தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கையிலே பெலன்! Counter

Go down
avatar
CHARLES MSK
புதியவர்
புதியவர்
Posts : 5
Join date : 09/01/2016

கையிலே பெலன்! Empty கையிலே பெலன்!

on Sun Jan 10, 2016 12:44 am
Message reputation : 100% (1 vote)
கையிலே பெலன்!

“அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்றார்” (மாற். 3:3).

சூம்பின கையையுடைய மனுஷனை, இயேசு குணமாக்கினதை, மத்தேயு 12-ம் அதிகாரத்திலும், மாற்கு 3-ம் அதிகாரத்திலும், லூக்கா 6-ம் அதிகாரத்திலும் வாசிக்கலாம். 

அவனுடைய கை சூம்பி போனபடியால், ஒரு வேலையையும் செய்ய அவனால் முடிந்திருக்காது. 

அநேகருக்கு இளம்பிள்ளை வாதத்தால் கைகள் சூம்பி போனதைப்
 பார்த்திருக்கிறேன். அதை, “போலியோ” என்பார்கள்.

அவன் இப்படிப்பட்ட நிலைமையிலும், கர்த்தர் மேல் கசந்துக்கொள்ளாமல், ஆராதிப்பதற்காக தேவாலயத்திற்கு வந்திருந்தான்.

 ஒருகூட்டம் ஜனங்கள், அவன்மேல் 
பரிதாபப்பட்டிருக்கலாம். இன்னொரு கூட்டத்தார், “ஓய்வுநாளில் இயேசு என்ன செய்வாரோ?” என்று அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி காத்திருந்திருக்கக்கூடும். 

இயேசு, அந்த ஏழாம் நாளை ஆசரிக்கிறவர்களைக் குறித்து பயப்பட்டு, அற்புதம் செய்யாமல் 
இருந்துவிடவில்லை. அவர் நன்மை செய்வதற்காகவே பூமிக்கு வந்தவர் (அப். 10:38). 

ஏழு நாட்களையும் உண்டாக்கினவர் அவர்தான். ஓய்வு நாளுக்கும் அவர் ஆண்டவராக இருக்கிறார்.
ஆகவே, அந்த ஓய்வு நாள் ஆசரிப்புக்காரரிடத்தில், கிறிஸ்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

 “ஓய்வு நாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள். அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம், அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான். அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று” (மாற். 3:5).

அவன் கை சொஸ்தமானதைக் குறித்து, ஏழாம் நாள் ஆசரிப்புக்காரர்கள் சந்தோஷப்படவில்லை. இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள் (மாற். 3:6).

 தம்முடைய பிள்ளைகளுக்காக நன்மை செய்வதால், மரணமே ஏற்படுமானாலும், சரி, இயேசு அதைக்குறித்து பயப்படவில்லை. அவர் தம்முடைய பிள்ளைகளை பெலப்படுத்திக் கொண்டேயிருந்தார். 
அற்புத சுகம் 
கொடுத்துக்கொண்டே இருந்தார்.

“சூம்பின கை” என்றால், அதற்கு ஆவிக்குரிய என்ன அர்த்தம்? 

கர்த்தரு டைய ஊழியத்திற்கு காணிக்கையையும், தசமபாகத்தையும் கொடுக்கத் தவறி, தங்களுக்கென்று பதுக்கிக்கொள்ளு
கிறவர்கள்தான், இந்த சூம்பின கையையுடையவர்கள். 

சுகமளிக்க முடியாதபடி, அற்புதம் செய்ய முடியாதபடி, கர்த்தருடைய கரம் குறுகிப் போகவில்லை. கர்த்தர் உங்களுடைய கைகளை பெலப்படுத்தி, சுகமளிக்கிற வல்லமையை தர விரும்புகிறார். 

பவுலின் கைகளைக் கொண்டு, விசேஷித்த அற்புதங்களைச் செய்தவர், உங்களுடைய கைகளைப் பலப்படுத்தி, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய பிரியப்படுகிறார். 

நீங்கள் மற்றவர் களுக்கு, தாராளமாய் ஆசீர்வாதங்களை அள்ளிக் கொடுங்கள்.

வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார் (மல். 3:10). 

இன்றைக்கு, இயேசுவின் நாமத்தில் உங்களுடைய கைகளில் தேவபெலன் இறங்கி வரட்டும். கைகளை நீட்டுங்கள். கர்த்தருடைய மகிமையான பணிக்கு உதாரத்துவமாய் கொடுங்கள்.

நினைவிற்கு:- 

“இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவு மில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை”
 (ஏசா. 59:1).

————————————
————————————
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கையிலே பெலன்! Empty Re: கையிலே பெலன்!

on Sun Jan 10, 2016 9:13 am
கொடுப்பதைப்பற்றிய நல்ல தேவ வார்த்தைக்கு நன்றி Like a Star @ heaven Like a Star @ heaven Like a Star @ heaven கையிலே பெலன்! 1535429689
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum