தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உயிலின் கதை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:42 pm
 
சொத்தை வைத்திருப்பவர், தன் வாழ்நாளுக்குப்பின், தன்னைச் சார்ந்தவருக்கு அந்தச் சொத்தை விட்டுச் செல்ல வேண்டும் என எல்லா மதங்களுமே ஒட்டு மொத்தமாக ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கின்றன. தன்னைச் சார்ந்தவரான தன் வாரிசுகள் அல்லாதவருக்கு சொத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை தான் உயிருடன் இருக்கும்போதே, தன் கைப்பட தானமாகக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். அவரின் வாழ்நாளுக்குப்பின் அதைக் கொடுப்பதாகச் சொன்னால், இவரின் வாழ்நாளுக்குப்பின், அதை யார் நிறைவேற்றுவார்கள்? ஒரு தந்தை, அவரின் மகனுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தை, அவரின் வாழ்நாளுக்குப்பின், அதை வேறு ஒருவருக்கு கொடுத்துவிடு என்று கட்டளை இட்டிருந்தால், அந்த மகன் அவ்வாறு நடப்பானா என்பதே சந்தேகமே! தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது மகனின் கடமை என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றன. தந்தையின் கடனை, அவரின் இறப்புக்குப்பின், அவரின் மகன்தான் தீர்க்க வேண்டும் என்பதும் மதங்கள் வலியுறுத்தி சொல்லி வந்துள்ளன. இப்போது வந்துள்ள சட்டங்கள், அப்படி கொடுக்கவேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை என்று சொல்லிவிட்டது. ஒருவர் பட்ட கடனை, அவரே செலுத்த வேண்டும், அல்லது அவரின் சொத்துக்களிலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதிகளாக்கப் பட்டுள்ளது.

ஒருவரின் இறப்புக்குப்பின் அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது என்பது மரபு சார்ந்த விஷயம். இறந்தவர் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார். பேப்பர்கள், எழுத்துக்கள் இல்லாத காலத்தில், வார்த்தைகளுக்கு மரியாதையும், மதிப்பும் இருந்த காலத்தில் இதை ஒரு கடமையாகவும், இதை மீறுவது என்பது இறந்தவருக்குச் செய்த துரோகமாகவும் கருதப்பட்டது. எனவே பழைய காலத்தில், இவ்வாறு ஒருவரின் கடைசி ஆசைகளை நம்பிக்கையானவர்களிடம் சொல்லிச் செல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. பேப்பர்கள் வந்தபின், எழுதுவது சுலபமான பின்னர், இவ்வாறு சொல்லிச் சென்ற கடைசி ஆசைகளுக்கு ”உயில்” எனப் பெயர் வைத்துக் கொண்டனர். இந்த உயிலுக்கும் உயிருக்கும் சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை, ஆனாலும் உயிருக்கும் உயிலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதாகவே நம்பப்படுகிறது. உயிர் போனவுடன் அவரின் இந்த உலகச் சொத்துக்களை யார் யார் எப்படி எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவரின் வேறு சில வேலைகளை/ கடமைகளை யார் எப்படி நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் தனது கடைசி ஆசையாக சொல்லிச் செல்கிறார். 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:42 pm
சிலபேர், ஒருவரின் கண்ணின் முன்னால் நல்லவர்போல நடிப்பார்கள். அவர் உயிருடன் இல்லையென்றால், இவரின் உண்மைத்தன்மையை வெளியே காண்பிப்பார். அப்படிப்பட்டவர்களை வாழ்நாளில் அடையாளம் காண்பதும் கடினம்தான். எனவே ஒருவரின் வாழ்நாளில் அவருக்கு நம்பிக்கையுடன் நடந்தவருக்கு அவரின் சொத்துக்களை பங்கீடு செய்து, (கொடுக்காமல்) சொல்லிவிட்டுப் போவது என்பது இயற்கையான குணம்தான். அவ்வாறு பங்கீட்டு செய்து கொடுக்கவில்லை என்றால், அது அவர் சார்ந்த மதங்கள் எப்படிச் சொல்கிறதோ அதன்படி அவரின் வாரிசுகளுக்குப் போய்விடும். அவரவரின் மதச்சட்டம் உள்ளே புகுந்துவிடும். இந்த சட்டம் உள்ளே வராமல், அவரின் விருப்பப்படி சொத்து பங்கீடு ஆகவேண்டும் என்றால், இந்த கடைசி ஆசை என்னும் “உயிலையே” அவர் எழுதி வைத்து விட்டுச் செல்ல வேண்டும். எனவேதான் உயிலுக்கும் உயிருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. இயல்பாக ஒருவர் வாழ்ந்து, சொத்துக்களைச் சேர்த்து, அனுபவித்துவிட்டு, மீதியை விட்டுவிட்டு இறந்துவிடுகிறார். இறந்தவர் சொத்துக்கள் யார் யாருக்குப் போகவேண்டும் என்பதில் அவரின் ரத்த உறவுகளில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். ஏற்கனவே அவ்வாறு சண்டைகள் நடந்திருக்கும்போல, அதனால்தான், மதங்கள் உள்ளே புகுந்து இந்த சட்டாம்பிள்ளை வேலைகளைச் செய்து, ஒரு பொதுக்கருத்தை உருவாக்கி அதைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி, அது காலப்போக்கில் சட்டங்களாக ஆகிவிட்டிருக்க வேண்டும். சண்டை வராமல் சட்டங்கள் வர வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு வாழும் கூட்டத்துக்குள் சண்டை வந்தால் அங்கிருக்கும் பெரியவரை பார்த்து குறைகளை கூறி வழிதேடிக் கொள்வோம். அப்படிப்பட்ட பெரியவர்கள் மதம் சார்ந்த கூட்டங்களில், சாமியார்கள், பாதிரியார்கள், இந்த வேலைகளைச் சரியாக செய்து வந்திருக்கிறார்கள். ரோமானியர்கள் இதில் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் குறைகளை பாதிரியார்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இறைவனின் நேரடித்தூதர் போப் ஆண்டவர். எனவே மக்களும், மன்னர்களுமே அவரிடம் ஆலோசனை கேட்பதும், அவரின் உத்தரவை மதிப்பதும் காலம் காலமாக நடந்து கொண்டிருந்தது. இவரின் உத்தரவுகளும் ஆலோசனைகளும் காலப்போக்கில் நடைமுறை சட்டங்களாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் ரோமன் போப் சொன்னதே சட்டம். பின்னர், போப்பை எதிர்த்த இங்கிலாந்து மன்னர்கள் தங்களுக்கென பல விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவைகள்தான் பின்னர் எல்லாக் காலனி நாடுகளும் பின்பற்றும் சட்டங்களாக ஆகின. பரந்த இந்தியாவும் (இப்போதைய இந்தியா, பர்மா, பாகிஸ்தான், இலங்கை) ஆங்கிலேயர்களின் சட்டத்தை கொண்டே இந்திய மக்கள் ஆளப்பட்டனர். எனவே இந்தியர்களின் சட்டங்களுக்கு முன்னோடி ஆங்கிலேயர்களின் சட்டங்களே. 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:42 pm
இந்தியாவின் தர்ம சாஸ்திரங்கள் இத்தகைய உயில்களைப்பற்றி அந்த சாஸ்திரங்களில் ஏதும் சொல்லவில்லையா? ஒருசில தர்ம சாஸ்திர பண்டிதர்கள் இதைப்பற்றி சொல்லி உள்ளார்களாம். கட்டாயனா என்ற பண்டிதர், “ஒரு மனிதன், தான் ஆரோக்கியத்துடன் இருக்கும்போதோ, அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதோ, ஏதாவது தர்ம காரியத்துக்காக ஏதாவது கொடுக்கச் சொல்லி இருந்தால், அதை அவன் வாழ்நாளிலேயே மதித்து கொடுத்துவிட வேண்டும்; ஒருவேளை அவ்வாறு கொடுக்க முடியாமல் இறந்துவிட்டால், அவரின் மகன் கண்டிப்பாக அதை நிறைவேற்ற கடமைப்பட்டவன்” என்று தெளிவாகச் சொல்லி உள்ளாராம். ஹரிதா என்ற பண்டிதர், “வாய்மொழியில் சொல்லிய உறுதிமொழியை (சத்திய சொற்களை) செய்யாமல் அல்லது செயல்படுத்தாமல் இருந்தால் அது இந்த உலகத்திலும், மேல்-உலகத்திலும் பட்ட “மனச்சாட்சியின் கடனே” என்று கூறுகிறார்.
ஒருவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுத்துவிடலாமா அல்லது எந்த அளவு தன் சொத்தைத் தானமாக கொடுக்கலாம் என்றும், தன்னை நம்பி உள்ளவர்களுக்கு எவ்வளவு விட்டுச் செல்லவேண்டும் என்றும் இந்துமத தர்ம சாஸ்திரத்தின் முன்னோடியான யக்ஞவால்கியர் சொல்கிறார், “தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பாதகம் இல்லாமல் சொத்தை வைத்துவிட்டு, மீதியை தானமாகக் கொடுப்பதில் தவறில்லை” என்கிறார். “A gift made without prejudice to the family is valid.”
ஆனால், இப்படியெல்லாம் தர்ம சாஸ்திரங்கள் சொன்னாலும், உயில் என்ற வார்த்தையை கொண்டு சொல்லப்படவில்லை. எனவே உயில் என்பது சட்டபூர்வமாக இந்து மதத்தில் வழக்கத்தில் இல்லையென்றே எடுத்துக் கொள்ளலாம்.
பரந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்கிறார்கள். இந்தியாவில் மதங்களும் அதன் மக்களும் அவரவர் மதக் கோட்பாட்டுப்படி வாழ்கிறார்கள். சொத்துக்களின் உரிமைகளும் அவ்வாறே பங்கு போட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்துக்கள் உயில் எழுதுவது பழக்கத்தில் இல்லையாம். ஒரு சில ஜமின்தார்கள் உயில் எழுதுவார்களாம். மதராஸ் பிரசிடென்சி மாகாணத்தில் இந்த உயில் எழுதும் பழக்கம் இல்லையாம். ஆனால் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் உயில் எழுதுவார்களாம். இந்தியாவில் பெங்கால் பிரசிடென்சி மாகாணத்தில் முதன் முதலில் ஒரு உயில் சாசனம் எழுதப்பட்டது.
பெங்காலில் நூடியா என்னும் பகுதியின் ராஜா அவர். அவருக்கு நான்கு மகன்கள். மன்னர்கள் எப்போதும் தன் இராஜாங்கத்தை மூத்த மகனுக்கே கொடுத்து முடிசூட்டுவார்கள். இந்த இந்து மன்னர், நிலங்களில் உள்ள ஜமின்தாரி உரிமைகளை, எல்லா மகன்களுக்கும் கொடுக்காமல், அனைத்தையும் அவரின் மூத்த மகனுக்கே உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். அப்போது இந்துக்கள் உயில் எழுதும் வழக்கமில்லையே; அப்படியென்றால் இந்த உயில் எப்படி செல்லும் என்ற கேள்வி எழுந்து அது வழக்காக கோர்ட்டுக்குப் போகிறது. இந்தியாவில் இந்துக்கள் உயில் எழுதலாம்.
சாஸ்திலங்களும் ஒப்புக் கொள்கின்றன. மற்ற மகன்களை விட்டுவிட்டு ஒரே மகனுக்கு சொத்தைக் கொடுக்கலாம் என்று கோர்ட் அந்த உயிலைச் சட்டபூர்வமாக்கியது. இந்த வழக்கு நடந்த காலம் 1772-ல். அன்றுமுதல் பெங்கால் பிரசிடென்சி பகுதியில் இந்துக்கள் உயில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போது பெங்கால் பகுதியில் இந்துமதத்தின் இரண்டு கோட்பாடுகளான “மிதாக்ஷரா மற்றும் தயாபாக” இவற்றில் இரண்டாவது கோட்பாடான தயாபாக கோட்பாடு நடைமுறையில் இருந்தது. தயாபாக கோட்பாட்டின்படி, பூர்வீகச் சொத்துக்களை மூத்த மகனுக்கே கொடுத்துவிடலாம், மற்ற மகன்களுக்கு கொடுக்க தேவையில்லை என்ற நடைமுறை இருந்தது. அதாவது, இறந்த மூதாதையர்களுக்கு மூத்த மகனே “பிண்டம்” (பித்ரு ஆகாரம்) கொடுக்க கடமைப்பட்டவன் என்றும் அவனே மூதாதையர் சொத்தையும் அடைவான் என்றும் தயாபாக கோட்பாடு.
இதற்கு நேர் எதிரான கோட்பாடு மிதாக்ஷர (மிதாச்சர) கோட்பாடு. இதன்படி, மூதாதையருக்கு “பிண்டம்” கொடுப்பது எல்லா ஆண்குழந்தைகளுமே. எனவே மூதாதையர் சொத்துக்களில் எல்லா ஆண் குழந்தைகளுக்கும் சம பங்கு உண்டு என மிதாஷர கொள்கை. இந்த மிதாஷர கொள்கையானது, பெங்கால் தவிர மற்ற இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்த காலம் அது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:43 pm
பின்னர் ஏற்பட்ட பிரைவி கவுன்சில் வழக்குகளில், இந்தியாவில் பெங்கால் பகுதியில் வசிக்கும் தயாபாக இந்துக்கள் தனது தனிச் சொத்துக்களை (பூர்வீகம் அல்லாத தானே சம்பாதித்த சொத்துக்களை) உயில் எழுதி அவர் விருப்பம் போல கொடுக்கலாம் என்று தீர்ப்பளித்து. அப்போது இந்த தீர்ப்பு இந்தியாவில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.


அப்போது தென்னிந்தியாவில், குறிப்பாக மதராஸ் பிரசிடென்சியில் உயில் எழுதுவது என்பது வழக்கத்தில் வேறு விதமாக இருந்தது. மகன்களுக்கு கிடைக்கும் பூர்வீகச் சொத்தை ஒருவர் வேறு யாருக்கும் உயில் எழுத முடியாது என்ற நிலை. தனிச் சொத்துக்கள் ஏதாவது இருந்தால் அதை அவர் தானமாக யாருக்கேனும் கொடுக்கலாம். குடும்பச் சொத்துக்களை, மகன்களைத்தவிர, வேறு யாருக்கும் உயிலாகவோ தானமாகவோ கொடுக்க முடியாத நிலை. ஆனால் ஒரு வழக்கில் பிரைவி கவுன்சில் ஒரு தீர்ப்பைத் தருகிறது. அதன்படி, ஆண்வாரிசு இல்லாத ஒருவரின் அளவில்லாச் சொத்துக்களை, அவரின் மனைவிக்கும் மகளுக்கும் போதிய வசதி செய்துவிட்டு, மீதிச் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம் என்றும் தீர்ப்புச் சொன்னது. இது பூர்வீகச் சொத்துக்களில் வாரிசுகளுக்கு வசதி செய்துவிட்டால் மீதிச் சொத்தை உயில் எழுதலாம் என்ற அடிப்படையில் தீர்ப்பு இருக்கிறது எனக் கருதினர். 

இதன்பின்னர், மதராஸ் பிரசிடென்சி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது, அதன்பெயர் 1892-ம் வருடத்தின் மெட்றாஸ் ரெகுலேஷன் சட்டம் (Madras Regulation V of 1892). இதன்படி ஒரு இந்து பூர்வீகச் சொத்துக்களைப் பொறுத்து, மகன்களுக்கு எதிராக, ஒரு உயில் எழுதிவிட முடியாது. தனிச் சொத்துக்களில் வேண்டுமானால், மகன்கள் இல்லாதபோது, மனைவி மகள்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்து வைத்துவிட்டு மீதிச் சொத்தை உயில்மூலம் வழங்கலாம் என்கிறது அந்த சட்டம். அதாவது, ஒருவர் தன்னால் மட்டுமே விற்பனை செய்யும் அதிகாரம் உள்ள சொத்துக்களை மட்டும் உயிலில் கொடுக்கலாம். மற்ற சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதிவைத்துவிட முடியாது என்று மதராஸ், பாம்பே, கல்கத்தா பிரசிடென்சியின் அப்போதைய சட்ட நிலவரம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:43 pm
முகமதியர்கள் உயில் எழுதலாமா?
இந்துக்கள், தானே தானம் கொடுக்கும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டும் உயில் எழுதலாம் என்று அனுமதி உண்டு. அதாவது, இந்துக்களின் பூர்வீகச் சொத்துக்களில் உயில் எழுத முடியாது. முகமதிய சமுதாயத்தில் உயில் என்பதை “வாசியத்” (wasiat) என்று கூறுகிறார்கள். அதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு சொத்தை மட்டும் இந்த வாசியத் மூலம் உயில் மூலம் கொடுக்கலாம் என்றும், பெரும்பகுதியை தன் வாரிசுகளுக்கு மட்டுமே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், அதை உயில் மூலம் வெளியாருக்கு கொடுக்க முடியாது என்றும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதாம்.

இந்துக்களின் ஆரம்பகால உயில்கள்:
ஆரம்ப காலங்களில் இந்துக்களின் உயில்கள் “எழுதப்பட்டிருக்க வேண்டும்” என்ற அவசியம் இல்லை. அப்படியே காகிதத்தில் எழுதியிருந்தாலும், அதில் அந்த உயிலை எழுதியவர் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையாம். அப்படியே கையெழுத்துப் போட்டிருந்தாலும் அதை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் போட்டிருக்க வேண்டும் என்ற சட்ட கட்டாயமும் இல்லையாம். எழுதாத உயில்களை அல்லது வாய்மொழியாக சொல்லிவிட்டுப்போன உயில்களை “நன்குபேட்டிவ் உயில்” அதாவது வாய்மொழி உயில் என்று சொல்கிறார்கள். போரில் ஈடுபட்ட வீரர் ஒருவர் தன் இரண்டு நண்பர்களிடம் தன் ஆசை என்ன என்று சொல்லிவிட்டு அந்த போரில் இறந்திருந்தால் அது நன்குபேட்டிவ் உயில் வகையைச் சேரும். இது நாட்டில் இருக்கும் மக்களுக்கும் (போர்ப்படையில் இல்லாத மக்களுக்கும்) இந்த நன்குபேட்டிவ் உயில் செல்லும் என்று அப்போது நடைமுறையில் இருந்ததால், பலர் இதுதான் இறந்தவரின் நன்குபேட்டிவ் உயில் என்று சொல்லிக் கொண்டார்கள். குழப்பம்தான் மிஞ்சியது. எனவே இதற்கு ஒரு பொதுவான சட்டம் தேவைப்பட்டது. 

அதுதான் இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 (ஆக்ட் 10 ஆப் 1865). அந்தச் சட்டம் 1870-ல் அமலுக்கு வந்தது. அதன்படி உயில் எழுதி விட்டுப்போன சொத்துக்கள், உயில் எழுதாமல் விட்டுப்போன சொத்துக்கள் இவைகளுக்கு இந்த சட்டம் சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஏற்படுத்தியது. உயில் எழுதாமல் ஒருவர் சொத்தை விட்டுவிட்டுப் போனால், அவ்வாறு இறந்தவரை ‘died intestate’ “உயில் இல்லாமல் இறந்தவர்” என்று அழைக்கின்றனர். உயில் எழுதிவைத்துவிட்டு இறந்தவரை Testator“  உயிலுடன் இறந்தவர்” என்கின்றனர்.
இந்தச் சட்டமானது, ஆரம்பத்தில் இந்தியாவில் வசிக்கும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், பார்சிக்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும்படி ஏற்படுத்தப்பட்டது. அதாவது இந்தச் சட்டம், இந்துக்கள், புத்தமதத்தினர், ஜைனர்கள், முகமதியர்கள் ஆகியோருக்கு இந்த இந்தியன் சக்சஷன் ஆக்ட் 1865 பொருந்தாது. இது இந்துக்களுக்கு பொருந்தாது என்றதால், இந்துக்கள் எழுதும் உயிலுக்கு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தனர். 

அதன்பெயர் இந்து உயில்கள் சட்டம் 1870. (The Hindu Wills Act 1870). இதன்படி, 1870ம் வருடம் செப்டம்பர் 1-ந்தேதி முதல் எழுதப்படும் இந்துக்களின் உயில்கள் இந்தச் சட்டப்படியே இருக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டது. அதுவும் எல்லா பகுதிகளுக்கும் செல்லாது. மதராஸ் நகரம், பம்பாய் நகரம், கல்கத்தா நகரம் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே செல்லும். மதராஸ் நகரத்தை விட்டு வேறு ஊர்களில் இந்தச் சட்டத்துக்கு வேலையில்லை. இதன்படி, மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து உயில் எழுதி இருந்தாலும், மதராஸ் நகருக்கு வெளியே உயில் எழுதப்பட்டிருந்து, அந்த உயிலில் மதராஸ் நகரத்திலுள்ள சொத்து சொல்லப்பட்டிருந்தாலும் இந்த சட்டம் பொருந்தும்படி ஏற்படுத்தப் பட்டது. 

இந்த சட்டம் இந்து மதச் சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்டது. அதாவது, ஒரு இந்து, தான் உயிருடன் இருக்கும்போது, விற்பனை செய்யும் உரிமையுள்ள சொத்துக்களை மட்டுமே உயில் எழுத முடியும். பூர்வீகச் சொத்தை தனிமனிதனாக இவரே விற்க முடியாது சொத்தானது. இந்த மதராஸ் நகரில் உள்ள சொத்துக்களுக்கு எழுதும் உயில்களுக்கு சில சட்டக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருந்தது. அதன்படி, உயில் எழுதியவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துச் செய்திருக்க வேண்டும். சாட்சிகள் என்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. இந்த இந்து-உயில் சட்டம் 1870 வருவதற்கு முன்னர் எழுதிய உயில்களுக்கு எழுத்துபூர்வமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை; வாய்மொழி உயிலே போதும் என்றிருந்தது; அப்படியே எழுதப்பட்டிருந்தாலும், அதற்கு சாட்சிகள் முன்னிலையில் அட்டெஸ்டேஷன் attestation என்னும் இரண்டு சாட்சிகளின் கையெழுத்தும் தேவையில்லை. 

ஆக, மதராஸ் நகருக்குள் இருக்கும் சொத்துக்கு எழுதிய உயிலுக்கு, எழுதியவர் கட்டாயம் கையெழுத்துப் போட வேண்டும், சாட்சிகளும் அவர் முன்னிலையிலேயே கட்டாயம் கையெழுத்துப் போடவேண்டும். மதராஸ் நகருக்கு வெளியே உள்ள சொத்தை உயில் எழுதியவர் அதில் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியம் இல்லை என்றும், வாய்மொழியாகக்கூட உயில் ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சட்டமாக இருந்தது. 

நன்றி: http://gblawfirm.blogspot.in
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Wed Jan 20, 2016 10:47 pm
மியூச்சுவல் உயில்: Mutual Will
இது ஒரு வித்தியாசமான உயில். உதாரணம் சொல்லித்தான் விளக்க முடியும்; கணவன் மனைவி இருவரும் தனித்தனியே சொத்து வைத்திருக்கிறார்கள்; இவரும் ஒருவருக்கு ஒருவர் உயில் எழுதி வைத்துவிட விரும்புகிறார்கள்; அதாவது கணவன் இறந்தால் கணவனின் சொத்து மனைவிக்கு போய் சேரும்; அதே உயிலில் மனைவியும் உயில் எழுதி, அதன்படி மனைவி இறந்தால் மனைவியின் சொத்து கணவனுக்குப் போய் சேரும் என்று ஒருவருக்கொருவர் உயில் எழுதி ஒரே உயில் பத்திரத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள்.

இப்படி எழுதிக் கொள்வதில் பிரச்சனை ஒன்றும் இல்லை; ஆனால், அந்த மியூச்சுவல் உயிலில், அவர்கள் இருவரும் இறந்தபின்னர் இருவரின் சொத்தும் யாருக்குச் செல்லவேண்டும் என்று எழுதியிருந்தால், அப்போது ஒரு சட்ட சிக்கல் வந்துவிடும்.

உதாரணமாக, கணவன் முதலில் இறக்கிறார். உயில்படி கணவன் சொத்து மனைவிக்கு வந்துவிடுகிறது. கணவன் சொத்தையும் மனைவி தனது சொத்தையும் சேர்த்து அனுபவித்து வருகிறார். இப்போது, மனைவி ஏற்கனவே எழுதிவைத்த மியூச்சுவல் உயிலை, கணவன்தான் இல்லையே என்று ரத்து செய்ய முடியாது. இது கிட்டத்தட்ட ஏமாற்றுவதுபோல் ஆகும் என்று சட்டம் சொல்கிறது. மனைவி அப்படி அந்த உயிலை ரத்து செய்தால் அந்த ரத்து செல்லாது.


இரண்டு பேரும் உயிரோடு இருக்கும் காலத்தில் இருவருமே சேர்ந்து அந்த மியூச்சுவல் உயிலை ரத்து செய்து கொள்ளலாம்.
Sponsored content

உயிலின் கதை Empty Re: உயிலின் கதை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum