இவர்கள் விசுவாசம் - இரண்டு விதமாக இருக்கிறது
Thu Dec 17, 2015 9:06 am
ஒவ்வொரு வாரமும் ஆலயத்திற்கு தவறாமல் சரியான நேரத்திற்கு வந்து பயபக்தியாய் இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபம் செய்வதும், பாடல்கள் பாடுவதுமாக இருந்த அந்த விசுவாசியை பார்க்கும்போது அனைவருக்கும் இவர் முன்னோடியாக இருக்கிறாரே!!! என்று சிந்திக்க தோன்றியது...
இப்படிபட்ட சில தேவ மனிதர்கள் இருப்பதால் தான் என்னவோ??? இந்த நொடியும் கூட பிதாவினிடத்தில் இயேசு கிறிஸ்து பரிந்து பேசுகிறார் என்று சிந்திக்கவும் தோன்றுகிறது!!!
இந்த விசுவாசம் இவர்கள் எப்படி கடை பிடிக்கிறார்கள் என்று சற்று கூர்ந்து கவனிக்கும்போது தான் தெரிகிறது (இன்று அனேக கிறிஸ்தவர்கள்) இவர்கள் விசுவாசம் இரண்டு விதமாக இருக்கிறது என்று,
தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்கின்றார்கள் "முகூர்த்த நாளில்"!!! ஏனென்றால்?
சித்தர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணித்து வைத்துவிட்டார்கள், வேறு நாளில் திருமணம் வைத்தால்? மண முடிப்பவர்கள் நிம்மதி இன்றி இருப்பார்கள் என்ற அசைக்க முடியாத விசுவாசம்!!! தங்கள் வேலை ஸ்தலங்களில் ஆயுத பூஜை வைக்கவும் தயங்குவதில்லை, புதிதாக வாகனம் வாங்கினதும் எலுமிச்சை, வைக்கிறார்கள் திருஷ்டி கழிய....
ஒருமுறை இயேசு கிறிஸ்து தன் சீடர்களோடு கடலில் பிரயாணமாக இருந்தார், அவர் சீடர்கள் தேவனால் செய்யப்பட்ட அணைத்து அற்புதங்களையும் அறிந்தவர்களாகவே இருந்தனர்,
அந்த நேரம் கடலில் பெரிய பெரிய அலைகளும், இடி,மின்னல்களும் வர தொடங்கியது, அருகில் இயேசு கிறிஸ்து இருந்தும் அவர்கள் விசுவாசம் அந்த இயற்கை மேல தான் இருந்தது,
எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா? நாங்கள் மரிக்க போகிறோம் என்று பயத்தில் அலற ஆரம்பித்தனர், இந்த சத்தத்தை கேட்டு கண் விழித்த இயேசு விசனப்படுகிறார், "அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று... சீடர்கள் அமைதியானார்கள் வெட்கத்தோடே....
இன்று அனேக கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள், வார வாரம் ஆலயத்திற்கு சென்று சத்தியத்தை கேட்டும் கூட இயேசுவை முழுமையாக விசுவாசிக்க மனம் ஏனோ வருவதில்லை, ஜாதகம்,பூஜை வழிபாடு,மூடநம்பிக்கை போன்ற படைப்புகளையே நம்புகின்றனர்
தெரிந்துகொள்ளுங்கள் -->படைப்புகள் உங்களை இரட்சிக்காது, படைத்தவர் மட்டுமே உங்களை இரட்சிக்க முடியும்--
-அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.I பேதுரு 1:7.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum