#வாய்ப்புண் குணப்படுத்தும் #மணத்தக்காளி!
Sat Oct 24, 2015 9:01 pm
#வாய்ப்புண் குணப்படுத்தும் #மணத்தக்காளி!
வாய்ப்புண், வயித்துப்புண், குடல்புண் என்று அவதிப்படும் பலபேரை பார்த்திருப்போம். ஏன் இதைப்படிக்கும் உங்களில் பலருக்கும் இதே பிரச்சினை வந்து அவதிப்பட்டு எப்படியோ சமாளித்திருப்பீர்கள். இவற்றுக்கெல்லாம் எவ்வளவோ எளிய சிகிச்சைகள் உள்ளன.
முதலில் சொல்ல வேண்டுமென்றால், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் மாசிக்காயின் மகிமைக்கு அளவில்லை. முழு மாசிக்காயும் தேவையில்லை. அதை உடைத்து மிளகு அளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு பாக்கை மென்று சாப்பிடுவதுபோல் மெதுவாக மெல்லலாம். உமிழ்நீரை விழுங்க முடியாதவர்கள் துப்பி விடலாம். அதேபோல் தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்கலாம்.
மணத்தக்காளி கீரையையும் வெறுமனே மென்று சாப்பிடலாம். இந்த கீரையை சமைத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளியின் பழத்தையும் சாப்பிடலாம். கொஞ்சம் இனிப்புச்சுவையுடன் இருக்கும். திராட்சைப்பழத்தை வெறுமனே சாப்பிடலாம். இல்லையென்றால் ஜூஸாக்கியும் சாப்பிடலாம். வெள்ளை நிறத்தில் உள்ள கல்யாண பூசணிக்காயை ஜூஸாக்கி அதனுடன் வெல்லம் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
இவை தவிர திப்பிலியையும், நெல்லிக்காய் தூளையும் சம அளவு எடுத்து தேனில் குழப்பி நாக்கில் வைத்து வாய் முழுவதும் படும்படி செய்தால் வாய்ப்புண் சரியாகும். மாங்கொட்டைப்பருப்பை மணத்தக்காளி சாறுடன் சேர்த்து அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக காய வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு உருண்டையை எடுத்து வாயில் போட்டு மோர் குடித்து வந்தால் வாய்ப்புண், வயித்துப்புண் குணமாகும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum