அறிவியல் கொண்டு நிரூபிக்க முடியுமா?
Wed Dec 16, 2015 12:16 am
இறைவன் எழுதிக்கொடுத்த வார்த்தையை அறிவியல் கொண்டு நிரூபிக்க முடியுமா?
அறிவியல் என்றால் என்ன?
மனிதனால் காணமுடியாததை காண்பது அல்ல அறிவியல், ஒரு செயலுக்கான காரணத்தை அறிந்து கொள்வதே அறிவியல். தெய்வத்துவத்தை அறிவியல் கொண்டு பார்க்கமுடியாது.
இப்படி மனிதன் தன் அறிவை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ அந்தளவிற்குப் பயன்படுத்தி உலகில் நடக்கும் பல செயல்களுக்கு காரணம் கண்டுபிடித்திருக்கிறான். அதில் பல கண்டுபிடிப்புகள், பல முறை மாற்றம் கண்டவைகள் ஆகும்.
இதை அடிப்படையாக வைத்து சிலர் தங்கள் வேதம் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது, அன்றைக்கே பல அறிவியல் உண்மைகள் எங்கள் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது, ஆக இது மனிதனால் கூடாதது, தேவனால் மாத்திரமே கூடும்,,, என்று சொல்லி தங்கள் வேதத்தை இறைவேதம் என்று நிரூபிக்க முயலுகிறார்கள்.
அறிவியல் கொண்டு இறைவார்த்தையை நிரூபிக்க முடியுமா? இது சரியான முறையா? என்று பார்ப்போம்.
1) இறைவன் மழை பெய்வதைக் குறித்து ஒரு வார்த்தையை வெளிப்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம், அந்த வெளிப்பாடு இன்றைய அறிவியல் மேதைகளின் கண்டுபிடிப்பிற்கு ஒத்து இல்லை, இப்போது எதை நீங்கள் நம்புவீர்கள்…….?
நாம் மனிதர்களைக் காட்டிலும் தேவனை நம்பவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம், இன்று சொல்லக்கூடிய அறிவியல் 100 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றம் பெறலாம், ஆனால் தேவன் மாறாதவர். அறிவியல் சொல்வது பொய்யாகலாம், ஆனால் தேவன் சொன்னது மாறாது.
2) அப்படியே வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு செயல் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஒத்துப்போனால் கூட அதற்காக அதை ஒரு இறைவேதத்திற்கான நிரூபனமாகக் கொள்ளமுடியுமா? முடியாது ஏன் என்றால் இன்றைக்கு சரி என்று சொன்ன அறிவியல் நாளைக்கு இல்லை என்று சொல்லலாம், உடனே அன்று வேதம் பொய் என்று சொல்லி விட முடியுமா?
3) மேலும் அறிவியல் உண்மைகளை தேவன் தான் வெளிப்படுத்தமுடியும் என்று அர்த்தமில்லை, ஒரு சில காரியங்களை தேவ துதர்களும், சாத்தானும் கூட நன்கறிவார்கள். உதாரணத்திற்கு வியாழன் கோளில் என்ன இருக்கிறது என்பதை நம்மைக் காட்டிலும் சாத்தானுக்கு நன்றாகத் தெரியும், அங்கு அவனால் எளிதில் பயணிக்க முடியும்,
ஒரு மனிதனை சாத்தான் தேர்ந்தெடுத்து இறைவேதம் போல சில வார்த்தைகளைக் கொடுத்து இடையிலே அவனுக்குத் தெரிந்த, அதேசமயம் மனிதனுக்குத் தெரியாத அறிவியல் உண்மைகளை புகுத்தி வஞ்சிக்க முடியும்… மனதில் கொள்க.
4) இவை எல்லாவற்றிலும், அறிவியல், ஒரு மனித அறிவு அவ்வளவே, ஒரு சில அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மையாக இருக்கலாம் ஆனாலும் அது ஒரு போதும் நம்பத்தகுந்தவைகள் இல்லை, எப்பொழுது வேண்டுமானாலும் நிலைமை மாறலாம்.
ஒரு உண்மையான இறைவேதத்தில் அறிவியலுக்கு முரணான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும், நாம் இறக்கும் போதுதான் உண்மையான அறிவியலே நமக்குத் தெரியபோகிறது.
5) அறிவியலைக் கொண்டு தங்கள் வேதத்தை நிரூபிக்க முயலுகிறவர்கள். ஒரு வேளை வேறு எந்த மத வேதத்திலாவது சில அறிவியல் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் உடனே அதையும் இறைவேதமாக அங்கீகரித்துத்தானே ஆக வேண்டும்,
இறைவேதத்தை இறைவனே நிரூபிக்க வேண்டும், மனித அறிவைக் கொண்டு நிரூபிக்க முடியாது, இறைவார்த்தையை நிரூபிக்க அறிவியல் ஒன்றுக்கும் உதவாது.
கிபி முதல் 5 நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவியலும் தெரியாது, அவர்கள் எந்த அறிவியலைப் பார்த்து இறைவேதத்தை இறைவேதமா ஏற்றுக்கொண்டனர்….

Permissions in this forum:
You cannot reply to topics in this forum