ரத்தத்தை சுத்திகரிக்கும் சுக்கான் கீரை...
Sat Nov 14, 2015 3:59 pm
நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தை சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.
சுக்கான் கீரையைத் தண்ணீர் விட்டு அலசி, வறுத்த உளுந்தம் பருப்புடன் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி சட்னியாக அரைத்து, காலை உணவில் சேர்த்துச் சாப்பிடலாம்.
சுக்கான் கீரையை அலசி, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து.
கால்சியம் அதிகம் இருப்பதால், மதிய உணவில் பொரியலாக சேர்த்துக்
கொள்ளலாம். வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.
சுக்கான் கீரையுடன் ஏதாவது ஒரு பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் நீங்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum