ஆபாசத் தளங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க
Mon Mar 11, 2013 5:39 am
வணக்கம் நண்பர்களே. நமது சாப்ட்வேர் சாப்ஸ் தளத்தில் இதுவரை
வெளிவந்ததிலேயே இது ஒரு உன்னதமான பதிவு என நினைக்கிறேன்.. ஆம் நண்பர்களே..
தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக(Tech Post) எழுதிவரும் நான் எத்தனையோ
பயனுள்ள மென்பொருள்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
அவற்றில் இப்பதிவு முழுமையான அர்ப்பணிப்புடன்
எழுதுகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகளை இணையத்தில் இருந்து ,
இணையத்தில் உள்ள கெட்ட வலைத்தளங்களின் பாதிப்பிலிருந்து(Bad Websites)
பாதுகாக்கக்கூடிய மென்பொருளை இந்தப் பதிவில் உங்களுக்கு அறிமுகம்
செய்யப்போகிறேன்.
குழந்தைகளை இணையத்தில் உலவும்போது உங்களால் ஒவ்வொரு முறையும் அருகில் இருந்து கண்காணிக்க முடியுமா?
முடியாதல்லவா? ஆனால் உங்களைப் போன்றே உங்கள் குழந்தைகளையும் ஒரு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற பெற்றோர் கண்காணிப்பு இலவச
மென்பொருகள் இருக்கின்றன. அவற்றில் நான் பயன்படுத்திப் பார்த்த இந்த
மென்பொருளை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
பேரண்டல் கண்ட்ரோல் சாப்ட்வேர் (parental Control Software) எனப்படும் இந்த
மென்பொருளானது , உங்களைப் போன்றே உங்கள் குழந்தைகளை கண்காணிப்பதில் திறமை
வாய்ந்தது..
உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலவும் போது பாலியல் தொடர்பான தளங்கள்,
வீடியோக்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை இவை தானாகவே தடை செய்துவிடும்.
இந்த மென்பொருளை உங்கள் குழந்தைகளுனுடைய வயதிற்கேற்றார்போல் மாற்றி
அமைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த மென்பொருளின் இணையத்தில்
எவ்விதமான செயல்பாடு நடந்துள்ளது என்பதைக் கண்காணித்து வேண்டாத
செயல்பாடுகளை தடுத்து நிறுத்த முடிகிறது.
இம் மென்பொருளில் உள்ள சில முக்கிய வசதிகள்:
தீம்பொருள்(malware), ஸ்பைவேர்(spyware , இனவாதம்(racism),
Phishing(பிஷிங்), gambling(சூதாட்டம்), drugs(போதை), வன்முறை(violence),
வெறுப்பு(hatred), pornography(ஆபாசம்) ஆகியவைற்றைக் கொண்ட இணையதளங்களைத்
தடுக்க முடியும்.
ஆபாச சாட்டிங் செய்வது, இணையத்தில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்வதை முழுவதுமாக இம்மென்பொருளை பயன்படுத்தி தடை செய்யலாம்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இணையம் தொடர்பில் இருக்குமாறு செய்தல்.
அதாவது நீங்கள் வீட்டில் இருக்கும் குறிப்பிட்ட நேரத்தை மட்டும் தெரிவு
செய்தல். இதனால் வீட்டில் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வுடன்
அவர்கள் இருப்பதால் தேவையில்லாத தளங்களுக்குச் செல்லும் உணர்வும்
தவிர்க்கப்படும்.
இணையத்தில் உள்ள அனைத்து தேடல்தளங்களிலும் பாதுகாப்புத் தேடல் வசதிகளை (Safe Search)பயன்படுத்த முடியும்.
இதிலுள்ள always allow, always block என்னும் வசதிகளைப் பயன்படுத்தி
உங்களுக்குத் தெரிந்த நல்ல தளங்களைக் காட்டச் செய்யவும், தேவையில்லாதவைகளை
Block செய்யவும் முடியும்.
இதனால் உங்கள் குழந்தைகளின் செயல்பாட்டை இணையத்தில் கண்காணிப்பதோடு,
பாதுகாப்பாகவும் உலவச் செய்யலாம். இம்மென்பொருள் ஒரு பெற்றோரைப் போல உங்கள்
பிள்ளைகளை ஆபாச தளங்கள் அல்லது தீங்கு செய்யும் தளங்களிலிருந்து
காக்கிறது. பெற்றோர்களுக்கு குழந்தைகளை இணையத்தில் பாதுகாப்பாக உலவச்
செய்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெரும் சாவாலாக இருந்துவருகிறது.
எனினும் இத்தகை பாதுகாப்பு மென்பொருள்கள் குழந்தைகளின் இணைய நடவடிக்கைகளைக்
கண்காணித்து அவர்களை தீய தளங்களிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை
நினைக்கும்போது மென்பொருள் நிறுவனர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க
முடிவதில்லை.. மென்பொருளை உருவாக்கிய நிறுவனர்களுக்கு நன்றி..
இந்த உன்னதமான , பாதுகாப்பு மென்பொருளைத் தரவிறக்க...
தரவிறக்கம் ஒன்று:
தரவிறக்கம் இரண்டு:
தரவிறக்கம் மூன்று:
Permissions in this forum:
You cannot reply to topics in this forum