பா.ஜ.க விடம் பம்மும் தமிழ்த் தேசியம்...
Fri Oct 09, 2015 7:47 pm
"திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் கெட்டுவிட்டது" - எனச்சொல்லி பழ.நெடுமாறன் பயணம் துவங்கிவிட்டார்.
"திராவிடக் கட்சிகள்" என அவர் பொதுவாகச் சொன்னாலும் அது தி.மு.கவைத்தான் குறி வைக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஜெயாவுக்கு இது பற்றிக் கவலை இல்லை. ஏனெனில் திராவிடக் கட்சிகள் என்றால் அது தன்னைக் குறிக்காது என அவருக்கு நன்றாகவே தெரியும்.
ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் மன்மோகன் சிங், சோனியாவைக் கடுமையாகத் தாக்கி பா.ஜக்வினரை மேடை ஏற்றி அழகு பார்த்த இவர் இன்று மோடி அரசு ஈழப் பிரச்சினையில் அதைவிட மோசமாக நடந்து கொள்ளும்போது செல்லமாகச் சிணுங்குவதோடு நிறுத்திக் கொள்வதையும் கவனியுங்கள்.
இந்த விஷயத்தில் நெடுமாறன் மட்டுமல்ல, ஈழ ஆதரவு என்கிற பெயரில் காங்கிரசை வசை பாடி இந்துத்துவ சக்திகளுடன் குழைந்த அத்தனை தமிழ்த் தேசியங்களும் இன்று பம்முவதைக் கவனியுங்கள். இவர்களின் இந்துத்துவ ஆதரவு புராஜெக்டில் ஒரு பகுதிதான் பெரியார் எதிர்ப்பும், திராவிட எதிர்ப்பும்.
தமிழ்த் தேசியத்தின் அடிப்படை இந்துத்துவம்தான் என நான் முப்பதாண்டுகளாகச் சொல்லி வருவது கண்முன் பட்டவர்த்தனமாகிக் கொண்டிருக்கிறது.
- Marx Anthonisamy

Permissions in this forum:
You cannot reply to topics in this forum