உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்
Sat Oct 31, 2015 10:16 pm
கொழுப்பு என்பது உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein. இவ்விரண்டு கொழுப்பு வகைகளுக்கு LDL என்று கெட்ட கொழுப்பு என்றும் HDL நல்ல கொழுப்பு என்றழைக்கப்படுகிறது. LDL கொலஸ்ட்ரால் என்பது, 139 மி.கி., குறைவாகவும், HDL கொலஸ்ட்ரால் என்பது ஆண்களுக்கு 40 கிராமிற்கு அதிகமாகவும் பெண்களுக்கு, 25 கிராமிற்கு மேலாகவும் இருத்தல் வேண்டும். HDL கொலஸ்ட்ரால் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகுறையும் போது, இதய நோய் ஏற்பட வழி பிறக்கிறது. மேலும் பெரும்பாலும், இந்தியர்களின் HDL கொழுப்பு அளவு சராசரியை விட குறைவாகவே உள்ளது. எனவே, HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தினால், ரத்த குழாய் அடைப்பு ஏற்படாது. HDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்ய வேண்டியவை தினசரி உடற்பயிற்சி, புகையை விடுதல், புரத எண்ணெய் உபயோகிப்பதை குறைத்தல் போன்றவை மூலம், HDL கொலஸ்ட்ரால் அளவை உயர்த்த முடியும். மேலும், உணவில் தினசரி சில பொருட்களை சேர்ப்பது மூலம், HDL என்ற கொழுப்பின் அளவை உயர்த்த முடியும். வெங்காயம் தினமும், பாதி அளவு வெங்காயத்தை சாப்பிடும் போது, HDL அளவு, 25 சதவீதம் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இப்படி சாப்பிட முடியாதவர்கள் சாலட் மற்றும் வேறு உணவுப் பொருட்களுடன் இணைத்துச் சாப்பிடலாம். சோயாபீன்ஸ் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, HDL என்ற நல்ல கொலஸ்ட்ரால் உர வழிவகை செய்கிறது. சோயாபீன்ஸ் உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். மூக்கடலை, வெள்ளை மூக்கடலை, ராஜ்மா போன்ற உடைக்காத முழு தானிய பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மேலும், தியான பயிற்சிகளும், மனதிற்கு சந்தோஷமான சூழ்நிலையும் HDL கொலஸ்ட்ரால் உயர துணை புரிகின்றன. |
Permissions in this forum:
You cannot reply to topics in this forum