Gavel என்னும் நீதிபதியின் சுத்தி - பற்றி அறிவோம்
Wed Jan 20, 2016 10:31 pm
Gavel என்னும் நீதிபதியின் சுத்தி
பழைய காலக் கோர்ட்டுகளில் நீதிபதிகள் "சுத்தி" என்னும் "சுத்தியல்" வைத்திருந்தார்கள். அந்த சுத்தியல் மரக் கட்டையால் செய்யப்பட்டதாம். அதை அடிப்பதற்காக கீழே மரத்தாலான கடினமான தட்டும் வைத்திருப்பார்களாம். கோர்ட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்ப இதை நீதிபதிகள் அடிப்பார்களாம். வாதம் நடக்கும்போது, ஒப்புக்கொள்ளவில்லை என்று காட்டுவதற்கு சுத்தியை அடிப்பார்களாம். மறுப்பை தெரிவிக்க இந்த சுத்தி உபயோகமாகிறது. பழம்காலத்தில் பிரிட்டீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பழக்கம் இது. காரணம் தெரியவில்லை.
இப்போது இந்திய கோர்ட்டுகளில் இது இல்லை. ஒருவேளை, பிரிட்டீஸ் நீதிநிர்வாகத்தில் இது இருந்ததா என்றும் தெரியவில்லை. இப்போதுள்ள நீதிபதிகள், கோர்ட்டின் உதவியாளரையோ,சுருக்கெழுத்தாளரையோ கூப்பிட வேண்டும் என்றால், நீதிபதி தன் கையில் உள்ள பென்சிலை லேசாகத் தட்டுவார். பக்கத்திலேயே இருக்கும் இவர் உடனே தயாராகிவிடுவார்கள். இந்த சுத்தியலை Gavelஎன்கிறார்கள். கோர்ட்டுகளில் மட்டுமல்ல, ஏலம் போடும் இடத்திலும் இந்த சுத்தி இருந்ததாம். பின்னர் இது மணி ஆகிவிட்டது.
அமெரிக்க செனட் சபையில் இன்னும் இந்த Gavel என்னும் சுத்தி இருக்கிறதாம். ஆனால் மரத்தினால் அல்ல. தந்தத்தால் (தங்கம் அல்ல) செய்யப்பட்டதாம். அதை செய்து கொடுத்தது இந்தியாவாம். அமெரிக்க அரசு இந்திய அரசை கேட்டு கைப்பிடி இல்லாத தந்தத்தில் கேவல் செய்து வைத்துள்ளார்களாம். ஆனால்,அமெரிக்க மக்கள் சபை என்னும் எம்.பி.கள் சபையில் இன்னும் மரத்தால் செய்த சுத்தியைதான் துனை ஜனாதிபதி உபயோகிக்கிறார்., சில நேரங்களில் கடுமையாக அந்த சுத்தியை அடிக்க வேண்டிவருமாம். எத்தனையோ முறை அது உடைந்தும் விட்டதாம். உடனே வேறு சுத்தியை எடுத்துக் கொள்வார்களாம்.
இப்போது எந்த நாட்டிலும் கோர்ட்டில் சுத்தி இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை ஸ்காட்லாந்து,அயர்லாந்து நீதிமன்றங்களில் இதை இன்னும் உபயோகப் படுத்துகிறார்களோ என்று தெரியவில்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum