முஸ்லீம் ராணுவ வீரர்கள் கைது...
Mon Dec 07, 2015 6:45 pm
பல முஸ்லீம் ராணுவ வீரர்கள் கைது...
இந்திய ராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்கு வெளியிட்டதற்காக பல முஸ்லீம் ராணுவ வீரர்கள் கைது...
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரரை, மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5-ஆக உயர்ந்தது.
இதுகுறித்து தில்லி காவல்துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ், செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
இந்திய ராணுவ ரகசியங்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்த்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராணுவ வீரர் ஃபரீத் கானை, சிலிகுரியில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.
உளவு பார்த்த குழுவில், ஃபரீத் கானுக்கு "அறுவை சிகிச்சை நிபுணர்' (சர்ஜன்) என்ற ரகசிய குறியீடு பயன்படுத்தப்பட்டது. கஃபைதுல்லா கான் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகட்டில் ஃபரீத் கானுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவர் மீது அரசு ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், திங்கள்கிழமை தில்லிக்கு கொண்டு வரப்படுவார் என்று ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கில், கஃபைதுல்லா கான் என்பவர் கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பிறகு அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அப்துல் ரஷீத் என்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.
-Paul Prabhakar
Permissions in this forum:
You cannot reply to topics in this forum