தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் Empty புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்

Thu Nov 05, 2015 3:03 pm
"புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன்...
மிகவும் பொருத்தமாகவே இருந்தது"



"புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை..."
"சப்தமிட்டு நடக்காதீர்கள்,
இங்கேதான்
என் அருமைத் தாயார் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்",


உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் ,
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது, நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால்
இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ".


மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்,
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு,
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது " ..


ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்,
"இங்கே புதை குழியில்கூட
இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்"....


அரசியல்வாதியின் கல்லறையில் ,
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள்,
இவன் எழுந்து விடக்கூடாது".


ஒரு விலை மகளின் கல்லறை வாசகம் ,
"இங்குதான் இவள் தனியாகத் தூங்குகிறாள்,
தொந்தரவு செய்யாதீர்கள்,
பாவம் இனி வர முடியாது இவளால்"....


இவ்வளவு தானா வாழ்க்கை??


ஆம் அதிலென்ன சந்தேகம்?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது
அடையாளம் தெரியாமல்..!


உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்,


அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்தபோது
ரஷ்ய தலை நகரில்
முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்கவிட்டு,
ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள் ....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,


ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.....!


நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்??


காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும்??


நமது பதவியா??


நாம் சேர்த்த சொத்து சுகங்களா??
நமது படிப்பா??
நமது வீடா??
நம் முன்னோர்களின்
ஆஸ்தியா??
நமது அறிவா??
நமது பிள்ளைகளா??


ஆணவத்தை பறைசாற்றும்
நமது ஜாதியா??


எது நம்மைக் காப்பாற்றப் போகிறது??


ரத்தம் சுருங்கி,
நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை... பசித்தவனுக்கு உணவு கொடுத்து,
ஆடை இல்லாதவனுக்கு
ஆடை கொடுத்து,
எல்லாரையும் நேசித்து,
மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்,
இறந்த பின்னும் இவர்களுக்கு இறைவனோடு பேரின்ப வாழ்க்கை!

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு
நம்மை காத்துக்கொள்ள வேண்டும்..


ஜாதி....
இந்தத்தீ தான் இன்றைய பயங்கரம்..
நல்லவன் கெட்டவன்
இந்த இரண்டு ஜாதி மட்டுமே நிஜம்.

ஒரே முறை வாழப்போகிறோம்,
எதை விதைக்கிறோமோ
அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்....


நல்ல செயல்களை,
எண்ணங்களை விதைப்போம்...!

அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக....!!


பிறரை வாழ வைத்து
நாம் வாழ்வோம்...!!!
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum