கேதுரு மரம்
Wed Jan 27, 2016 9:33 am
கேதுரு” மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிக்கு அதிகமாக அமைந்திருக்கும் மலை சிகரங்களில் வளர்பவை. லீபனோன், துருக்கி, சீப்புரு தீவு ஆகிய பகுதிகளில் காணப்படும் இம்மரம் வேதாகமத்தில் தனக்கென்று தனி இடம் பிடித்துக் கொண்டுள்ளது.
லீபனோன் நாட்டின் தேசிய கோடியில் இம்மரம் இடம் பெற்றுள்ளது. 100 அடி உயரமும் 6 அடி அகலமும் உடையதாய் வளர்ந்தோங்கிய இம்மரங்கள் பார்ப்பதற்கு பிரம்மாண்ட காட்சி தருபவை. (ஆமோஸ் 2:9) ஆகவே தான் கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையை விளக்க, சங்கீதக்காரன் ‘கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது” என்று வியந்து பாடுகிறார். (சங் 29:5)
இஸ்ரவேல் நாட்டில் காணப்படும் எல்லா மரங்களையும் விட லீபனோனின் கேதுரு மரம் வேதாகமத்தில் திவ்வியமான கேதுரு, உச்சிதமான கேதுரு என்று வருணிக்கப்பட்டு அதிகமாகப் போற்றப்படுகிறது. (சங்கீதம் 80:10, எரேமியா 22:7)
கேதுரு மரம் அநேக ஆவிக்குரிய ரகசியங்களை நமக்கு வெளிபடுத்துகிறது
1) தண்ணீர் அருகே வளர்பவை:
-------------------------------------------------
கேதுரு மரங்களின் பிரம்மாண்டத்திற்கும் திரட்சிக்கும் பின் மறைந்திருக்கும் ரகசியம் என்னவெனில், அவை தண்ணீர் அருகே வளர்கின்றன.( எண் 24:6).
அதை போலவே பரிசுத்த ஆவியானவர் என்னும் நீர்க்கால்களின் ஓராமாய் நாட்டப்பட்ட மனிதன் இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருக்கிறான். பாக்கியவான் என்று பேர் பெறும் அவனே கனிகள் நிறைந்த வாழ்வை உடையவன். (சங்கீதம் 1:1).
தேவன் நம் ஒவ்வொருவரையும் கேதுரு மரங்களைப் போல ஆவியானவர் எனும் ஜீவத்தண்ணீர் அருகே நாட்ட விரும்புகிறார்.
2) காட்டிலிருந்து ஆலயத்திற்கு
-------------------------------------------------
தகப்பனுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பிய சாலமோன் ராஜா எருசலேமில் தேவாலாயம் ஒன்றை எழுப்பினார். ஆலயத்தை கட்ட பலவிதமான விலையுயர்ந்த பொருட்களை முதலாவது திரட்டினார். அதில் ஒன்று ‘கேதுரு மரங்கள்’
தேவலாயத்தில் உத்திரங்களை உருவாக்க தீரு தேசத்து ராஜாவாகிய ஈராமிடம் சாலமோன் அரசர் ‘கேதுரு’ மரங்களை தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஈடாக கலிலேயா நாட்டில் உள்ள 20 பட்டனங்களை விலையாககொடுத்தார். (I இராஜாக்கள் 5:10, 6:36)
தூர தேசத்தில், எங்கோ ஒரு மலைக் காட்டில் வளர்ந்த கேதுரு மரங்கள் இப்போது சர்வ வல்லவராகிய பரிசுத்த தேவனின் ஆலயத்தில் அங்கமாயின. யாராலும் கண்டுகொள்ளாப்படாத அம்மரங்கள் இப்போது அனைவருடைய தொழுகை ஸ்தலத்தை தாங்கும் உத்திரங்கள் ஆகின. கேதுரு மரங்கள் பெற்றிருக்கும் பாக்கியம் தான் எத்துனை பெரியது!
இதைப் போலவே பூமியின் கடையாந்தரங்களிலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்த நாம் இப்போது தேவனுடைய இரத்தத்தால் விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறோம். தேவனுடைய சாரீரமாகிய சபையிலே இணைக்கப்ட்டுமிருக்கிறோம். (எபேசியர் 2:12, I கொரிந்தியர் 6:20)
கேதுரு மரங்களைப் போலவே ஆவியானவர் எனும் நதியருகே நீங்கள் நாட்டப்படுவீர்களானால் தேவனுடைய வாசஸ்தலத்தில் நீங்களும் காணப்படுவது நிச்சயம்!
இது எத்தனை பெரிய பாக்கியம்!
நன்றி: சிலுவையின் நிழல்
Re: கேதுரு மரம்
Wed Jan 27, 2016 9:34 am
லீபனோனின் கேதுருக்கள்
லீபனோன் என்றால் வெண்மலை எனபது பொருள். பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும். எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளது.
இதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் ‘வெள்ளை மலை’ என்ற பேர் ஏற்பட்டது.
ஆதி காலத்தில் இம்மலைசரிவுகளில் கேதுரு மரங்கள் நிறைய நின்றன. இங்கிருந்துதான் சாலமோன் தேவாலயத்திற்குத் தேவையான கேதுருமரங்களைக் கொண்டுவந்தான்.
நன்கு வளர்ச்சி பெற்ற இம்மரத்தின் அடியில் ஐயாயிரம் பேர் தங்கலாம்.
ஆகவே தான் நீதிமானின் செழிப்பை லீபனோனின் கேதுருக்கு இணையாக வேதம் சொல்கிறது,
“நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங் 92:12).
கேதுரு மரங்களின் வேர் வெகுதூரம் படர்ந்து வளரும். இவைகள் பாறைகளை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதால் கடும்புயலானாலும் இம்மரங்கள் அசைக்கப்படுவதில்லை. கற்பாறையாம் இயேசுவைப்பற்றிக் கொள்வோமானால் எந்தச் சோதனைகளும் நம்மை அசைக்கமுடியாது.
இம்மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து பிசின் போன்ற கசிவு ஏற்படுகிறது.
கேதுருவின் பிசின் நறுமணம் மிக்கது. நமது வாழ்வு நறுமணமாய் அமைதல்வேண்டும். பூச்சிகள் இம்மரத்தை அழிக்காதபடி, நறுமணம் நிறைந்த பிசின் மரத்தைப் பாதுகாக்கிறது. நாமும் அன்பின் சிநேகத்தால் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொள்வோம்.
லீபனோனின் கடற்கரைக்கு 25 மைல்களுக்கு அப்பால் ஒரு கப்பல் வருப்போதே கேதுருக்களின் நறுமணம் இன்ப நுகர்வாயிருக்கும். காடுகளினூடே ஊற்றுத் தண்ணீரானது கேதுரு மரங்களின் வேர்களினால் சுதந்தரிக்கப்பட்டு பருகுவதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இம்மலைச்சரிவுகளில் மக்கள் வசிக்க விரும்புவர்.
கேதுரு மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் நீண்ட காலம் உழைக்கும். பிசின் தைல வாசனையால் பூச்சிகள் சேதப்படுத்துவதில்லை. சாலமோனின் ரதம் கேதுரு மரத்தால் செய்யப்பட்டது.(உன் 3:9)
சாலமோன் ஞானி இம்மரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்:
“என் மணவாளியே, உன் வஸ்திரங்களின் வாசனை லிபனோனின் வாசனைக்கு ஒப்பாயிருக்கிறது” (உன் 4:11).
பிரிட்டனிலுள்ள பொருட்காட்சி நிலையத்தில் ஒரு கேதுரு மரத்துண்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தட்பவெட்ப மாற்றங்களால் லிபனோனில் கேதுரு மரங்கள் அருகி வருகின்றன.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum