விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள்
Thu Dec 17, 2015 9:26 am
இங்கிலாந்து தேசத்தில் ஒரு இளைஞர் இருந்தார் , ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை மிக்கவராக இருந்தார்,
ஒரு முறை தான் வரைந்த ஓவியங்களை எடுத்து கொண்டு பெரிய நிறுவனங்களில் வேலை தேடி அலைந்தார்!! ஆனால்? அவருக்கு ஒருவரும் வேலை தரவில்லை, மீண்டும் மீண்டும் வேலை தேடி அலைந்தார், மனம் சோர்ந்துபோகாமல் இயேசு கிறிஸ்துவிடம் அனுதினமும் ஜெபம் செய்து வந்தார்,
இறுதியில் அவருக்கு ஒரு தேவாலயத்தில் வேலை கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியோடு தேவனுக்கு நன்றிகளை சொல்லிக்கொண்டு போனவருக்கு அங்கு ஒரு சிறிய அறை மட்டுமே கிடைத்தது, அதில் குப்பைகளும், எலிகளும் நிறைந்து காணப்பட்டது, இருந்தபோது அவர் மனம் தளராமல் தொடர்ந்து தன் ஓவியங்கள வரைந்து கொண்டிருந்தார்,
ஒரு நாளும் தனக்கு கிடைத்த அந்த இடத்தை அர்ப்பம் என அவர் அசட்டை செய்யாமல் பொறுமையோடே இருந்தார், ஒரு நாள் இரவு தூங்கிகொண்டிருந்தார் அப்பொழுது அவர் அறையில் இருந்த எலிகள் அங்கும் இங்குமாக ஓடி விளையாடி இவர் தூக்கத்தை கெடுத்தது, பொறுமையோடே அவற்றை பார்த்து கொண்டிருந்தவருக்கு ஒரு புதிய சிந்தனை தோன்றியது!!! அப்படியே அந்த எலிகளை வரைய ஆரம்பித்தார்!! அதற்க்கு "மிக்கி மவுஸ்" என்று பெயர் சூட்டினார்..
அவரின் கற்பனையும்,திறமையும் இந்த உலகம் முழுவதும் பரந்து வளர்ந்தன. அவரின் ஓவியம் உலக புகழ் பெற்றது, அந்த இளைஞர் தான் உலக கார்டூன் புகழ் "வால்ட் டிஸ்னி" ஆவார் ...
நீங்கள் அதிகம் படித்தவராய் இருக்கலாம்?
அதற்க்கு தகுந்த வேலை இல்லாமல் வேறு சிறிய வேளைகளில் இருக்கலாம்,
நீங்கள் படிப்பில் குறைபாடு உள்ளவராய் இருக்கலாம்,
விரும்பிய வேலை கிடைக்காமல் மற்றவர் உங்களை கேலி,கிண்டல், என அவமானப்படுத்தும் சூழ்நிலையில் இருக்கலாம்,
உங்கள் வாழ்கையை குறித்து நீங்கள் பல திட்டங்கள் வைத்திருக்கலாம்!!
பின்பு ஏன்? எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?
என் மன ஆசை நிறைவேறாதபடி இயேசு கிறிஸ்து என்னை சோதிக்கிறார்,கை விட்டு விட்டார் என சிந்தித்து கொண்டிருக்கலாம்,
யார் கிறிஸ்துவின் நிமித்தம் நொறுக்க படுகிறார்களோ அவர்களே பாக்கியவான்கள் என்று வேதம் சொல்கிறது,
கடுகு அளவு என்னை (இயேசு கிறிஸ்து) விசுவாசித்தால் உலகளவு உன்னை உயர்த்துவேன் என்று வாக்குத்தத்தம் செய்தவர் நம் தேவன் அல்லவோ!!!
ஆண்டவரின் சித்தத்தை நீங்கள் அசட்டை செய்தால்? ஆண்டவர் உங்களை அசட்டை செய்வார்,
ஆக நீங்கள் விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள் ஏனெனில்?
-என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 55:8-

Permissions in this forum:
You cannot reply to topics in this forum