சொற் சூழல்
Tue Dec 15, 2015 11:50 pm
வேதாகம வார்த்தைகளை அதன் சூழ்நிலைகளை விட்டு எடுக்க வேண்டாம்
எப்பொழுதும் சொல்வது போல" சந்தர்ப்பம் அற்ற ஒரு வாக்கியம் காரணம் அற்றதாக மாறிவிடும்". ஒரு வசனத்தை அது சொல்லப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளின் வேளிச்சத்திலே எப்பொழுதும் கற்றுக் கொள்ள வேண்டும். சொற்சூழல் இல்லாத வேத வாக்கியம் பொருள் அற்றது என்பதை விளக்க ஒரு உதாரணத்தை வைக்கிறேன்,
“மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்” (ரோமர் 6:7)
இந்த வசனதிற்கான அர்த்தம் என்ன?
இதை வாசிக்கும் போது, ஒரு மனிதன் மரித்துப்போனால் அவனுடைய பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுவான் என்று புலப்படுகிறது அப்படித்தானே!
அப்படிப்பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் மரிக்கிறார்கள், பின்லேடனும் மரித்தான், யூதாஸ்காரியோத்தும் மரித்துப்போனான், ஆக இவர்கள் எல்லோரும் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் சொல்லுகிறதா?
சொற்சூழல் இல்லாமல் வாசிக்கும் போது இந்த வசனம் அப்படித்தான் சொல்லுவது போல தோன்றுகிறது. ஆனால் அந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்த்தால்தான் உண்மை என்னவென்று புலப்படும், அதாவது அடுத்தவசனம் இப்படியாக வருகிறது
“மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்.
ஆகையால் கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால் அவருடனே கூட பிழைத்துமிருப்போம்” (ரோமர் 6:7,
இப்போது நமக்கு ஒன்று புலப்படுகிறது, மரித்தவன் பாவத்திற்கு நீங்கியிருப்பான் என்ற வசனத்தின் அர்த்தம், “கிறிஸ்துவோடு மரித்தவனைக்குறிக்கிறது” சாதாரணமாக சரீரமரணம் அடைந்தவனைக் குறித்து இந்த வசனம் பேசவில்லை.
இதைத்தான் சொற்சூழல் என்கிறோம். எந்த வசனத்தையும் இந்த அடிப்படையில்தான் வாசிக்கவேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum