அப்போஸ்தலர்களின் உபதேசத்தில்
Tue Dec 15, 2015 11:35 pm
வேதமானது குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மாத்திரம் எழுதித்தரப்படவில்லை, இஸ்ரவேலருக்கு, புறஜாதிக்கு, சபை விசுவாசிகளுக்கு, உபத்திரவகால யூதர்களுக்கு என வேதம் பல சாராருக்கு எழுதித்தரப்பட்டது. ஆக இன்றைக்கு சபை விசுவாசிகளாயிருக்கிற நமக்கு தேவன் என்ன சத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை அப்போஸ்தலர்களின் உபதேசத்தைக் கொண்டே அறியமுடியும்.
ஆதித்திருச்சபையில் நடந்த காரியத்தை நாம் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது (அப் 2:41,42)
"41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42. அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். "
அன்றைக்கு சபையானது அப்போஸ்தலர்களின் உபதேசத்தில் நிலைத்திருந்ததாக வாசிக்கிறோம் அப்படியானால் அதற்கு அர்த்தம் என்ன?
வேதத்தில் எந்த வசனத்தை எப்படி கையாளவேண்டும் என்பதை அப்போஸ்தலர்களின் உபதேசங்களே நமக்கு தெளிவாக எடுத்துரைப்பதாக இருக்கின்றன.
உதாரணத்திற்கு
இயேசு கடைபிடித்த, உபதேசித்த ஒரு சிலவற்றை இன்றைக்கு நாம் பின்பற்ற தேவையில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?
1. இயேசு பலி செலுத்தச் சொன்னார் (லூக் 5:14)
2. இயேசு சுத்தமான ஒருவனுக்கு பிரதான ஆசாரியனை சென்று பார்க்கும்படி கூறினார்
3. ஒய்வுநாளை கைக்கொண்டார் (ஒரு சிலர், கிறிஸ்து ஓய்வுநாளை கடைபிடிக்கவில்லை என்று சொல்லுவதுண்டு இது உண்மையானால் கிறிஸ்து ஒரு உண்மையான பலியாக இருக்கமுடியாது)
4. கிறிஸ்து பிறந்த 8 ஆம் நாள் அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது.
5. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்
6. பஸ்கா பண்டிகைக் கொண்டாடினார்
இன்னும் இப்படி பல காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலே சொன்னதுபோல விருத்தசேதனமோ, பலியோ, 7ஆம் நாள் ஓய்வுநாளாக ஆசரிப்பதையோ நாம் போதிப்பதுமில்லை, கடைபிடிப்பதுமில்லை ஏன்?
ஏன் என்பதற்கு நிருபத்தில்தான் விடைகள் உள்ளன, இயேசு கிறிஸ்து இவைகளைக் குறித்து எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை அதாவது சுவிசேஷபுஸ்தகங்களில், நாம் பலி செலுத்தத் தேவையில்லை என்று எந்த ஒரு இடத்திலும் வாசிக்கமுடியாது.
இவையெல்லாம் நாம் அப்போஸ்தலர்களின் உபதேசம் மூலமாக பின்பற்றிவருகிறோம். இன்றைக்கு பழையஏற்பாடு கூட அப்போஸ்தலர்களின் உபதேசத்தின் அடிப்படையில் சீர்த்தூக்க்கிப்பார்த்து சபையில் பின்பற்றுவது நல்லது. இது தெரியாமல் சில போதகர்கள், பழையஏற்பாட்டு போதனையான அறுப்பின்பண்டிகை, போன்றவற்றை சபைக்குள் நுழையச்செய்திருப்பது வேதனையானது.
பழையஏற்பாட்டில் சில பரிசுத்தவாங்கள், எதிரிகளை சபித்தும், பழித்தும் ஜெபித்துள்ளதை பார்க்கமுடியும், ஆனால் கிறிஸ்துவோ அப்போஸ்தலரோ இதை நாம் செய்யக்கூடாது என்று போதித்தனர். ஆக மொத்தத்தில் இன்று நாம் அப்போஸ்தலர்களின் அஸ்திபாரமாகிய அவர்களுடைய உபதேசத்தில் கட்டப்பட்டுவருகிறோம் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum