அச்சாரம் என்றால் என்ன?
Wed Dec 16, 2015 12:28 am
அச்சாரம் என்றால் என்ன?
"அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்." (எபே 1:14)
"அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்". (2கொர 1:22)
• ஆவியானவர் நமக்கு அச்சாரமாக் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறது.
• 'அச்சாரம்' என்ற வார்த்தையின் அர்த்தம் 'முன்பணம்' என்பதே. (வீடு வாடகைக்குத் தேடுபவர்கள் ஒரு சரியான வீட்டைக் கண்டவுடன் அதைத் தங்களுக்கென்று உறுதிசெய்துகொள்ள அந்த வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொகையை முன்பணமாகக் கொடுப்பர். இதைத்தான் அச்சாரம் என்கிறோம்).
• இதில் ஆவியானவரை நமக்கு 'முன்பணமாக' (Advance) அல்லது அச்சாரமாயிருக்கிறார். நாம் அவரால் மீட்கப்பட போகிறவர்கள் என்பதே இதன் விளக்கம். இதுவும் நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்பிக்கிறதாயிருக்கிறது.
இதற்காக எந்த ஒரு விசுவாசியும் காத்திருக்க வேண்டுவதில்லை, காரணம் நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டபோதே இது நடக்கிறது

Re: அச்சாரம் என்றால் என்ன?
Wed Dec 16, 2015 12:28 am
பரிசுத்த ஆவியின் முத்திரை என்றால் என்ன?
பரிசுத்த ஆவியின் முத்திரையைக் குறித்து பின்வரும் வேதபகுதிகளின் மூலமாக நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ளமுடியும்.
'நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.' (எபே 1:13)
'அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.' (எபே 4:30)
இந்த வேதபகுதிகளின் மூலம், 'பரிசுத்த ஆவியின் முத்திரை' என்பது முழுவதும் தேவனால் நிறைவேற்றப்படக்கூடிய ஒன்று என்பதை நாம் தெளிவாக அறியமுடியும். வேதத்தின் எந்த ஒரு பகுதியிலும் இது விசுவாசிகளுக்கு ஒரு கட்டளையாகவோ அல்லது விசுவாசிகள் போராடி வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றோ போதிக்கப்படவில்லை.
மாறாக இரட்சிக்கப்படும்போது நாம் பரிசுத்த ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள்கிறோம். (எபே 1:13) என்பதே போதனையாகும்.
பொதுவாக முத்திரை என்ற சொல் அதிகாரத்தைக் குறிக்கக்கூடிய ஒன்று. எந்த ஒரு பொருள் முத்திரையிடப்பட்டிருக்கிறதோ அந்தப்பொருள் முத்திரையிலுள்ள நிர்வாகத்திற்குச் சொந்தம் அல்லது அதன் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டுமென்பது தான் சட்டம்.
அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் முத்திரையிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
• மீட்கப்படும் நாளுக்கென்று அந்த முத்திரையைப் பெற்றிருக்கிறோம். (எபே 4:30). இயேசுக்கிறிஸ்துவின் வருகையிலே நாம் நிச்சயமாக மீட்கப்படுவோம் என்பதற்கு இது ஒரு அத்தாட்சியாக இருக்கிறது.
• இதில் முத்திரையாக பரிசுத்த ஆவியானவரே இருக்கிறார் (எபே 4:30).
• முத்திரை நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்பிக்கிறதாயிருக்கிறது.

- கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum