மனைவியா? மக்களா?
Thu Dec 17, 2015 9:54 am
இலங்கைக்கு சென்று தன் மனைவியை காப்பாற்ற வேண்டிய சூழல் அந்த மன்னனுக்கு ஆனால்? அந்த கடலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை, கடலை கடக்க வழியும் இல்லை!!! பிறகு பல வருடம் தன்னுடைய ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் மூலம் பாறைகளை உடைத்து கடலில் போட்டு ஒரு பாலம் போல உருவாக்கி அதன் பிறகு சென்று தன் மனைவியை காப்பாற்றினார் என்று ஒரு புராண கதையை படிக்கும்போது "அற்புதமாக" இருந்தது!!!
"பார்வோன் என்ற சர்வாதிகார மன்னன் இஸ்ரவேல் மக்களை சிறை பிடிக்க தன்னுடைய லட்சகணக்கான சேனைகளோடு வந்துகொண்டிருகிறார் இஸ்ரவேல் மக்களை பாதுகாப்பாய் மோசே என்னும் சாதாரண தேவ மனிதர் வழிநடத்தி செல்கிறார், தப்பிக்க ஓடி ஓடி இறுதியாக கடல் கரையை வந்து அடைகிறார்கள், இனி தப்பிக்க வேண்டுமானால்? கடலை கடக்க வேண்டும். இங்கு இவர்கள் கடலை கடக்க கஷ்டப்படவும் இல்லை,வருடங்களும் ஆக வில்லை!! மோசே தன் தலையை உயர்த்தி இயேசு கிறிஸ்துவிடம் விண்ணப்பம் செய்கிறார், இயேசு கிறிஸ்து கொடுத்த கோலை கடலை நோக்கி நீட்டுகிறார் அவ்வளவுதான்!!! மறு நொடி அந்த கடல் "இரண்டாக பிளந்து" இஸ்ரவேல் மக்கள் கடந்து போக பாதையாக மாறுகிறது" என்று வேதத்தில் படிக்கும்போது "கர்வமாக" இருக்கிறது!!! கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் நாம் என்று....
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.-சங்கீதம்:24-8.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum