பழம் புளி - கோடம் புளி
Sat Nov 28, 2015 12:31 pm
இன்று நாம் எல்லோரும் சமையலில் பயன்படுத்தும் புளி, ஒரு காலத்தில் நம் நாட்டில் பயிரிடப்படவில்லை. மிளகாய் வற்றல், நிலக்கடலை போன்று இந்தப் புளியும் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்த ஒன்று. காலப்போக்கில் நம் நாட்டிலேயே பயிரிடப்பட்டு இன்று நம் நாட்டுப் பொருளாகிவிட்டது.
இந்தப் புளி நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பாக நாம் ஒரு புளியைப் பயன்படுத்தினோம், அதுதான் பழம்புளி. புதிய புளி வந்ததும் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அந்தப்புளிக்கு பழம்புளி என்ற பெயர் வந்தது. குணபாட நூற்கள் கூறுவது போல் பழம்புளி என்றால் பழமை ஆகிவிட்ட அல்லது நாட்பட்ட சாதாரண புளி என்பது தவறு. பழம் புளி என்பது இன்றும் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் கிடைக்கும் கோடம்புளியே தமிழ் மருத்துவம் கூறும் பழம்புளி.
தாவரவியல்படி இப்புளி கார்சினியா கம்போசியா என்ற மரத்திலிருந்து பெறப்படுகிறது. மேலே குறிப்பிட்ட இடங்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் பழம்புளி என்று கேட்டால் இந்த கோடம் புளியையேத் தருவார்கள்.
பழம்புளியின் தன்மைகள் :
பழம்புளியின் தன்மைகள் :
"தீதில் பழம்புளியைச் சேர்க்கத் திரிதோடம்;
வாதமொடு சூலை கபம் மாறுங்காண் - ஓதுசுரஞ்
சர்த்தியென்ற தோடமிவை சாந்தமாங் கண்ணோய் போம்;
பித்தமென்ற பேரொழியும் பேக ''
தீமையில்லாத பழம்புளியைச் சேர்த்தால் வளி, அழல், ஐய என்ற முக்குற்ற நோய்களும் மாறும். வளி, வலி மற்றும் நெஞ்சில் சளி மாறும். காய்ச்சல், வாந்தி சாந்தமாகும். அழல் நோய்களை விரட்டும் என்பது இதன் பொருள்.
பழம்புளியிலுள்ள வேதிப்பொருட்கள் :
Garcinia வில் மட்டும் 200 வகை இனங்கள் உள்ளது. இந்தியாவில் 30 வகை காணப்படுகிறது. இவ்வகை Garcinia indica, Cambogia வில் உள்ள சத்துக்கள் Garcinol, isogarcinol 13-0 metheyl ether, xanthochymol etc.
அறிவியல் ஆய்வுகள்
பழம்புளிக்கு
Anti - Cholesterol Anti Cancer
Anti Inflammatory Anti-Viral
Anti-Oxidant Anti-bacterial
Anti-Ulceration Anti-Carchinogenic
Anti - Tumour Properties போன்ற தன்மைகள் உள்ளன.
புளி:
இன்று நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியைப் பற்றி சித்த மருத்துவம் பின்வருமாறு கூறுகிறது.
'புத்தியும் மந்தமாகும் பொருமியே உடலுமூதும்;
பத்தியம் தவறும் சந்தி பாதமாம் சுரங்கன் வீறுந்
சந்தியும் பித்துத் தீரும் தனுவெல்லாம் வாத மேறும்;
மத்தியன் தாதுபுட்டி வருந்திரை நரை புளிக்கே''
அறிவு அழியும், உடல் ஊதும், அடலில் வளிக்குற்றம் மிகும், சுக்கிலம் வற்றும், நரை திரை உண்டாகும். வாந்தி மற்றும் அழல் நோய்களுக்கு நன்மை பயக்கும். மருந்துண்ணும் போது தவறாக இதைக் கொண்டால் சுரம், வளி, அழல் ஐய நோய்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள்.
வேதிப்பொருட்கள் :
Tamarindus indicus வில் உள்ள சத்துகள் 81. அவற்றில் சில 2-Fur-Fural, Hexa adecanoic acid, Phenyl acetaldehyde, Tartaric acid etc.,
இந்தப் புளிக்கு உடல்தேற்றி, வயிற்றுப் புழுக்கொல்லி, சுரமகற்றி, மலமிளக்கி என பல செய்கைகளுடன் புண்களை ஆற்றுதல், தொண்டைக் கம்மல் குணமாதல் போன்ற பயன்கள் உள்ளது (இருப்பினும் அளவில் அதிகப்படும் போது பொருத்துகளில் வலி, தூக்கம், உடல் பலமின்மை, மனஅழுத்தம் ஆகியவை உண்டாகிறது). டார்டாரிக் அமிலம், ஆற்றலாக மாற வேண்டிய உடலின் சத்துக்களை (Gulocose) Krebs cycle இல் பங்குபெறுவதைத் தடுக்கிறது. அதனால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. மேலும் Malic acid உற்பத்தி தடுக்கப்படுவதால் தசைகளின் இயக்கத்திலும் கோளாறு ஏற்படுகிறது.
பழம்புளி வலி முதலான முப்பிணியையும் ஓட்டும். ஆனால் புளி முப்பிணியையும் தொடரச் செய்யும். எனவே, புளி சேர்க்க விரும்புவோர் கோடம்புளி என்ற பழம்புளியைப் பயன்படுத்துவது நலம். பழம்புளி இன்று உடல் பருமனைக் குறைக்க உதவும் அருமருந்தாகவும் பயன்படுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum