வயிற்று பூச்சிகளை வெளியேற்றும் குப்பைமேனி!
Fri Oct 23, 2015 5:54 am
குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது. பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து.
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.
குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும்.
குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் வயிற்றில் இருக்கும் புழுக்கள், மலம் வழியாக வெளியேறும். இதனுடைய இலைப் பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் கபம் நீங்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum