க்ரிஸ்பி கோபி
Sat Dec 12, 2015 2:43 pm
க்ரிஸ்பி கோபி
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - ஒரு கப் (பூவாக உதிர்த்தது)
பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
ரவை - 2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 2 என்னம் (பெரியதாக வெட்டியது )
குடைமிளகாய் - ஒரு என்னம் (விதையை நீக்கி பெரியதாக வெட்டியது)
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
கறுப்பு உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு
செய்முறை:
1.குடைமிளகாயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கவும். காலிஃப்ளவரை சிறிய பூவாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
2.சில்லி சாஸ், தக்காளி சாஸ், கறுப்பு உப்பு ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3.ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவரை போட்டு அதில் அரிசிமாவு, கடலைமாவு, ரவை, மிளகாய்தூள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
4.வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்திருக்கும் இந்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5.மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.
6.வெங்காயம் வதங்கியதும் அதனுடன் குடைமிளகாய் சேர்த்து எட்டு நிமிடம் வதக்கவும்.
7.வெங்காயம், குடைமிளகாய் வாசனை வரும் பொழுது சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
8.அதில் பொரித்து தனியாக எடுத்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
9.வதக்கிய குடைமிளகாய், காலிஃப்ளவர் கலவையில் கறுப்பு உப்பு தூவி கிளறி விட்டு இறக்கவும்.
10.இதனை சூடாக பரிமாறவும். க்ரிஸ்பி கோபி தயார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum