உங்கள் திறமையை உலகம் பார்க்கும்!
Tue Nov 10, 2015 9:13 am
கூகுள்-டூடுள்!
கூகுள் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன டூடுள்? உங்கள் வீட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகள் இருக்கிறார்களா? ‘அப்போ, நீங்க தாங்க இந்தத் தகவல அவசியம் தெரிஞ்சு வச்சுக்கணும்…!'. கூகுளின் முகப்புப் பக்கத்தில் வெளிப்படும் கூகுள் லோகோ, பண்டிகை தினங்களிலும், சாதனை மனிதர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களிலும் ஒவ்வொரு டிஸைனில் வெளிப்படுகிறதல்லவா? இதற்குப் பெயர்தான் டூடுள்.
நம் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கும். அவர்களுடைய அடையாளமாக இருப்பதே அவர்கள் திறமைகள்தான். அவர்களின் திறமையைக் கண்டறிவதே ஒரு கலைதான்.
முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரதம் ஆடுவது என்பது மட்டுமே குழந்தைகளின் ஹாபியாக இருந்தது. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, கம்ப்யூட்டரில் படம் வரைவது, கம்ப்யூட்டரில் கதை,கட்டுரை எழுதுவது போன்றவை திறமை மட்டுமல்ல, அதுவே வாழ்வாதாரமாகவும் மாற வாய்ப்புள்ளது.
எல்லா திறமைகளுக்கும் அடிப்படை ஆதாரம், கிரியேட்டிவிட்டி. மனதுக்குள் ஒரு விஷயத்தை கற்பனை செய்ய முடிகிறது என்றாலே அடுத்த கட்டமாக அதை எழுத்து வடிவிலோ, படம் வடிவிலோ அல்லது ஒலி-ஒளி வடிவிலோ அதற்கு உருவம் கொடுப்பதுதான் திறமையை வெளிப்படுத்துவதின் சூட்சுமம்.
இதற்கு இன்றைய தொழில்நுட்பங்கள் பெருமளவுக்கு உதவுகின்றன. திறமைகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்த பிளாக், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவை உதவுகின்றன. ஒலி வடிவில் வெளிப்படுத்த சவுண்ட் கிளவுட், ஒலி-ஒளி வடிவில் வெளிப்படுத்த யு-டியூப் என ஏராளமான வெப்சைட்டுகள் ஆன்லைனில் இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளின் திறமையை ஊக்கப்படுத்துவதில் கூகுள் முன்னணி வகிக்கிறது.
சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் வேஸ்ட் பேப்பரில் கிறுக்குவதில் இருந்து தொடங்கி ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுப்பது வரை அத்தனையுமே கிரியேட்டிவிட்டிதான்.
லேரியும் (Larry), செர்ஜேவும்(Sergey) இணைந்துதான் கூகுள் சர்ச் இன்ஜினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். 1998-ம் ஆண்டு இவர்கள் GOOGLE என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாக உள்ள O-விற்கு ஒரு குச்சி வடிவ படத்தை இணைத்து OUT OF OFFICE என்ற செய்தியை தெரிவிக்கும் அறிவிப்பாக வெளிப்படுத்தினார்கள். இது பெருத்த வரவேற்பை பெற, முக்கியமான தினங்களுக்கு கூகுள் லோகோவை வடிவமைத்து வெளியிடும் வழக்கம் உண்டானது.
1998-ம் ஆண்டு ‘தேங்க் கிவிங் டே’ தினத்துக்காக வடிவமைக்கப்பட்ட லோகோ, 1999-ம் ஆண்டு ‘ஹாலோவின்’ தினத்துக்காக கூகுள் வார்த்தையில் உள்ள இரண்டு O – க்களுக்கு இணைக்கப்பட்ட பூசணிக்காய்களும் இணைய மக்களிடைய ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
இரண்டு வருடங்கள் அப்படியும், இப்படியுமாக கூகுள் லோகோவில் டூடுள் வடிவத்தை அலங்கரித்து வெளியிட்டு வந்த கூகுள் நிறுவனம், அதன் பிறகு அந்த நிறுவனத்தில் வெப் மாஸ்டராக பணியாற்றி வந்த ‘டென்னிஸ் ஹ்வாங்’ (Dennis Hwang) என்பவரை முதன்மை டூடுளராக பணி உயர்வு செய்தது.
அதன் பிறகு விடுமுறை தினங்கள், சிறப்பு தினங்கள், வரலாற்று முக்கிய தினங்கள், சாதனையாளர்கள் பிறந்த தினம், நினைவு தினம் என டூடுள் கான்செப்ட்டுகள் அதிகரித்து, அதன் டிஸைனில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வெளிப்பட ஆரம்பித்தது. மக்களும் (நாம் தான்) இதை விரும்பி வரவேற்கத் தொடங்கினார்கள்.
1998-ம் ஆண்டில் இருந்து இதுவரை தோராயமாக 2000 – க்கும் மேற்பட்ட டூடுள்கள் உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை http://www.google.com/doodles என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.
நீங்கள் ஐடியா மன்னரா?
கூகுள் டூடுளுக்கு உங்களுக்கும் கான்செப்ட் கொடுக்க கற்பனை பெருக்கெடுக்கிறதா? அவற்றை proposals@google.com என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரியோடு அனுப்பி வையுங்கள்.
கூகுள் டூடுளுக்கு பள்ளி சிறுவர்களின் பங்களிப்பு
கூகுள் டூடுளாக பள்ளி சிறுவர்களின் படைப்புகளையும் வெளியிடுகிறது கூகுள். இதற்காகவே முறையாக போட்டிகளை நடத்தி தேர்வு செய்கிறார்கள். போட்டிக்காக ஒரு கருத்தை (Theme) தேர்வு செய்து தலைப்பையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த வருடம் அவர்கள் கொடுத்த தலைப்பு, "If I could create something for India, it would be...". கூகுள் (Google) என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் (G-O-O-G-L-E) அவர்கள் கொடுக்கின்ற கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைத்து படைப்புத்திறனை காண்பிக்க வேண்டும். இதுதான் அவர்களின் விதிமுறை. ஒவ்வொரு வருடமும் போட்டிக்கான அறிவிப்பை www.google.co.in/doodle4google/ என்ற வெப்சைட் முகவரியில் வெளியிடுகிறார்கள்.
1-3 வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு குழு, 4-6 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு, 7-10 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு என பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவில் இருந்தும் 4 மாணவர்களின் படைப்புகள் என மொத்தம் 12 மாணவர்களின் படைப்புகளை தேர்வு செய்கிறார்கள்.
இவற்றை அவர்கள் வெப்சைட்டில் (www.google.co.in/doodle4google/) வெளிப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து அவர்கள் விரும்பும் படைப்பை ஓட்டளிக்கச் செய்து, அதில் இருந்து ஒரு மாணவரின் படைப்பை தேர்வு செய்து, தேசிய அளவில் வெற்றியாளராக (National Winner) அறிவிக்கிறார்கள். பிறகு அதை கூகுளின் லோகோவாக ஹோம் பேஜில் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு குழுவில் இருந்தும் தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படும். மேலும் அவர்கள் படைப்பு கூகுள் டூடுள் வெப் பக்கத்தில் பொதுவான பார்வைக்கு வெளிப்படுத்தப்படும். தேசிய அளவில் தேர்வான மாணவருக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படுவதோடு, கூகுள் ஹோம் பேஜில் அவரது படைப்பு லோகோவாக வெளிப்படுத்தப்படும். மேலும் அதற்குச் சான்றாக மெடல் வழங்கப்படும்.
www.google.co.in/doodle4google என்ற வெப்சைட்டில் இந்த வருட போட்டில் பங்கேற்ற மாணவர்களது படங்கள் இவை...
கூகுள் டூடுள் போட்டி இந்த வருடம் முடிவடைந்து விட்டாலும், இந்த போட்டி பற்றி தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளேன். நன்றி: www.google.com
Disclaimer
கூகுள் வெப்சைட்டில் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், விதிமுறைகளிலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தப் பதிவில் பயன்படுத்தி உள்ள தகவல்கள் மற்றும் படங்கள், லோகோக்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானது.
- காம்கேர் கே. புவனேஸ்வரி

டூடுள் உருவான கதை
லேரியும் (Larry), செர்ஜேவும்(Sergey) இணைந்துதான் கூகுள் சர்ச் இன்ஜினை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். 1998-ம் ஆண்டு இவர்கள் GOOGLE என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாக உள்ள O-விற்கு ஒரு குச்சி வடிவ படத்தை இணைத்து OUT OF OFFICE என்ற செய்தியை தெரிவிக்கும் அறிவிப்பாக வெளிப்படுத்தினார்கள். இது பெருத்த வரவேற்பை பெற, முக்கியமான தினங்களுக்கு கூகுள் லோகோவை வடிவமைத்து வெளியிடும் வழக்கம் உண்டானது.
1998-ம் ஆண்டு ‘தேங்க் கிவிங் டே’ தினத்துக்காக வடிவமைக்கப்பட்ட லோகோ, 1999-ம் ஆண்டு ‘ஹாலோவின்’ தினத்துக்காக கூகுள் வார்த்தையில் உள்ள இரண்டு O – க்களுக்கு இணைக்கப்பட்ட பூசணிக்காய்களும் இணைய மக்களிடைய ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.
இரண்டு வருடங்கள் அப்படியும், இப்படியுமாக கூகுள் லோகோவில் டூடுள் வடிவத்தை அலங்கரித்து வெளியிட்டு வந்த கூகுள் நிறுவனம், அதன் பிறகு அந்த நிறுவனத்தில் வெப் மாஸ்டராக பணியாற்றி வந்த ‘டென்னிஸ் ஹ்வாங்’ (Dennis Hwang) என்பவரை முதன்மை டூடுளராக பணி உயர்வு செய்தது.
அதன் பிறகு விடுமுறை தினங்கள், சிறப்பு தினங்கள், வரலாற்று முக்கிய தினங்கள், சாதனையாளர்கள் பிறந்த தினம், நினைவு தினம் என டூடுள் கான்செப்ட்டுகள் அதிகரித்து, அதன் டிஸைனில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வெளிப்பட ஆரம்பித்தது. மக்களும் (நாம் தான்) இதை விரும்பி வரவேற்கத் தொடங்கினார்கள்.
நிலையான படங்களாக வெளிப்பட்டு வந்த கூகுள் டூடுள், கடந்த சில வருடங்களாக HTML5 Canvas, Java Script போன்றவற்றைப் பயன்படுத்தி ,அசையும் படங்களாகவும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. விளைவு-டூடுள் இன்று டிஜிட்டல் அனிமேஷன், வீடியோக்கள், மலரும் பூக்கள், செதுக்கிய பூசணிக்காய் என கண்ணைக் கவரும் வண்ணம் புது அவதாரம் எடுத்துள்ளது.
1998-ம் ஆண்டில் இருந்து இதுவரை தோராயமாக 2000 – க்கும் மேற்பட்ட டூடுள்கள் உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை http://www.google.com/doodles என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.
நீங்கள் ஐடியா மன்னரா?
கூகுள் டூடுளுக்கு உங்களுக்கும் கான்செப்ட் கொடுக்க கற்பனை பெருக்கெடுக்கிறதா? அவற்றை proposals@google.com என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரியோடு அனுப்பி வையுங்கள்.
கூகுள் டூடுளுக்கு பள்ளி சிறுவர்களின் பங்களிப்பு
கூகுள் டூடுளாக பள்ளி சிறுவர்களின் படைப்புகளையும் வெளியிடுகிறது கூகுள். இதற்காகவே முறையாக போட்டிகளை நடத்தி தேர்வு செய்கிறார்கள். போட்டிக்காக ஒரு கருத்தை (Theme) தேர்வு செய்து தலைப்பையும் கொடுத்து விடுகிறார்கள். இந்த வருடம் அவர்கள் கொடுத்த தலைப்பு, "If I could create something for India, it would be...". கூகுள் (Google) என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் (G-O-O-G-L-E) அவர்கள் கொடுக்கின்ற கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைத்து படைப்புத்திறனை காண்பிக்க வேண்டும். இதுதான் அவர்களின் விதிமுறை. ஒவ்வொரு வருடமும் போட்டிக்கான அறிவிப்பை www.google.co.in/doodle4google/ என்ற வெப்சைட் முகவரியில் வெளியிடுகிறார்கள்.
படைப்புகளில் பயன்படுத்தும் கலர் மற்றும் படம் வரைவதில் அவர்கள் காண்பித்திருக்கும் நுணுக்கம், கூகுள் லோகோவில் கொடுக்கப்பட்டிருக்கும் தீமிற்குப் பொருத்தமாக வெளிப்படுத்தி இருக்கும் தனித்தன்மையிலான கிரியேட்டிவிட்டி, வரைந்த படத்திற்கு பொருத்தமாக அவர்கள் எழுதும் கருத்தும் அவற்றில் உள்ள தெளிவு இவற்றை வைத்துத்தான் படைப்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
1-3 வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு குழு, 4-6 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு, 7-10 வகுப்பு மாணவர்கள் ஒரு குழு என பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவில் இருந்தும் 4 மாணவர்களின் படைப்புகள் என மொத்தம் 12 மாணவர்களின் படைப்புகளை தேர்வு செய்கிறார்கள்.
இவற்றை அவர்கள் வெப்சைட்டில் (www.google.co.in/doodle4google/) வெளிப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து அவர்கள் விரும்பும் படைப்பை ஓட்டளிக்கச் செய்து, அதில் இருந்து ஒரு மாணவரின் படைப்பை தேர்வு செய்து, தேசிய அளவில் வெற்றியாளராக (National Winner) அறிவிக்கிறார்கள். பிறகு அதை கூகுளின் லோகோவாக ஹோம் பேஜில் வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வருடம் குழந்தைகள் தினமான நவம்பர் 14, 2015 அன்று இந்திய மாணவரது படைப்பை கூகுள், இந்தியா ஹோம் பேஜில் வெளிப்படுத்த உள்ளது. அந்த மாணவரின் படைப்பு 24 மணி நேரத்துக்கு கூகுள் ஹோம் பேஜில் வெளிப்படும். கூகுள் நடத்தும் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்வான 12 படைப்பளர்களுக்கும் விருது நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
ஒவ்வொரு குழுவில் இருந்தும் தேர்வான மாணவர்களுக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படும். மேலும் அவர்கள் படைப்பு கூகுள் டூடுள் வெப் பக்கத்தில் பொதுவான பார்வைக்கு வெளிப்படுத்தப்படும். தேசிய அளவில் தேர்வான மாணவருக்கு சான்றிதழ், லேப்டாப் வழங்கப்படுவதோடு, கூகுள் ஹோம் பேஜில் அவரது படைப்பு லோகோவாக வெளிப்படுத்தப்படும். மேலும் அதற்குச் சான்றாக மெடல் வழங்கப்படும்.
குறிப்பு
கூகுள் டூடுள் போட்டி இந்த வருடம் முடிவடைந்து விட்டாலும், இந்த போட்டி பற்றி தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவை எழுதியுள்ளேன். நன்றி: www.google.com
Disclaimer
கூகுள் வெப்சைட்டில் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கட்டுரை தயார் செய்யப்பட்டுள்ளது. வெப்சைட்டிலும், சாஃப்ட்வேரிலும், விதிமுறைகளிலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தப் பதிவில் பயன்படுத்தி உள்ள தகவல்கள் மற்றும் படங்கள், லோகோக்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானது.
- காம்கேர் கே. புவனேஸ்வரி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum