தினசரி காயகல்பம்
Sat Oct 24, 2015 9:42 pm
கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்... தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.
பகலுணவில் 1பிடி சாதத்துடன் 1ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்யை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும்.
நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.
காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.
காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் தேனில் சாப்பிட கோல் ஊன்றி நடப்பவனும் கோலை வீசி எரிந்து கையை வீசி நடப்பானாம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum