காவிகளின் கூடாரமாக மாறிவருகிறதா தமிழக தொலைகாட்சி ஊடகங்கள்?.
Tue Oct 27, 2015 10:09 am
காவிகளின் கூடாரமாக மாறிவருகிறதா தமிழக தொலைகாட்சி ஊடகங்கள்?.
==================================
பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவை இந்துத்வாவின் இந்தியாவாக, இந்தி மொழியின் இந்தியாவாக ஒற்றை இந்தியாவாக மாற்ற துடிக்கும் பாஜகவிற்கு தடையாக நிற்பது தமிழ்நாடு, காஸ்மீர், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற சில மாநிலங்கள் தான். மற்றவை வீழ்ந்தாலும் இதில் தமிழ்நாட்டை வீழ்த்துவது மிகவும் கடினம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் இந்த காவித்தீவிரவாதிகள் ஊடுருவ பல வித செயல்களை கையாள்கின்றனர். முதலில் அவர்களது கருத்துகளை எடுத்துச் செல்ல சென்ற ஆண்டு லோட்டஸ் என்ற தொலைகாட்சியை துவங்கினர். ஆட்சி கைப்பற்றிய பிறகு அதை ஓரங்கட்டிவிட்டு முதன்மை ஊடகங்களான புதிய தலைமுறை, தந்தி, சன் டிவி என அனைத்தையும் வியபித்துக்கொண்டனர்.
கடந்த 6 மாத முன்னணி தொலைக்காட்சி விவாதங்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட எல்லா விவாதங்களிலும் ஒரு பாஜக அல்லது RSS அல்லது இந்து முன்னணி என்ற பெயரிலோ அல்லது சைண்டிஸ்ட், எகனாமிஸ்ட் என்ற பெயரில் பார்பணீயத்தின் கருத்துகளை தாங்கி ஒருவர் இடம்பெறுகிறார். அவர்கள் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிவிட்டனர் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் தமிழக வாக்காளர்களின் இரண்டே சதவீதம் கொண்ட ஒரு கட்சிக்கு, கடந்த தேர்தலில் அசூர பலத்துடன் இந்தியாவை கைப்பற்றினாலும் 4 சதவீத வாக்குகள் கூட பெற முடியாத ஒரு சித்தாந்தத்திற்கு இப்படி ஒரு முக்கியத்துவம் இந்த முன்னணி தொலைகாட்சிகள் தருவது எதற்காக?!. தமிழக மக்கள் மனதில் எதை திணிக்க - விதைக்க முற்படுகிறது இந்த (நடுநிலை) ஊடகங்கள்?!
இந்தியாவை ஆள்கிற கட்சி அதனால் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் கடந்த கால ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு இது போன்றதொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? எல்லா விவாதங்களும் மத்திய அரசின் கொள்கையை சார்ந்தே உள்ளது என்றால் அது போன்றே தலைப்பை தேர்ந்தெடுப்பது யார்? மாநிலம் சார்ந்த விவாதங்களிலும் காவிகள் திணிக்கப்படுவது ஏன்? மாநில நலன் சார்ந்து செயல்படும் இந்த தமிழகத்தை கூறுபோட்டு காவிகளுக்கு விற்பதால் மக்களுக்கு இது தீங்கு என்பதை கூட அறியாதவர்களா இந்த விவாதங்களை ஏற்பாடு செய்வோர்?!
பெரியார் அண்ணா செயல்பட்டுக்கொண்டிருந்த போது ஊடகம் மக்களிடத்தில் இருந்தது. நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்தன. காலப்போக்கில் அழிக்கப்பட்டது. ஆயிரமாண்டு கால பார்பனீயத்தின் பிடியிலிருந்து திக்கித்திணறி தன்னை தற்காத்துக்கொண்டு நிற்க முயல்கிறது தமிழகம். அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என உடைத்துவிடாதீர்கள். ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே விட்டுவைக்கவில்லை இந்த இந்துத்துவ விஷம். அது உங்களையும் ஒரு நாள் தாக்கும் என மறவாதீர்.
****** " ஊடகங்களில் காவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா ", விவாதிப்போம் இன்று இரவு 8 மணிக்கு என்று தலைப்பிட்டு ராகவனையோ, வானதியையோ, பத்ரியையோ கோயம்பதூரிலிருந்து சேகரையோ உக்கார வெச்சிராதிங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum