சரியான விளக்கம்தான் என்ன?
Tue Dec 15, 2015 11:37 pm
தேவனுடைய பல குணாதிசயங்களில் ஒன்று அவர் “பட்சாபாதம் உள்ளவர் அல்ல” இந்த குணாதிசயத்துக்கு முரணாக இருப்பதைப்போலத் தெரியும் வசனங்களைத் தியானிக்கும்போது சற்று ஜாக்கிரதையாக வியாக்கியானம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, யோவான்12:40ல்
'அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்'.
இந்த வசனத்தில் தேவனே சிலரை குருடாக்கினதால், அவர்களால் இயேசுவை விசுவாசிக்கமுடியாமல் போய்விட்டதாக பார்க்கிறோம். ஆனால் இது உண்மையாக இருக்குமா? ஒருவர் இயேசுவை விசுவாசிக்காமல் போனதற்கு தேவனே காரணமாக இருக்கமுடியுமா?
இதை அடிப்படையாகக் கொண்டு சிலர், “ஒரு மனிதன் நரகத்திற்குச் செல்ல தேவனே காரணம்” என்று போதிக்கிறார்கள். தேவன் ஒருசிலரை நரகத்திற்கு என்றும் ஒரு சிலரை பரலோகத்திற்கு என்றும் முன்குறித்துவிட்டார், அதனால் தான் முன்குறிக்கப்படாதவர்களின் கண்களைக் குருடாக்கி, இதயத்தை அவரே கடினப்படுத்தி நரகத்திற்கு அனுப்புகிறார் என்று போதிக்கிறார்கள். இது சரியா இந்த வசனத்திற்கு இப்படி விளக்கம் கொடுக்கலாமா? அப்படியானால் இந்த வசனத்திற்கு சரியான விளக்கம்தான் என்ன?
ஒரு வசனத்தை வியாக்கியானம் செய்யும்போது அந்த வசனம் தேவனின் குணாதிசயத்துக்கு விரோதமாக இருக்கக் கூடாது. தேவன் பட்சாபாதம் உள்ளவர் அல்ல (உபா 10:17, அப் 10:34, ரோமர் 2:11, கலா 2:6, எபே 6:9, கொலோ 3:25, யாக் 3:17, 1பேது 1:17) என்று வேதத்தில் பலமுறை சொல்லியிருக்க, அவரோ சிலரை மாத்திரம் விசுவாசிக்க முடியாதபடிக்கு, அவர்களுடைய கண்களைக் குருடாக்குவாரா?
ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதன் அருகில் மெழுகையும், களிமண்ணையும் கொண்டுசென்றால் என்ன ஆகும்? மெழுகு உருக ஆரம்பிக்கும், அதேசமயம் களிமண் இருக ஆரம்பிக்கும். அப்படித்தானே!
அந்த நெருப்பு இப்படிச் சொல்லுகிறது என்று வைத்துக்கொள்வோம் அதாவது, மெழுகை நான்தான் உருகச்செய்தேன், களிமண்ணை நான்தான் இருகச்செய்தேன், ஆக நான்தான் இருகவும் செய்கிறேன், உருகவும் செய்கிறேன் என்றால் அது உண்மையாகுமா?
ஒரு விதத்தில் அது உண்மைதான், தீ தான் இரண்டு பொருள்களையும் இருகவும் செய்தது, உருகவும் செய்தது, ஆனால் இதில் தவறு நெருப்பில் இல்லை, நெருப்பின் அருகில் வந்த பொருள்களில்தான் உள்ளது. களிமண்ணின் குணாதிசயம் நெருப்பின் அருகில் வந்தபோது அதை இருகச்செய்கிறது, அதேசமயம் மெழுகின் குணாதிசயம் அதை உருகச்செய்கிறது. இதில் நெருப்பில் தவறு இல்லை.
அதேபோல மனிதர்களில் சிலர் கர்த்தருடைய வசனத்தின் அருகில் வரும்போது அவர்களுடைய குணாதிசயமே அவர்கள் இதயத்தைக் கடினமாக்குகிறது, தேவன் அல்ல.... வேதவசனங்கள் பல இதேபாணியில் எழுதப்பட்டிருக்கும் என்பதை அறிந்து, நாம்தான் அதற்கு சரியான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் தேவனுடைய குணாதிசயத்துக்கு விரோதமான போக்கைக் கடைபிடிக்கிறவர்களாயிருப்போம்.
இதே அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனத்திற்கு சரியான அர்த்தத்தை கண்டுபிடியுங்களேன்!
ஏசா-45:7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானேளூ கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, சிலர் தேவன்தான் பாவத்தைப் படைத்தார் என்று போதிக்கிறார்கள். மேலும் இவர்கள், சாத்தானை தேவன் நல்ல தேவதூதனாக படைக்கவில்லை என்றும் சாத்தானை சாத்தானாகவே படைத்தார் என்றும் போதிக்கிறார்கள். இது சரியா? தேவனின் குணாதிசயத்துக்கு முரணாக இருப்பதைப்போலத் தோன்றும் இந்த வசனத்தின் அர்த்தத்தை எப்படி கண்டுபிடிப்பது?
பாவத்தை பாரா சுத்தக்கண்ணர், பரிசுத்தமுள்ளவர் என்று சொல்லப்படும் குணாதிசயமுள்ள தேவன் எப்படி தீங்கைப் படைக்கமுடியும் என்று சிந்தித்து இந்த வசனத்திற்காண சரியான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயலுங்கள்......

- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- 'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum