் நேரடியாக கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்குத் தடையாக இருந்துவிடும். அத்தோடு நமது சிந்தனைகளைக் கர்த்தருக்கு முன் வைப்பதற் கும் தடையாக இருந்துவிடும். எப்படி என்று கேட்கிறீர்களா? நாமே ஒரு வேதப்பகுதியைத் தெரிவு செய்து வாசிக்காமல் யாரோ ஒருவருடைய தியானச் செய்தியை வைத்துத் தியானிக்கும்போது அது நாம் நேரடியாக செய்கிற தியானமாகாது. கர்த்தர் அதை விரும்பவில்லை. அவர் நாமே ஒவ்வொரு நாளும் சொந்தமாகத் தெரிந்துகொண்ட ஒரு வேதப்பகுதியைத் தெரிவுசெய்து வாசிக்கும்படி சொல்லுகிறார். அத்தோடு அந்தப்பகுதியில் கர்த்தர் சொல்லி யிருப்பதை யாருடைய தலையீடும் இல்லாமல் நாமே நமது மனதைப் பயன் படுத்தி சிந்திக்கும்படியும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். அப்படி சிந்தித்து ஆராய்கிற போதுதான் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்தி தன்னுடைய வார்த்தையில் எழுதியிருப்பதை நாம் விளங்கிக் கொள்ளச் செய்கிறார். அது மட்டுமல்ல, அந்த வசனங்களின் போதனைகளின்படி நாம் நடக்க வேண்டும் என்ற உந்துதலையும் நாம் நேரடியாக அடைகிறோம். வேறு மனிதர்களுடைய தியானச் செய்திகள் இந்த ஆத்மீகக் காரியங்கள் நம்மில் நடக்காதபடி தடையாக இருந்துவிடுகின்றன. அந்தத் தியானச் செய்தி களில் இருப்பவை வேறு மனிதர்களுடைய சிந்தனைகள் என்பது கர்த்தருக்குத் தெரியாதா, என்ன! இதற்காக நாம் பிரசங்கங்கள் கேட்கக்கூடாது, நல்ல கிறிஸ்தவ இலக்கியங்களை, ஏன்! இந்தப் பத்திரிகையைக்கூட வாசிக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. கர்த்தரே அவற்றையும் அனுமதித்திருக் கிறார். நம்முடைய ஆத்மீக வளர்ச்சிக்கு அவையெல்லாம் நிச்சயம் அவசியம். ஆனால், அவற்றை நாம் வாசிக்க வேண்டிய நேரமும் சந்தர்ப்பமும் வேறு. அவற்றை நாம் நம்முடைய தனிப்பட்ட தியான நேரத்தில் வாசிக்காமல் வேறு சமயங்களில் வாசிக்க வேண்டும். நம்முடைய தனித் தியானவேளை கர்த்தருக்கும் நமக்கும் மட்டும் சொந்தமான நேரம். அந்த நேரத்தைத் “தியான நூல்கள்” ஆக்கிரமிக்க இடந்தரக்கூடாது.
(3) பெரும்பாலான “தியான நூல்கள்” உப்புச்சப்பில்லாத சம்பவத் தொகுப்பு களாகவும், தனிமனித அனுபவங்களையுமே உள்ளடக்கியிருக்கின்றன
உதாரணத்திற்கு சாம் ஜெபத்துரையின் “அன்றன்றுள்ள அப்பத்தின்” சில பக்கங்களை வாசித்துப் பார்த்தால் இது புரியும். ஒரு வேத வசனத்தை எடுத்துக் கொண்டு அந்த வசனத்தின் கருத்தே தெரியாமல் இதைத்தான் அந்த வசனம் சொல்லுகிறதென்ற அனுமானத்தோடு மனித வாழ்க்கையிலும், உலகத்திலும் நடந்த அன்றாட சம்பவங்களை உதாரணம் காட்டி உணர்ச்சி ததும்ப எழுதப்பட்டதாக அவை இருக்கும். இவற்றை வாசிப்பதால் விசுவாசி வேத ஞானத்தை பெற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பக்கங்களில் சொல் லப்பட்டவை மனதுக்கு இதமானவையாக இருக்கலாம். ஆனால், கர்த்தரின் சத்தமாக நிச்சயம் இருக்காது. இந்த உப்புச்சப்பில்லாத “தியானச் செய்திகள்” எப்போதும் ஒரு பக்கத்துக்கு குறைந்ததாக சீக்கிரமாக வாசித்து முடிக்கக் கூடியதாக இருக்கும். உடல் நலத்துக்காக நாம் சாப்பிடும் வைட்டமின் மாத்திரைகளைப் போல ஆத்மீக நலத்துக்கான வைட்டமின் மாத்திரைகளாக சிறிய வடிவத்தில் இவை அமைந்திருக்கும். ஆனால், இந்த ஆத்மீக வைட்ட மின் மாத்திரைகளில் இருதயத்துக்கு நலத்தைக் கொடுக்கும் எந்தச் சத்தும் இருக்காது. இவற்றை வாங்கப் பயன்படுத்தும் நம் பணம் மட்டும்தான் விரயமாகும்.
(4) தமிழிலிருக்கும் “தியான நூல்களும்” “தியானச் செய்திகளும்” வேதக் கோட் பாடுகளுக்கு ஒருபோதும் இடங்கொடுப்பதில்லை
மிக முக்கியமாக இந்தத் “தியான நூல்களில்” வேதக்கோட்பாடுகளையே பார்க்க முடியாது. இவற்றை வாசிக்கிறவர்கள் சிந்திப்பதற்கு அவசியமில்லா தபடி குறுகிய நேரத்தில் இருதயத்தில் சாந்தத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதால் இவற்றில் வேதக்கோட் பாடுகள் தலை நீட்டியும் பார்க்காது. வேதக்கோட்பாடுகள் நம் இருதயத்துக்கு சாந்தமளிக்க முடியாது என்ற தவறான ஊகத்தின் அடிப்படையிலேயே இவை எழுதப்பட்டிருக்கும். ஐந்து வருடங்களுக்கு தன்னுடைய வாழ்க்கையில் இந்தத் “தியான நூல்களை” மட்டும் வைத்துத் தியானம் செய்திருக்கும் ஒரு ஆத்துமாவை நாம் ஆராய்ந்து பார்த்தால் அங்கே வேத ஞானமோ, கர்த்தருக் குள் ஆழமான, நிச்சயமுள்ள ஒரு உறவோ இல்லாமலிருப்பதை உடனடியாகக் கண்டுகொள்ளலாம். கர்த்தரின் இறையாண்மை பற்றியோ, அவருடைய பராமரிப்பு பற்றியோ, திரித்துவப் போதனைகளையோ, இயேசு கிறிஸ்துவின் கல்வாரிப்பலியின் மகிமையையோ இந்தத் “தியான நூல்களில்” காண முடி யாது. கோழியை உரிப்பதுபோல வேத வசனங்களில் இருக்கும் வேத போதனைகளை யெல்லாம் உரித்தெடுத்துவிட்டு நம் இருதயத்தில் போலியான ஒரு சாந்தத்தை ஏற்படுத்தும் சந்தன வாசனையைத் தடவி எழுதப்பட்ட தாகத்தான் இந்தத் “தியான நூல்கள்” இருக்கும்.
இந்த ஆக்கம் முழுவதும் பெரும்பாலும் தியான நூல்களினால் ஏற்படும் ஆபத்தையே நாம் சுட்டிக்காட்டுகின்றபோதும் இதேவகையில் தான் சபைகளில் கொடுக்கப்படும் தியானச் செய்திகளும் அமைந்திருக்கின்றன. கோட்பாடுகளே இல்லாது ஒரு சில வேத வசனங்களைப் பயன்படுத்தி, அவற்றை விளக்கிப் பிரசங்கிக்காது, ஆத்மீகக் கருத்து என்ற பெயரில் தாம் நினைத்ததை உருவகப் படுத்தி சொல்லும் செய்திகளை அளிப்பவர்களாகத் தான் பெரும்பான்மையான பிரசங்கிகள் இருக்கிறார்கள். உப்புச்சப்பில்லாத போலிச் சந்தன வாசனை தடவிய “தியானச் செய்திகளே” இவை. தனிமனித வாழ்க்கை சம்பவங்களும், ஊர் விவகாரங்களும், கதைகளும் நிரம்பிய உணர்ச்சிவசப்பட வைக்கும் சிறு செய்திகளாவே இந்தத் தியானச் செய்திகள் இருக்கும். இச்செய்திகளை அளிப்பவர்கள் நிச்சயம் ஏதாவதொரு வேத வசனத்தை வசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், நாம் கேட்ட செய்தியின் மூலம் எந்தக் கருத்தைப் புரிந்து கொண்டோம் என்று சிந்தித்துப் பார்த்தால் அங்கே ஒன்றுமே இருக்காது. சிந்திப்பதையே மூட்டை கட்டி வைத்துவிட்டு அனுபவங்களை மட்டும் நாடி அலைந்து கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு இன்று நொருக்குத் தீனியாய் இருக்கின்றன இத்தகைய “தியானச் செய்திகள்”. வேதக்கோட்பாடுகள் இல்லாமல் வேத வசனங்களைப் பயன்படுத்தி பிரசங்கம் என்ற பெயரில் கொடுக்கப்படும் “போலிமருந்துகளால்” ஆத்துமாக்கள் ஆத்மீக ஞானத்தையும், பெலத்தையும் பெற முடியாது. இன்று கிறிஸ்தவம் தமிழர்கள் மத்தியில் சீர்பெறத் தேவையாய் இருப்பது வேத போதனைகள் நிறைந்து வழியும் சத்துள்ள பிரசங்கங்கள் – உயிரில்லாத “தியானச் செய்திகள்” அல்ல.
(5) பெரும்பாலும் தமிழிலில் “தியான நூல்கள்” எழுதுகிறவர்கள் முறையான கிறிஸ்தவ இறை யியல் அறிவைப் பெற்றுக்கொள்ளாதவர்கள்.
வேத இறையியலின் (Biblical Doctrine) அடிப் படையில் எழுதப்படாத எதுவும் சுவிசேஷ கிறிஸ் தவத்தோடு (Evangelical Christianity) தொடர்பில் லாதவை. வேத இறையியலே தெரியாமல் வெறும் அனுபவத்தை மட்டும் நாடி, சமயசமர சக் கோட்பாட்டைப் பின்பற்றும் நூற்றுக்குத் தொன்னூற்றியொன்பது வீதமானோரே இன்று “தியான நூல்களின்” ஆசிரியர்களாக இருக்கிறார் கள். அவற்றில் காணப்படும் போதனைகளும், அனுபவங்களும் வேதம் சார்ந்தவையாக இருக்க முடியாது. அத்தோடு “தியான நூல்” எழுதுகிற அனேகர் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவமாக எண்ணுபவர்கள்; கத்தோலிக்க மதப்போதனை களைக் கிறிஸ்தவப் போதனைகளாக “தியான நூல்கள்” மூலம் வழங்குகிறவர்கள். வேத இறை யியல் கோட்பாட்டைக் கொண்டிராத இவர் களுடைய எழுத்துக்களை நாம் வாசிப்பதற்கு தயங்க வேண்டும். ஏனெனில், அவற்றில் கர்த்த ரின் போதனைகளை மீறிய அனுபவங்களே (Mysticism) விளக்கப்பட்டிருக்கும். கிறிஸ்தவ அனுபவங்கள் எப்போதும் வேதத்தில் இருந்து புறப்படுவதாயும், வேதத்தை அடித்தளமாய்க் கொண்டதாயும் இருக்க வேண்டும். கிறிஸ்தவ இறையியல் பஞ்சத்தாலேயே வேதம் அனுமதிக் காத அனுபவங்களை விளக்கும் தியானச் செய்தி களும், தியான நூல்களும் தமிழ் கிறிஸ்தவ உலகத்தை தொடர்ந்து ஆன்மீகச் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன. வரலாற்றில் இருண்ட காலத்தில் இருந்த நிலையே இ¢ன்று தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இருக்கிறது. வேதம் நம் சொந்த மொழியில் இருந் தும் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடியாது காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவத்திற்கு மெய்யான ஆத்மீக விடுதலை என்று கிடைக்கும்? என்ற ஏக்கமே இதை எழுதத் தூண்டியது.
குறிப்பு 1: ஸ்பர்ஜனுடைய பிரசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறு சிறு பகுதிகளை அன்றாட வாசிப்புக் காக சில வெளியீட்டாளர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இவற்றை ஸ்பர்ஜன் வெளியிடவில்லை.
http://biblelamp.me/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum