பெண்களே ...
Thu Dec 17, 2015 9:40 am
தேவனுடைய ஆலயம் "பரலோகத்தின் வாசல்" என்பது கிறிஸ்துவ நம்பிக்கை,
ஆறு நாட்கள் உலகத்தாராக பாவத்தில் வாழ்ந்து ஏழாம் நாள் படைத்தவரிடம் செல்கின்றோம் நம் பாவத்திற்காக!!!
இங்கு நாம் பார்க்கும் காரியம் "இளம் பெண்கள்" (சகோதரிகள்) தாங்கள் உடுத்தும் ஆடைகள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் வண்ணமாக இருக்கிறது, இறுக்கமாக, தங்கள் உடலின் அங்கங்கள் மற்றவர் பார்க்கும் வண்ணம் வருகிறார்கள், சிகை, முகம் அலங்காரத்தோடு (அளவுக்கு அதிகமாக) இருக்கும் இவர்கள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதை கௌரவமாகவும் நினைகிறார்கள், தேவாலயத்திற்குள் தலையில் முக்காடு போடும் பழக்கமே இல்லை தங்களை அழகாக காட்டி கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார்கள்...
வாலிபர்களோ !!! இவற்றினால் மனம் தடுமாறி "காதல், காமம்,வேசித்தனம், என்று சிந்திக்க தொடங்குகிறார்கள்,
பெண்களை குற்றம் சுமத்தவோ? குறை சொல்லவோ இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்,
ஒரு ஆய்வில் இப்படியாக சொல்கிறது நூற்றுக்கு எழுபது சதவீத பெண்கள் தங்களை அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டிகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என்று,
இந்த மாய்மாலமான தோற்றத்தை பார்க்கும் வாலிபனே!!! எச்சரிக்கையாய் இரு தேவாலயத்திற்குள் காதல்,வேசித்தனம் என்று துணிகரமாக பாவத்தை செய்து தேவனுடைய கோபத்திற்கு ஆளாகாதே!!
கல்லறை தோட்டம் சென்று பாருங்கள்!
அங்கு மார்பில், கிரானைட் கற்கள் முதற்கொண்டு பயன்படுத்தி அழகாகவும், பிரமாண்டமாகவும் கல்லறைகள் கட்டப்பட்டு இருக்கிறது, பொன் எழுத்துக்களால் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறது!! ஆனால்? அவை எல்லாம் உடைத்து உள்ளே பாருங்கள்,
புழுக்களும்,பூச்சிகளும் தயாராக இருக்கிறது உள்ளே வரும் சரீரத்தை சிதைக்கவும், அரிக்கவும்,, மாய்மாலமான தோற்றம் உங்களை அழிவின் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை மறக்க வேண்டாம்...
-சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.நீதிமொழிகள் 31:30
Permissions in this forum:
You cannot reply to topics in this forum