செல்வந்தனாக ...
Wed Dec 16, 2015 8:20 am
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விசயம். இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம். இப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரனாக முடியுமா? சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத் தான் பற்றாக்குறை.
லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரன் ஆவதும் நிச்சயம் சாத்தியமே! அதற்கான சில வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?
கோடிஸ்வரனாக ஆசைப்படு: எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடிஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும்.
ஏழையாக இருக்க வேண்டாம்: எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.
பணம் உறங்குவதில்லை: பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.
பணத்துக்குப் பின்னால் போ: இந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரன் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்!
ஆடம்பரம் வேண்டாம்: சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாகக் வரும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் ஆடம்பரம் வேண்டாம்.
முதலீட்டுக்காக சேமியுங்கள்: உங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக்கான பாதுகாப்பான முதலீடுகளாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்துவிட வேண்டாம்.
கடனுக்கு ‘நோ’ :
உங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை ‘ரொட்டேட்’ செய்வது வேறு விஷயம்.

‘பொறாமை’ பணம் : பணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.
புத்திசாலித்தன முதலீடு : உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பைவிட, புத்திசாலித்தனமான முதலீடுகள்தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.
ரோல் மாடல்: நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Re: செல்வந்தனாக ...
Wed Dec 16, 2015 8:21 am
தன் சம்பந்தி தொழிலதிபர் பாபுவை யை பார்க்க வந்திருந்தார் முருகப்பன். தொழிலதிபர் பாபுவுக்கு இரண்டு மகன்கள். இதில் தொழிலதிபர் பாபுவின் மூத்த மகனுக்கு தன் பெண்ணை கொடுத்திருகிறார் முருகப்பன். தொழிலதிபர் பாபு தன்னுடைய தொழிற்சாலைக்கு எம்.டி யாக அவரது இளைய மகனை நேற்று நியமித்ததுவிட்டார். “என் மாப்பிளைதானே மூத்த மகன் உங்களுக்கு?
அப்படியிருக்க எப்படி உங்கள் இளைய மகனுக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்திர்கள்?” என உரிமையோடு கேட்டார்.
தொழிலதிபர் பாபு தன் இரு மகன்களையும் அழைத்தார்.
“ஆறு மாதத்துக்கு முன்பு உங்கள் இருவர்க்கும் கொஞ்சம் தங்கம் தந்து பத்திரமாக வைத்திருங்கள் என்று சொன்னேனே? என்ன செய்தீர்கள்?” என கேட்டார்.
இருவரும் கே.கே. பேங்கில் பத் திரமாக உள்ளது என கூறினார்.
முருகப்பன் தொழிலதிபர் பாபுவை மேலும் கீழும் பார்த்து பார்வையாலேயே கேட்டார்.. இரண்டு பேரும் ஒரே வேலையே தானே செய்துளார்கள்?
தொழிலதிபர் பாபுவும் இப்போது பாருங்கள் என பார்வையாலையே சொல்லிவிட்டு மூத்த மகனிடம்
“எப்படி பத்திரமாக வைத்திருகிறாய்?”
” வெரி சிம்பிள்பா!!! லாக்கர்லே வச்சுட்டேன் .வருசத்துக்கு 12,000 ரூபாதான் வாடகை.”
இளைய மகனிடம் திரும்பினார். அவன் சொன்னான்.
” நான் அத அதே பேங்க்ல அடமானம் வச்சுட்டேன்.அதனால தங்கத்தோட மதிப்புலே 80% பணம் திரும்ப கிடைச்சுடுச்சு. அத நம்ம பிசினச்சுலே போட்டு அதுலே நல்ல ரோட்டேசனும் ஏகப்பட்ட லாபமும் பண்ணிகிட்டேன். . அந்த பணத்தால நமக்கு வருசத்துக்கு 1 லட்சம் லாபம் வருது.வருசதுதுக்கு 8000 ரூபாத்தான் வட்டியா போகுது. இப்போ நம்ம நகைகள் நம்மை பொறுத்தவரை இலவசமா பாதுகாக்க படுது.நகைகளில் போட்ட பணம் நகையில் முடங்காம பார்த்துகிட்டேன்.நகைய பாதுகாக்க சொந்த காசு போகாம வச்சுகிடேன்.”
இப்போது தொழிலதிபர் பாபு முருகப்பனை பார்க்க, ‘நமக்கும் வந்து வாச்சுருகானே மாப்ள’ என நொந்தபடி தன் வீடு நோக்கி போய்கொண்டிருந்தார்.
நன்றி
எஸ்பி. சிவகுமார்
எஸ்பி. சிவகுமார்
Re: செல்வந்தனாக ...
Wed Dec 16, 2015 8:31 pm
பிஸினெஸ் ரகசியம்
சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.
ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார்.
சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார்.
‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார்.
சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார்.
கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மகா சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது.
இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!
Re: செல்வந்தனாக ...
Wed Dec 16, 2015 8:32 pm
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

Wed Dec 16, 2015 8:33 pm
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.
கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.
அதோடு " தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர்.
அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum