சூரனா? சிறுவனா?
Thu Dec 17, 2015 8:02 am
அந்த போர்க்களம் தற்செயலாக நிர்ணயம் செய்யப்பட்டது இல்லை, அது இயேசு கிறிஸ்துவினால் திட்டமிட்டபடியே அமைக்கப்பட்டது!!! அசுரன் என்றால் சராசரி மக்களை விட உயரத்திலும்,பலத்திலும் அதிகமாக காணப்படும் மூர்க்க குணம் உள்ளவர்கள் தான்! அப்படிப்பட்ட பெலிஸ்தியரான போர் வீரன் இல்லை இல்லை போர் சூரன் தான் கோலியாத், அவனை எதிர்க்க போர்களத்தில் கால் வைப்பவனுக்கு இறுதியில் தலை இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை...
இங்கு நாம் கவனிக்க வேண்டியது- போர்களத்தின் அனுபவம் இல்லாத ஆடு மேய்க்கும் சிறுவன்! அவன் உயரத்திலும்,பலத்திலும் சராசரி மக்களை விட குறைந்தவனே அந்த தாவீது!!! அப்படிப்பட்ட சிறுவனை ஏன் இயேசு கிறிஸ்து போர் களத்திற்கு அனுமதிக்கிறார்??? இந்த சூழ்நிலை பெயர் கிறிஸ்தவர்களுக்கு இது இப்படியாக இருக்கும் "இயேசுவை நான் நம்பினேன், அவரோ என்னை பெரிய இக்கட்டுக்குள் சிக்கவைத்து மறந்துபோனாரென்று!!!
இன்று உங்கள் வாழ்கையில் உங்களுக்கு விரோதமாக போரிடுபவரை பார்த்து நீங்கள் பயந்தாலோ? அவர்களின் பலத்தை பார்த்து நீங்கள் வியர்ந்து நிற்பீர்களானால்? என்னால் இவர்களோடு எதிர்த்து நின்று வெற்றிபெற முடியாது என்று சிந்திபீர்களானால்??? நீங்கள் உண்மையிலேயே அறிவிழந்த அடிமைகள் தான்!!!
அந்த போர்க்களம் பல அனுபவமிக்க வீரர்களையும்,பல பெரிய யுத்தங்களையும் பார்த்தது ஆனாலும் இன்னும் சரித்திரத்தில் இடம் பிடிக்கவில்லை என்பது தானே உண்மை? ஒருவேளை அன்று அந்த சிறுவனை பார்த்து போர்க்களம் ஏளனமாக சிரித்திருந்தால் என்ன??? இன்று வரை அதன் சரித்திரத்தை முறியடிக்க வேறெந்த சூரனும் பிறந்துவரவில்லையே! பின்பு இயேசு கிறிஸ்து ஏன்? ஆடு மேய்க்கும் சிறுவனை போரிட அனுமதிக்கிறார்??? வேறு ஒரு பலம் வாய்ந்த போர் வீரனையே தேர்வு செய்திருக்கலாமே??? தேவ சித்தம் வித்தியாசமாக தான் இருக்கும்,
கோலியாத் பல கவசங்களை அணிந்து கொண்டு பயங்கர ஆயுதங்களோடு போருக்கு வருகிறான், சிறுவன் தாவீது கையில் கூழாங்கற்கள் மட்டுமே, ஒருவேளை உங்கள் சிட்சைகளை நீங்கள் அசட்டை செய்யாமல் அதை எதிர்கொள்ள தேவ சமூகத்தில் காத்திருப்பீர்களானால் இப்படியாக தான் உங்கள் வாழ்கையிலும் நடக்கும்!!!
தூரத்தில் இருக்கும்போது என்னால் சரியாக குறி வைக்க முடியவில்லை, "நீ என் அருகில் வந்தது தான் எனக்கு வசதியாக இருக்கிறது, கண்ணை மூடிக்கொண்டு உன்னை தாக்குவேன் என்னிடம் இனி நீ தப்பிக்க முடியாது" என்பது சிறுவன் தாவீதின் கர்வம்-காரணம் "கர்த்தர் அவரோடு" பெரிய பெரிய யுக்திகளை கையாள தெரிந்த கோலியாத்துக்கு தெரியவில்லை சிறிய கூழாங்கற்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள! தாவீது வீசிய அந்த கற்கள் (இயேசுவின் வல்லமை) கோலியாத்தை உலகத்திலிருந்து கீழே விழ செய்தது!!!
இரண்டு காரியம் 1) பெருமை உள்ளவனை சந்திக்க ஒரு சிறுவனே இயேசுவிற்கு போதுமானது, 2) அவர் வல்லமை சாதாரண கற்களுக்கும் உண்டு அது தேவனுக்காக பயன்படும்போது என்பது தான்!!! உங்கள் வாழ்கையிலும் கூட உங்கள் பிரச்சனைகள்.போராட்டங்கள் தற்செயலானது இல்லை, அதனை முறியடிக்க இயேசு கிறிஸ்து உங்களோடு இருந்து உங்களையே போரிட செய்து புதிய சரித்திரம் படைக்கவே சித்தமுள்ளவராய் இருக்கிறார் நீங்கள் இயேசுவை மட்டுமே சார்ந்திருக்கும்போது என்பது நிதர்சனமான உண்மையே!!!!
இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் இருந்தால்? இனி நீங்களே முடிவு பண்ணி கொள்ளுங்கள் நீங்கள் இயேசுவிற்கு யாரென்று?
சூரனா? சிறுவனா?
-கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.-சங்கீதம்-16:8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum