வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்!
Wed Nov 25, 2015 9:23 pm
வானிலையை ரமணன் மட்டுமல்ல சாதாரண பாமரனும் கணிக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கணினியில் இணையத்தில் இயங்கும் செயலி அல்ல இந்த கணிப்பு முறை .நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கப்பெறும் படங்களால் என்பதால் கணிப்பும் தவறாக இருக்காது.இதை பெறுவதற்கு சாதாரண கணினி அறிவு போதுமானதே.
ஆயிரம் ரூபாயில் ஒரு கருவி
RTL-SDR எனப்படும் ஒரு USB DONGLE மற்றும் ஒரு QHF (Quadrifilar Helix Antennas) ஆன்ட்டனா இரண்டையும் இணைக்க கொஞ்சம் கேபிள் வயர் என மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள் தான் செலவாகும். இந்த கருவியானது வெளிநாடுகளில் மிகப்பிரபலம்.இது வானிலைக்கு மட்டுமல்ல உங்கள் அலுவலக கதவை தொட்டால் உங்க ஸ்மார்ட் போனுக்கு தகவலை சொல்லும் கையில் ஒரு ட்ரில் இயந்திரத்தை இயக்கினால் அதன் வேகம் என்ன? என்பதை சொல்லும் இன்னும் பல பயன்கள் குறித்தும் ஆராய்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஜெர்மனியில் உள்ள பேருந்துநிறுத்தங்களில் இந்த RTL-SDR கொண்டு எந்த பேருந்து எங்கு வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் எவ்வளவு நேரத்தில் இந்த பேருந்துநிலையத்தை அடையும் என்பதுவரை கணித்துக்கொண்டு இருக்கிறது.இதில் ஆர்.டி.எல். என்பது அந்த கருவியில் பயன்படுத்தப்படும் பிராஸசர். எஸ்.டி.ஆர் என்றால் software defined radio ஆகும்.
சாதாரண ரேடியோ போல செயல்பாடு
இப்ப வானிலைக்கு வருவோம் .பொதுவாக நீங்க ரேடியோ பயன்படுத்தி இருப்பீர்கள் ஏன் செல்போன் எப்படி வேலை செய்கிறதோஅதே தொழில்நுட்பம் தான் இது. செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் ஒலிஅலைகள் எப்படி உங்கள் போன் வாயிலாக செவிகளுக்கு கேட்க்கிறதோஅதே போல நம் பூமியை சுற்றிவரும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள்(WXsat)அனுப்பும் ஒலிஅலைகளை QHF ஆன்ட்டனா
ஒயர் வாயிலாக RTL SDR கருவியை அடையும் .அந்த ஒலி அலையை SDR SHARP என்ற செயலி வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.வெறும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்க்கும். அந்த ஒலியை VIRTUAL CABLE வாயிலாக WXtoImg என்ற செயலிஒலியை நேரடியாக படமாக மாற்றித்தரும். WX என்பது WEATHER FAX என்பதை குறிக்கும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் லியோசர் செயற்கைக்கோள்களை (Low-Earth Orbiting Search And Rescue)அனுப்பியுள்ளனர்.
இந்த லியோசர் என்றால் பூமியை சுற்றிகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் அதனால் உலகின் எந்த ஒரு நாட்டின் வானிலையையும் இதன் மூலம் அறியலாம்.Gpredict என்ற செயலி உதவியோட இந்த நொடியில் செயற்கைக்கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்து தரவுகளை பெறலாம்.NOAA,Meteor,போன்றவை பிரபலமான லியோசர் வானிலை செயற்கைக்கோள்கள். இந்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அலைவரிசை எண் தகவல்கள்
NOAA 15 – 137.6200 MHz
NOAA 18 – 137.9125 MHz
NOAA 19 – 137.1000 MHz
Meteor - 137.100 or 137.900 MHz
இந்தியாவில் கல்பனா 1,இன்சாட் 3D போன்ற ஜியோசர் செயற்கைக்கோள்கள். (Geostationary Earth Orbit Search And Rescue)ஜியோசர் என்றால் பூமி எந்த வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களும் சுற்றும் அதனால்இந்த நொடி நம் நாட்டின் வானிலைவானிலை நிலை என்ன? என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இவை வானிலை ஆய்வு மையம் மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை பள்ளிகரணையில் செயல்பட்டுவரும் தென் இந்திய தன்னார்வ வானொலி சமூகம் (Siars) இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
-கவின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum