என் பாவ வாழ்க்கையை பேசி என்னை காயப்படுத்துகிறார்கள்
Thu Dec 17, 2015 9:14 am
கூலி தொழில் செய்யும் சகோதரர்கள் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என்பது அனைவருமே அறிந்தது! அவர்களிடம் எப்படி உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது என்று கேட்டோம்,
"நான் சாக்கடை அள்ளுபவன் அந்த நாற்றம் தெரியாமல் இருக்க குடிக்க ஆரம்பிதேன் என்கிறார்,
நான் பிணவறையில் வேலை செய்பவன் அந்த அருவெறுப்பு, நாற்றம் எல்லாவற்றையும் சகித்து கொள்ள குடிக்க ஆரம்பிதேன் என்கிறார்,
இப்படியாக கட்டிட வேலை, ஓட்டுனர், வேலை என்று அநேகர் இருகிறார்கள்
இவர்கள் சூழ்நிலை அப்படிப்பட்டதாக இறுப்பினும் இவற்றை நியாயப்படுத்த முடியவில்லை...
அவர்களுக்காக நாம் தினமும் ஜெபிப்போம்..
சரி இன்னும் சிலர் இருகிறார்கள் இந்த தொழிலாளிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். ஏன்? மது அருந்துகிறோம் என்றே தெரியாமல் தன் சரிரத்தையும் ஜீவனையும் அழித்துக்கொள்கின்றனர்...
இவற்றில் முக்கியமான ஒரு காரியத்தை இங்கு தெரிந்துகொள்ள முடிந்தது,
" நான் தெரியாமல் சில கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் ஒரு நாள் என் தவறை உணர்ந்து நான் திருந்த முடிவு செய்தேன், ஆலயம் சென்றேன். ஆனால்? அங்கு அனைவரும் என்னை அருவெறுப்பாக பார்க்கிறார்கள் நான் ஒரு பாவி என்று தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி என்னோடு பழக்கம் வைக்க கூடாது என்று சொல்கிறார்கள், என் முகத்திற்கு பின்னால் என் பாவ வாழ்க்கையை பேசி என்னை காயப்படுத்துகிறார்கள், மீண்டும் என் பழைய வாழ்க்கையே மகிழ்ச்சி என்று குடிக்க ஆரம்பித்து விட்டேன்" என்கிறார்கள்,
நம் சமுதாயம் இன்று இப்படியாக தான் இருக்கிறது, "தன்னிடம் வருபவரை இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை" ஆனால் நாம்???
ஜூன் 30,1966 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஒரு குழந்தை பிறந்தது, இரண்டு ஆண்டுகளில் அந்த குழந்தையின் தந்தை இவர்களை கைவிட்டு விட்டார், வருமானம் இல்லாத சூழ்நிலை, ஒவ்வொரு இடமாக நாடோடி வாழ்க்கை சென்றது, பத்து வயது முதல் அந்த சிறிய பையன் பல பெரிய தவறுகளை செய்ய தொடங்கினான்,
" குடி,திருட்டு,வழிபறி,அடிதடி, என்று தன் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தான்,
தன்னுடைய 18 வயதில் 38 முறை சிறை சென்றான், தன் வாழ்க்கை முடிந்தது என்று முற்று புள்ளி வைத்தான்,
சிறையில் அவனை ஒரு குத்து சண்டை பயிற்சியாளர் பார்த்து பரிதாபப்பட்டார், அவனோடு தன் நேரத்தை அதிகமாக செலவு செய்தார், "நீ குத்து சண்டை "பழகிகொள் உன்னால் சாதிக்க முடியும் நான் உன்னை தயார் செய்கிறேன் என்று அவனை சிறையில் இருந்து வெளியே எடுத்து பயிற்சி கொடுத்தார், தன் 20 வயதில் "வேர்ல்ட் ஹெவி வெயிட்" சாம்பியன் ஆனார்.. அவர் தான் உலக புகழ் "மைகேல் ஜெரார்ட் டைசன்(Mike tyson-Boxer)
ஒருவேளை உங்கள் பாவத்தை மையப்படுத்தி பலர் மகிழ்ச்சி கொள்ளலாம்? உங்கள் பழைய வாழ்க்கையை வைத்து உங்களை காயப்படுத்தலாம்? அப்படிபட்டவர்களுக்காக நீங்கள் துவண்டு போகாதீர்கள்,
"இயேசு கிறிஸ்துவிற்கு" அவர் படைத்த நாம் என்றுமே ஓர் குழந்தை போல தான், நம்மை மன்னிக்கவும், விசாரிக்கவும் அவரே போதுமானவர், உங்கள் பாவத்தை வெறுத்து "ஆண்டவருக்கு" உங்களை ஒப்புகொடுங்கள், நிச்சயம் ஒரு மாற்றம்,அற்புதம்,நடக்கும் என்று விசுவாசிக்கிறோம் ஆமென்...
-அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம் 113:7

பலர் சொல்லும் உண்மை:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum