மழைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு டிப்ஸ்...
Sat Oct 31, 2015 4:24 pm
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மழைக்கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற்குள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
* குழந்தைக்கு கதகதப்பான ஆடைகளை அணிவிக்க
வேண்டும்.
* கொசு குழந்தைகளை கடிக்காதவாறு கொசுவிரட்டி கிரீம்களை (Repellent Cream) பயன்படுத்தலாம். ஆனால் பெரியவர்கள் பயன்படுத்தும் ஸ்ட்ராங் கிரீம்களை குழந்தைகளின் மெல்லிய சருமத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
* கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.
* என்னதான் மழை பெய்தாலும் தினமும் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும்.
* நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்கக் கொடுக்க வேண்டும்.
*அவ்வப்போது சமைத்த சூடான உணவையே கொடுக்கவேண்டும்.
* கைகளை சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். குழந்தைகளையும் அவ்வாறே செய்யத் தூண்ட வேண்டும்.
* குழந்தைகளைத் தூக்குவதற்கு முன்பு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* பெரியவர்களுக்குச் சளிகாய்ச்சல் இருந்தால் சரியாகும் வரை குழந்தையைத் தூக்குவதையோ, குழந்தை அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
#DoctorVikatan #DengueTips

Permissions in this forum:
You cannot reply to topics in this forum