இழந்து போன தேவ சாயலை நாம் எப்படி பெற்றுக்கொள்வது?
Wed Dec 16, 2015 12:04 am
ஆதாம் தேவனுடை சாயலில் படைக்கப்பட்டாலும் தான் செய்த பாவத்தால் அந்த சாயலை இழந்து போனான்.
அதனால் தான் ஆதியாகமம் 5:3 ல் “ ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, **தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே** ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.” என்று வருகிறது. அதாவது ஆதாம் தேவ சாயலை இழந்ததால், அவனுடைய சந்ததியும் தேவ சாயலை இழந்து ஆதாமின் சாயலோடே இருக்கிறது. அப்படியானால் இழந்து போன தேவ சாயலை நாம் எப்படி பெற்றுக்கொள்வது?
அன்றைக்கு ஆதாம் தேவசாயலை பெற்றுக்கொள்ள தேவன் அவனுடைய நாசியில் ஊதவேண்டியிருந்தது. ஆனால் இப்போது வேதம் நாம் தேவசாயலை பெற்றுக்கொள்ள என்ன வழிமுறையை கற்பிக்கிறது? இதற்கு விடை 2 கொரிந்தியர் 4:4 ல் தெளிவாக உள்ளது
“ தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” என்று வசனம் சொல்லுகிறது.
கவனியுங்கள் இந்த வசனத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷம்.... **தேவனுடைய சாயலாயிருக்கிறது** என்று வசனம் சொல்லுகிறது. அதாவது யார் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் தேவனுடைய சாயலையும் தரித்துக்கொண்டவர்கள் ...... இவர்களைத்தான் வேதம் மறுபடியும் பிறந்தவர்கள், ஆதாமில் மரித்து கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் என்றெல்லாம் கூறுகிறது.
நாம் தேவசாயலை அடைய முடியுமா? அடையமுடியும்.
எப்படி? தேவனுடைய சாயலாயிருக்கிற சுவிசேஷத்தால்......
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”. (எபே-4:24)

- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!!!
- இரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்குவது?
- இக்காலத்தில் வாழ்கிற நாம் எப்படி தப்பிக்கப் போகிறோம்?
- விமர்சனங்களை நாம் சந்திக்கும்போது நமது பிரதி செயல் எப்படி
- உண்மையான டிஎம்டி கம்பிகளை நாம் எப்படி அறிய முடியும்?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum