சுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்
Fri Nov 13, 2015 8:41 am
கார்பரேட்களுக்கு லோன் கொடுக்கும் போது சலுகை அல்லது கரிசனம் காட்டும் வங்கிகள் தனி நபர்களாக சென்றால் எல்லாம் சரியாக இருந்தாலும் எளிதில் லோன் கொடுப்பதில்லை.
அப்படியே எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் செக்யூரிட்டி என்ற பெயரில் சொத்து பத்திரங்கள் கேட்கப்படும்.
இந்த செக்யூரிட்டி கொடுக்க முடியாமலே பல திறமை உள்ள இளைஞர்கள் சுயதொழில் துவங்க முனைப்பு காட்டுவதில்லை.
அவர்களுக்கு அரசு கொண்டு வந்துள்ள முத்ரா திட்டம் நன்கு பயனளிக்கும்.
MUDRA என்பதன் விரிவாக்கம் Micro Units Development Refinance Agency என்பதாகும். அதாவது சிறு, குறு தொழில்களை துவங்குபவருக்கு பத்து லட்சத்துக்குள் கடன் கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம்.
நல்ல வியாபர திட்டம் உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். உற்பத்தி, சேவை, பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இது வரை அரசின் சார்பில் 24,000 கோடி ரூபாய் முத்ரா கடனுக்காக செலவிடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கீழே உள்ள பல தரப்பு வங்கிகளில் நாம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
- SBI, IOB போன்ற பொதுத் துறை வங்கிகள்
- ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகள்
- முத்தூட் போன்ற மைக்ரோ பைனான்ஸ் சிறிய வங்கிகள்
முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன்கள் மூன்று வழிகளில் வழங்கப்படுகிறது.
ஐம்பதாயிரம் வரையிலான கடன்கள் சிசு (Shishu) என்ற பெயரிலும். ஐந்து லட்சம் வரையிலான கடன்கள் கிசோர்(Kishor) என்ற பெயரிலும், ஐந்து லட்சத்துக்கு மேலான கடன்கள் தருண்(Tarun) என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றன.
60% வரையிலான கடன்கள் சிசு முறையிலும், மீதி 40% மற்றவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அதனால் சிசு திட்டத்தில் எளிதில் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம்.
60% வரையிலான கடன்கள் சிசு முறையிலும், மீதி 40% மற்றவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அதனால் சிசு திட்டத்தில் எளிதில் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு பெறும் கடன்களை ஐந்து வருடங்களுக்குள் திருப்பி கட்டிக் கொள்ள வேண்டும்.
சொத்து உத்தரவாதம் எதுவும் கொடுக்க தேவையில்லை.
இந்த கடனை பெறுவதற்கு கீழே உள்ள ஆவணங்கள் தேவைப்படுகிறது.
- அடையாள அட்டை (Voter ID card / driving license / PAN card/ Passport)
- வீட்டு முகவரி அட்டை (Voter ID card / Aadhar card / Passport)
- இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்
- வியாபரத்திற்காக வாங்கும் இயந்திரங்கள் மற்றும் சப்ளை செய்பவர்கள் குறிப்பிடும் விலை விவரங்கள்
- தொழிலகம் முகவரி தொடர்பான அடையாள ஆவணங்கள்
- SC/ST/OBC சாதி சான்றிதழ்
நமக்கு அருகில் உள்ள வங்கி கிளைகளில் இது தொடர்பாக தொடர்பு கொள்ளலாம். சரியான பதில் கிடைக்காவிட்டால் கீழே உள்ள முத்ரா திட்ட தொடர்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய: http://www.mudra.org.in/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum