நோயாளிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து பிரார்த்தனை செய்தால், நோய்கள் குணமாகும்
Tue Mar 12, 2013 11:29 am
வாஷிங்டன்:
நோயாளிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து பிரார்த்தனை செய்தால், நோய்கள்
குணமாகும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரார்த்தனைகளால்,
நோய்கள் குணமாகுமா என்பது குறித்து,
மருத்துவர்கள், மத குருமார்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று
அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில், நோயாளிக்கு நெருக்கமாகவும், அவரது உடலை
தொட்டபடியும் பிரார்த்தனை செய்தால், அந்த நோயாளியின் பிரச்னைகள் தீரும்
என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, இண்டியானா பல்கலைக்கழக
இறையியல் பேராசிரியர் கேண்டி பிரவுன் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.
மொசாம்பிக் நாட்டில் உள்ள சில கிராமங்களை சேர்ந்த, பார்வை குறைபாடுகள்
உள்ள 11 பேரும், காது கேளாமை குறைபாடுகளை கொண்டிருந்த 14 பேரும் இந்த
ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெந்தேகோஸ்தே பிரிவு கிறிஸ்தவ
பிரார்த்தனை குழுக்கள் அந்த நோயாளிகளுக்காக, பிரார்த்தனை செய்தனர். இந்த
பிரார்த்தனைகளுக்கு பின்னர் அவர்களை ஆய்வு செய்த போது, அவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு, உடல் நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு
முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. முற்றிலும் காது கேளாமல் இருந்த
இரண்டு பேருக்கு, 50 டெசிபல் அளவுக்கான ஒலியை கேட்கும் திறன்
ஏற்பட்டிருந்தது. மேலும், பார்வையின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த 3
பேருக்கு, பார்வை தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விரிவான
அறிக்கை அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளதாக, ஆய்வு குழுவினர்
தெரிவித்துள்ளனர்.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=62337
நன்றி: முகநூல் - வனாந்திர சத்தம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum