மேட்டூர் அணை
Tue Dec 15, 2015 4:40 pm
சேலத்துக்கு மாம்பழம் போல, மேட்டூருக்கு மேட்டூர் அணைதான் பெருமை. பரந்து விரிந்து கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணைக்கு விசிட் அடித்து, நாங்கள் தேக்கிய செய்திகள்...
ஒவ்வொரு வருடமும் அணையின் நீர் இருப்பைப் பொறுத்து, டெல்டா பாசனத்துக்காக, ஜூன் மாதம் 12 முதல் ஜனவரி 28 வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைப் பகுதியைச் சுற்றி 4,000 மீனவக் குடும்பங்கள் உள்ளன.
இங்கே உள்ள சுரங்க மின் நிலையத்தில் தினமும் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையின் கீழ்ப் பகுதியில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் ‘லேடி ஃபெடெரிக் ஸ்டேன்லி’ பூங்கா உள்ளது. இது, மக்களின் பயன்பாட்டுக்கு 21.08.1934-ல் திறந்துவைக்கப்பட்டது.
கிராமப்புற மக்களுக்கு சிக்கனமான சுற்றுலா தலமாக இந்தப் பூங்கா உள்ளது. ஆடிப் பெருக்கு, வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின்போது, பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் பார்வையிட்டுச், செல்கின்றனர்.
இந்த அணையின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் மூலம் 34 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் உண்டு.
இந்த அணை 20.7.1925-ல் தொடங்கி, 21.08.1934-ல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதுதான் உலகிலேயே உயரமான நேர்க்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கம் மற்றும் ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம்.
இந்த அணையின் பொறியாளர், கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். 4 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அன்றைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி பெயரால், ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்று அழைக்கப்பட்டது.
அணையின் மொத்த நீளம் 5,300 அடி. ஆற்றின் படுகை மட்டத்தில் இருந்து 176 அடி உயரம். கீழ்மட்ட மதகின் அடிமட்டத்தில் இருந்து 120 அடி உயரம். உபயோகப்படுத்தும் நீரின் கொள்ளளவு 93.470 டி.எம்.சி. முழுக் கொள்ளளவு 95.660 டி.எம்.சி. 81 ஆண்டுகளில் 38 முறை முழுக் கொள்ளளவை இந்த அணை எட்டியுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு சிக்கனமான சுற்றுலா தலமாக இந்தப் பூங்கா உள்ளது. ஆடிப் பெருக்கு, வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின்போது, பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் பார்வையிட்டுச், செல்கின்றனர்.
அணையின் அடிப் பகுதியில் 4,400 அடி நீள சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 2011-ம் ஆண்டு 75 அடி உயர பவள விழா நினைவுக் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது, ஆறு தளங்களைக்கொண்டது.
இந்த அணையின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழகத்தின் மூலம் 34 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களும் உண்டு.
- -மா.விஜய் ஆகாஷ், எஸ்.ஹரிஸ் பிரசன்னா, எஸ்.தீபிகா, கனிமொழி, சாந்தகுமார் ராஜ், எம்.விஜய், தேவதர்ஷிணி, அம்சவேணி, இளமதி, ஸ்ரீநாத்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum