யோசுவாவின் தைரியம்
Mon Jan 11, 2016 7:10 am
பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். யோசுவா 5:13.
ஒரு படை அதிகாரிக்கு குறிப்பிட்ட விதிமுறைகள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு யுத்தத்திற்கு முன்பும் புதிய விதிமுறைகளைப் பெறவும் வேண்டும், கொடுக்கவும் வேண்டும். இஸ்ரவேல் மக்களின் புதிய தலைவராகிய யோசுவா இந்தப் பாடத்தைப் படிக்க வேண்டியதிருந்தது. தேவனுடைய ஜனங்கள் வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகள் கழித்தபின்பு, தேவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு, இஸ்ரவேல் மக்களை தலைமை தாங்கி நடத்திச்செல்ல தேவன் யோசுவாவை தெரிந்தெடுத்தார்.
கானான் தேசத்தில் அவர்கள் முதலாவது சந்தித்த அரணிப்பான இடம் எரிகோவாகும். யுத்தத்திற்கு முன்பு யோசுவா, “ கர்த்தருடைய சேனையின் அதிபதியை உருவின பட்டயத்துடன் பார்கின்றார். உடனே அவர், நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்கின்றார். இந்த கேள்வி மிகவும் சரியான கேள்வியாகும். ஏனென்றால் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தில் தற்பொழுது தேவனை அறியாத ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருகின்றார்கள். இப்படிப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் உருவின பட்டயத்துடன் வருகின்றார்.
முதலாவது உருவின பட்டயத்துடன் வருகின்ற ஒருவரைப் பார்த்து யோசுவா பயப்படவில்லை. இரண்டாவது நிச்சயமாக யோசுவா வெறும் கையை வீசிக்கொண்டு சென்றிருக்க மாட்டார். அவரும் தனது கையில் போர்வாளை எடுத்துக் கொண்டு தான் செண்டிருப்பார். இயேசுவுக்கு பிரியமானவர்களே, நாம் வாழ்கின்ற இந்த உலகமானது தேவனுடைய பிள்ளைகளுக்கு சொந்தமாக வாக்களிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது எரிகோ போன்ற துன்மார்க்கரின் பிடியில் உள்ளது. இப்படிப்பட்ட உலகத்திலிருந்து வருகின்ற எந்த காரியத்தையும் பார்த்து நாமும் யோசுவா கேட்டதைப் போல, “நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ” என்று கேட்க்க வேண்டும்.
யோசுவாவைப் போல நாமும் பயப்படாமல் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர் எப்பொழுதும் தனது கையில் போர்வாளை வைத்திருந்ததைப் போல நாமும் ஜெபத்தையும், வேத வாசிப்பையும் தொடர்ந்து செய்து தேவனை சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படிசெய்யும் பொழுது யோசுவாவைப் போல நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வெற்றியைக் கண்டிடலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்
விசுவாசத்தில் வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum