எச்சரிக்கை... நிவாரண பொருட்கள் வழங்க செல்லும் தோழர்களுக்காக....
Sat Dec 05, 2015 1:09 pm
ரூல் நம்பர்..1
எந்த ஊருக்கு நிவாரணபொருட்கள் எடுத்து சென்றாலும் அதனை உங்கள் குழுவினர் கையால் கொடுங்கள்... நான் தான் ஊர் தலைவர்.. என்கிட்ட கொடுங்க என்று சொன்னால் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள்... முக்கால்வாசி பொருட்களை அபிட் விடும் ஆட்களே ஊர் தலைவர் போர்வையில் வளைய வருகின்றார்கள்..
ரூல் நம்பர்..2
தெரியாத ஊருக்கு செல்கின்றீர்கள் என்றால்.. அந்த ஊரில் இருக்கும் ஆசிரியர் நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.. அவர்களுக்கு தெரியும் எங்கே நிவாரணம் அதிக தேவை என்று..
ரூல் நம்பர்..3
எல்லோரும் தலைநகரத்திலேயே கொடுக்க வேண்டாம்... உங்கள் உதவிகள்....
கூக்குரல் காட்டு கத்து கத்தினாலும் கேட்காத உள் கிராமங்களுக்கு புறநகர் பகுதிகளுக்கும் சென்று வழங்குகள்...
ரூல் நம்பர்..4
நிவாரண பொருட்கள் வழங்கும் வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த ஊருக்கு சென்று வமெல்ல விசாரித்து விட்டு அதன் பின் அந்த ஊருக்கு என்ன தேவையோ... அதை மட்டும் அங்கே கொடுங்கள்... செம டயர்டா இருக்கு இங்கேயே கொடுத்துட்டு போய் தொலைவோம் என்று நினைக்காதீர்கள்... இன்னும் இரண்டு கிலோமீட்டரில் நீங்கள் கொடுக்கும் வாட்டர் பாக்கெட்டில் வாய் நனைக்க ஏதாவது ஒரு ஜீவன் காத்திருக்கலாம்..
ரூல் நம்பர்..5
நீங்கள் நுழையும் முதல் ஊரிலேயே... எங்களுக்கே நிவாரணம் கிடைக்கலை.. அடுத்த ஊருக்கு எடுத்துக்கிட்டு போறிங்களா-? என்று மலைக்கள்ளன் கணக்காக உங்களிடம் பொருட்களை உங்கள் கண் எதிரில் அபகரிக்க முயற்சிக்கலாம் ஜாக்கிரதை..
ரூல் நம்பர்..6
முதல் ஒருவாரம் உணவுதான் பிரதானம் என்று எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு உதவிகளை செய்து விட்ட திருப்தியோடு அடுத்தவேலையை பார்க்க போய்விடுவார்கள்... ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாகவே அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் உதவி இரண்டாம் வாரத்தில் இருந்து தான் தேவை அதிகரிக்கும்... அதனால் இதே உழைப்பை சிலவாரம் கழித்து உடை மற்றும் அரிசி பருப்பு பாத்திரங்கள் என்று சில குழுக்கள் உதவிகளை தள்ளி செய்யலாம்...
ரூல் நம்பர்..7
தயவு செய்து பதுசாக பேசி வெளியே வரும் வழியை பாருங்கள்... விதாண்டாவாதம் வேண்டாம்... எப்படியும் அந்த ஊரில் ஒரு வெட்டிகேசு வெண்ணலிங்கம் நோவாமல் நோம்பு கும்பிட உதவி செய்யும் குழுவினை வார்த்தைகளில் உரசி பார்க்கும்... அந்த நேரத்தில் அதுக்கு ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா கொடுத்தால் அது அடங்கி விடும்... அது மட்டுமல்ல.. நமக்கு அதிகம் பேரிடம் நம் கொண்டு செல்லும் பொருட்கள் கொண்டு சேர வேண்டும்... காரியம்தான் முக்கியம் என்பதை மறவாதீர்கள்...
ரூல் நம்பர்..8
அந்த ஊரில் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆட்களை வைத்துக்கொண்டு வழங்குவது போலிகளை இனம் கண்டு கொள்ள தோதாக இருக்கும்...அதே போல இரண்டு பேரும் சண்டை போடாமல் பார்த்துக் கொள்வது ரொம்ப முக்கியம்...
நிவாரண உதவி செய்துக் கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளம் கொண்ட குழுக்களும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
குறிப்பு....
(2012 ஆம் ஆண்டு.. சிங்ககையில் இருந்து தம்பி ரோஸ்விக் கொடுத்த நிதிஉதவியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் நானும் தம்பியண்ணன் அப்துல்லா, ஜோசப் பால்ராஜ் போன்றவர்களோடு 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்த அனுபவத்தில் எழுதியது...)
M.m. Abdulla

Permissions in this forum:
You cannot reply to topics in this forum