தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
எத்தனை வகை பானைகள் ! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

எத்தனை வகை பானைகள் ! Empty எத்தனை வகை பானைகள் !

Tue Oct 27, 2015 8:07 pm
நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற – வழங்கப்பெறும்) பானை வகைகள் சில………..!

1) அஃகப் பானை – தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2) அஃகுப் பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3) அகட்டுப் பானை – நடுவிடம் பருத்த பானை
4) அடிசிற் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5) அடுக்குப் பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6) அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7) உசும்பிய பானை – உயரம் மிகுந்த பானை.
Cool உறிப் பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9) எஃகுப் பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10) எழுத்துப் பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11) எழுப்புப் பானை – உயரம் வாய்ந்த பானை
12) ஒறுவாயப் பானை – விளிம்பு சிதைந்த பானை
13) ஓதப் பானை – ஈரப் பானை
14) ஓர்மப் பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15) ஓரிப் பானை – தனிப் பானை, ஒல்லியான பானை
16) ஓவியப் பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17) கஞ்சிப் பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18) கட்டப் பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை
19) கட்டுப் பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை
20) கதிர்ப் பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21) கரகப் பானை – கரவப்பானை – நீர்க்கரகம்
22) கரிப்பானை – கரி பிடித்த பானை
23) கருப்புப் பானை – முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24) கருப்பு – சிவப்பு பானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25) கலசப் பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26) கழுநீர்ப் பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை
(கொச்சை வழக்கில் கழுனிப் பானை என்னப் பெறுகின்றது)
27) காடிப் பானை – கழுநீர்ப் பானை
28) காதுப் பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29) குண்டுப் பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30) குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி
(கொச்சை வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31) கூடைப் பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32) கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33) கூர்ப் பானை – கூர் முனைப் பானை
34) கூழ்ப் பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35) கோளப் பானை – உருண்டு திரண்ட பானை
36) சருவப் பானை – மேற்புறம் அகற்சியாகவும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37) சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38) சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39) சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை
40) சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை
41) சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை
42) சோற்றுப் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை
43) சில்லுப் பானை – மிகச் சிறிய பானை
44) சின்ன பானை – சிறிய பானை
45) தவலைப் பானை – சிறிய வகைப் பானை
46) திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)
47) திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)
48) துந்திப் பானை – தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49) தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை
50) தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51) தோள் பானை – தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற் கேற்றவாறு உருவமைந்த பானை
52) நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53) பச்சைப் பானை – சுடப்பெறாத பானை
54) படரப்ானை – அகற்ற – பெரிய பானை
55) பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி
56) பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57) பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை
58) மங்கலக் கூலப் பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59) மடைக் கலப் பானை – திருமண வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60) மிண்டப் பானை – பெரிய பானை
61) மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை
62) முகந்தெழு பானை – ஏற்றப் பானை (திவ்வியப் பிர – 3406 – 4)
63) முடலைப் பானை – உருண்டை யுருவப் பானை
64) முரகுப் பானை – பெரிய பானை – திரண்டு உருண்ட பானை
65) மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)
66) மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை
67) வடிநீர்ப் பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68) வழைப் பானை – வழ வழப்பார்ந்த புதுப்பானை
69) வெள்ளாவிப் பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum