எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் 536 பணியிடங்கள்
Mon Nov 23, 2015 10:40 pm
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் ஸ்டாப் நர்ஸ், ஸ்டோர்கீப்பர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 536 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மருத்துவ மையங்கள் செயல்படுகிறது. தற்போது ரிஷிகேஷ், பாட்னா, போபால், ஜோத்பூர், டெல்லி போன்ற மருத்துவ மையகிளைகளில் ஏற்பட்டுள்ள நர்சிங், அட்டன்டர், மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன், ஸ்டெனோகிராபர், அனிமேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 536 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஸ்டாப் நர்ஸ் (கிரேடு-2) பணிக்கு 200 பேரும், குரூப் ஏ,பி,சி பணிகளுக்கு 165 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்டாப் நர்ஸ், அனிமேட்டர், ஜூனியர் ரெசிடென்ட் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். பொதுவாக 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள். பிளஸ்-2 தேர்வு அல்லது அதற்கு இணையான படிப்புகளுடன் செவிலியர் பயிற்சி படிப்புகளை முடித்தவர்கள் ஸ்டாப் நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மிட் வைப்பிரி, ஐ.டி.ஐ., பிளஸ்-2 மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட இதர படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல், திறமைத் தேர்வு போன்றவை நடத்தப்படும். ஸ்டாப் நர்சிங் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினர் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதுமானது. சில பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணங்கள் பணியிடங்களுக்கு ஏற்ப காசோலையாகவும், வேலைவாய்ப்பு அஞ்சல் முத்திரையாகவும் இணைக்கப்பட வேண்டும். ரிஷிகேஷ், பாட்னா மருத்துவ மையங்களில் விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் இணையதள விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். ஜோத்பூர், டெல்லி, போபால் போன்ற மையங்களுக்கு அஞ்சல் முறையிலும், நேரடி நேர்காணல் முறையிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஸ்டாப் நர்ஸ் பணிகளுக்கு வருகிற 27-ந் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான விவரங்களை பார்க்க www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
ஹைட்ரோ பவர் லிமிடெட்
நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது டிரெயினி என்ஜினீயர் மற்றும் டிரெயினி ஆபீசர் பணியிடங்களுக்கு 99 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கேட் தேர்விற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரெயினி என்ஜினீயர் பணிகளுக்கு 90 இடங்களும், டிரெயினி ஆபீசர் பணியிடங்களுக்கு 9 இடங்களும் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 1-4-2016-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும். பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், சிவில் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் டிரெயினி என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் எம்.எஸ்சி. அல்லது எம்.டெக். படிப்புகளில் விலங்கியல் பாடப்பிரிவினை தேர்ந்தெடுத்து படித்தவர்கள் டிரெயினி ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhpcindia.com என்ற இணையதளத்தை சொடுக்கவும்.
1-1-2016 முதல் 1-2-2016 வரை விண்ணப்பிக்கலாம்.
ரிட்ஸ்
ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்களுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 8 மேனேஜர் பணியிடங் களும், 22 அசிஸ்டன்ட் மேனேஜர் பணியிடங்களும் உள்ளன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்டரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது விவரங்கள், வயது வரம்பு தளர்வுகள், கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகிய கூடுதல் விவரங்களை www.rites.com என்ற இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2015.
விமான நிலையம்
கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட் டிரெயினி பணியிடங்களுக்கு 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கிரேடு III பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் படிப்புகளை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிரேடு V பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியோடு, கனரக வாகன ஓட்டுனர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும். வயது விவரம், தேர்வு செய்யப்படும் முறைகள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவற்றை career.cial.aero இணையத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-12-2015.
பாதுகாப்புத்துறையில் பணி
இந்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 20 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் என்ஜினீயர், மேனேஜர் போன்ற குறிப்பிட்ட அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி, வயதுத்தகுதி, வயதுவரம்பு தளர்வுகள், கட்டணம், தேர்வு செய்யப்படும் முறைகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை www.belindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 19-12-2015.
நர்சிங் பணிகள்
மேற்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி யிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பின்னர் நர்சிங் டிப்ளமோ முறையில் படித்திருப்பதுடன், நல்ல மதிப்பெண்களுடன் முடித்திருக்கவேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு ஆப்ட்டிடியூடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்படிவத்தை வடிவமைத்து பூர்த்தி செய்து, புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களை இணைத்து The Office, The Western Coalfileds Limiteds, Civil Lines, Nagpur -440001 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். வயதுத்தகுதி, மாதிரி விண்ணப்பப்படிவம் போன்ற கூடுதல் விவரங்களை westerncoal.nic.in என்ற இணையத்தில் காணலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1-12-2015.

- வங்கிகளுக்கு தொடர் விடுமுறை :ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு
- எல்லைக்காவல் படையில் 561 பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- இந்திய சர்வே துறையில் காலிப் பணியிடங்கள்
- ஸ்டேட் வங்கியில் 17,140 பணியிடங்கள் தமிழகத்திற்கு 1541 இடங்கள்
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயர், விஞ்ஞானி பணியிடங்கள்.!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum