கியாஸ், ரேஷன் பொருட்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Thu Oct 08, 2015 3:22 pm
புதுடெல்லி: சமையல் எரிவாயு, ரேஷன் பொருட்கள் தவிர வேறு எந்த திட்டங்களுக்கோ, சேவைகளுக்கோ ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தனிமனிதர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்பது குறித்து இந்த அமர்வு முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு முடியும் வரை ஆதார் அட்டை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
அதில், மண்எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக மட்டுமே ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் மத்திய அரசு, செபி, டிராய், ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களில், அரசு சார்ந்த சமூகநல திட்டங்களுக்கும், தங்கள் அமைப்புகளின் சேவைகளுக்கும் ஆதார் அட்டையை அனுமதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்களின் மீது நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், சமையல் எரிவாயு வினியோகம், ரேஷன் பொருட்கள் வழங்குதல் தவிர வேறு எந்த சேவைகளுக்கும், சமூகநல திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற இந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் மாற்றமோ, விதிவிலக்கோ செய்ய முடியாது.
உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வில், ஆதார் அட்டையில் தனிமனிதர்களின் அந்தரங்க அடையாளங்களை பதிவு செய்வது அவர்களது அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்ற வழக்கு விசாரணையில் இருக்கிறது. எனவே இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு கோரும் இந்த மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்விலேயே விசாரணை நடத்தலாம் என்பதே எங்கள் கருத்து" என்று கூறினர்.
மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சமையல் கியாஸ் இணைப்பு, ரேஷன் பொருட்கள் வழங்குதல், வங்கி கணக்கு தொடங்குதல், சில சமூகநல திட்டங்கள் ஆகியவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கின. இந்த நடைமுறையை நீக்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தனிமனிதர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்பது குறித்து இந்த அமர்வு முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு முடியும் வரை ஆதார் அட்டை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
அதில், மண்எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக மட்டுமே ஆதார் அட்டையை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மற்ற சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் மத்திய அரசு, செபி, டிராய், ரிசர்வ் வங்கி மற்றும் சில மாநில அரசுகள் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களில், அரசு சார்ந்த சமூகநல திட்டங்களுக்கும், தங்கள் அமைப்புகளின் சேவைகளுக்கும் ஆதார் அட்டையை அனுமதிக்கும் வகையில் இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்களின் மீது நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், சமையல் எரிவாயு வினியோகம், ரேஷன் பொருட்கள் வழங்குதல் தவிர வேறு எந்த சேவைகளுக்கும், சமூகநல திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற இந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் மாற்றமோ, விதிவிலக்கோ செய்ய முடியாது.
உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வில், ஆதார் அட்டையில் தனிமனிதர்களின் அந்தரங்க அடையாளங்களை பதிவு செய்வது அவர்களது அடிப்படை உரிமையில் வருகிறதா? இல்லையா? என்ற வழக்கு விசாரணையில் இருக்கிறது. எனவே இடைக்கால உத்தரவில் மாற்றம் அல்லது விதிவிலக்கு கோரும் இந்த மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்விலேயே விசாரணை நடத்தலாம் என்பதே எங்கள் கருத்து" என்று கூறினர்.
வெளிப்படுத்தல்: 13:11-18 வசன நிறைவேறுதலை காணலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum