எதை முதலில் தடை செய்யலாம்?
Tue Jan 19, 2016 5:38 am
எதை முதலில் தடை செய்யலாம் ஜாதி வெறியர்களே மத வெறியர்களே பதில் சொல்
காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ஜாதி வெறியன் *****ஸ் ராம்சேனா, இ**** ணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி?
நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்?
மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.
இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம்.
இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.
கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.
இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?
வடநாடு இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?
பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?
காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்?
கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.
நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா?
நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர்.
இத்தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல்வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?
இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக்காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சிகள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே!
இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!
நன்றி: கோபெரு தேவி - மும்பை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum