தேவபக்தி மட்டும் காணவில்லை......
Tue Dec 15, 2015 11:55 pm
இன்றைக்கு சபைகளில் போதிக்கப்படாத உபதேசம் இல்லை, ஜெபிக்காத ஜெபங்கள் இல்லை, வாசிக்காத வசனங்கள் இல்லை, போடாத உபவாசங்கள் இல்லை, சிறப்புக்கூட்டங்களுக்கும் அளவில்லை, ஆனால் ஒன்று மட்டும் இன்னும் நமக்குள் உருவாகவில்லை.
எப்படி அன்னியபாஷை பேசவேண்டும் என்று சொல்லித்தருகிறார்கள் எப்படி தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று கற்றுத்தருகிறார்கள் எப்படி வீடு கார் வேலை போன்றவற்றை ஜெபத்தில் வாங்க வேண்டும் என்று கூட கற்றுக்கொடுத்துள்ளார்கள் ஆனால் ஒன்று மட்டும் இன்னும் நமக்குள் உருவாகவில்லை...
எப்பொழுது கிறிஸ்து வருவார், எப்பொழுது அந்திகிறிஸ்து வருவான் என்பதை கூட கணித்து சொல்லுகிறது இந்த கூட்டம் ஆனால் தேவையானது ஒன்றே என்று சொன்ன அந்த ஒன்று இல்லை.
நாம் நம்பும் இந்த தேவன் எனக்கு எதைத் தர பிரியமாயிருக்கிறார், நான் எதற்காக கிறிஸ்தவனாயிருக்கிறேன் என்ற ஒரு உண்மை கூட தெரியாமல் இன்றைக்கு கிறிஸ்தவ உலகம் போய்க்கொண்டிருக்கிறது.
1 தீமோ 4:8 ல் சரீர முயற்ச்சி அற்ப பிரயோஜனமுள்ளது ஆனால் தேவபக்தியோ இந்த ஜீவனுக்கும் இதற்கு பின் வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
எத்தனையோ வாக்குத்தத்தங்களை தேவன் தந்ததாக புதுவருஷத்தில் கூறும் போதகமார்களே இந்த வாக்குத்தத்தை மட்டும் ஏன் தேவன் உங்களுக்கு தருவதேயில்லை. இந்த வாக்குத்தத்தம் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் பிரயோஜனம் என்று வசனம் சொல்லுகிறது இது உங்களுக்கு எப்படித் தெரியப்போகிறது!
இன்றைக்கு சபையில் எல்லாம் நடக்கிறது ஆனால் பிரயோஜனமான தேவபக்தி மட்டும் காணவில்லை......
தேவனைப்போலவே வாழும் வாழ்க்கைதான் இன்றைக்கு சபைக்குத் தேவை! ஆனால் இன்றோ................................!
கர்த்தாவே எங்கள் மனக்கண்ணை திறந்தருளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum