திருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்!
Wed Nov 25, 2015 9:24 pm
பாஸ்போர்ட்...
திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் என பிரித்துக் கணக்கிடும் அளவுக்கு ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இனிஷியல் துவங்கி முகவரி வரையிலான அடையாள மாற்றங்கள் நிறைய! அதில் ஒன்றுதான், அரசு ஆவணமான பாஸ்போர்ட்.
`திருமணத்துக்குப் பின்னர் பாஸ்போர்ட்டில் பெண்கள் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? அதற்கான வழிமுறை என்ன?’ என்பது பற்றி கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.சசிக்குமார் சொல்கிறார்.
“பொதுவாக பாஸ்போர்ட்டில் இரண்டு பெயர் இருக்கும். ஒன்று சம்பந்தப்பட்டவருடைய பெயர். மற்றொன்று குடும்பப் பெயர் (sur name). இதைப் பொறுத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தமிழகத்தில் தந்தை அல்லது கணவர் பெயரை `சர் நேம்’ ஆக குறிப்பிடுகிறோம். கேரளாவில் வீட்டுப் பெயர், ஆந்திராவில் சாதி பெயர், வடமாநிலங்களில் சாதி, குடும்பப் பெயர்கள் `சர் நேம்’ ஆக இடம் பிடிக்கின்றன. இவை தவிர, பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் தந்தை, தாய், கணவர்/மனைவி உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்படும்.
தமிழகத்தில், திருமணமாகும் வரை தந்தை பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்ளும் பெண்கள், திருமணத்துக்குப் பின்னர் கணவர் பெயரை இனிஷியலாக வைத்துக்கொள்கின்றனர். அவர்கள் பாஸ்போர்ட்டிலும் `சர் நேமை' மாற்றிக்கொள்ள வேண்டும்.
2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து திருமணப் பதிவை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அதன் பின்னர் திருமணமானவர்களுக்கு, பாஸ்போர்ட் ஃபார்மாலிட்டிகளில் திருமணப் பதிவு சான்றிதழ் அவசியம். அதோடு நோட்டரி வழக்கறிஞரிடம் திருமண விவரங்களைத் தெரிவித்து, ANNEXURE D எனும் அஃபிடவிட்டை தாக்கல் செய்ய வேண்டும். 2009 நவம்பருக்கு முன்னர் திருமணமானவர்களுக்கு திருமணப் பதிவுச் சான்று அவசியமில்லை. ஆனால், ANNEXURE D அஃபிடவிட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
திருமணத்துக்குப் பின்னர் கணவர் பெயருக்கு மாற்றி, மீண்டும் தந்தை பெயருக்கே மாற்ற சிலர் விரும்புவார்கள். பிரிவு காரணமாகவோ அல்லது பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் தந்தை பெயர்தான் இனிஷியலாக இருப்பதால் அதே பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ, அதற்கு பெயர் மாற்ற பிரமாணப் பத்திரம் (நேம் சேஞ்சிங் அஃபிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், தமிழ், ஆங்கிலம் என இரு முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, அந்த நாளிதழ் விளம்பரத்தின் கட்டிங்கையும் இணைக்க வேண்டும்.
திருமணத்துக்குப் பின்னரும் பெண்கள் தந்தை பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாம். கட்டாயம் கணவர் பெயருக்கு மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், கணவர் வெளிநாட்டில் இருந்து, நீங்களும் அவருடன் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், உங்கள் பாஸ்போர்ட்டில் கணவரின் பெயர் `சர் நேம்’ ஆக இருக்கும் பட்சத்தில் எளிதில் விசா கிடைக்கும்” என்றார்.
ச.ஜெ.ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum