அவருடைய மகிமையை ஒருவருக்கும் தருவதில்லை...
Thu Oct 01, 2015 10:01 pm
யோவான் - 3:30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
ஒரு சமயம் ஒரு கூட்டம் ஒன்றில் தேவ ஊழியர் ஒருவர் தேவனுடைய வார்த்தையை வல்லமையாய் பிரசங்கித்தாராம்...
அந்த கூட்டம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருந்ததாம்...
கூட்டம் முடிந்த பின் ஒரு செல்வந்தர் அந்த தேவ ஊழியரிடம் :
என்ன ஒரு அருமையான பிரசங்கம்...
என்ன அற்புதமான பேச்சு...
இதுவரை இப்படி யாரும்
பேசி கேட்டதில்லை...
அப்படி இப்படி என்று
புகழ்ந்து தள்ளிவிட்டாராம்...
அன்றைய தினம் இரவெல்லாம்
அந்த தேவ ஊழியர் தூங்காமல் கண்ணீரோடு தேவ சமூகத்தில் கதறி அழுதாராம்...
"ஆண்டவரே நான் எங்கே தவறு செய்தேன்...
அந்த மனிதன் என்னை
ஏன் புகழுகிறார்...
என்னை மன்னியும்...
எனக்கு உதவி செய்யும்...
ஒருபோதும் நான் தெரியக்கூடாது ஆண்டவரே...
நான் உமது கருவி மாத்திரமே...
நான் ஒன்றும் இல்லையே...
ஆனால் அந்த மனிதன் என்னிலே...
என்மூலமாய் பிறந்த உம்முடைய வார்த்தையிலே,உம்மைக் காணாதபடி நான் தெரிந்திருக்கிறேனே...
என்னை மன்னியும்...
என்னை அபிஷேகியும்...
எனக் கதறினாராம்...
மறுநாள் கூட்டம் இனிதே நடந்தது...
அதே மனிதர் திரும்பவும்
அந்த தேவ ஊழியரிடம் வந்தாராம்... வந்தவர், ஐயா...
மெய்யாகவே இன்று
இயேசு என்னோடு பேசினார்...
அது என் உள்ளத்தை உடைத்தது...
அது என்னை இரட்சித்தது...
இதோ ஒரு புதிய மனிதனாய்
கடந்து செல்கிறேன்...
இயேசு நல்லவர் என்று சொல்லி
கடந்து சென்றாராம்...
அந்த தேவ ஊழியர் தேவனுக்கு
நன்றி சொன்னாராம்...
ஆம்... அவர் ஒருவரே எல்லா
கனத்திற்கும் மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் வல்லமைக்கும்
மகத்துவத்திற்கும் ஆராதனைக்கும்
உரியவர்...
ஒரு போதும் மண்ணினால் உண்டாக்கப்பட்டு தேவனுடைய ஆவியினாலே பிழைக்கிற மனிதனுக்கு தேவாதி தேவனாம்
ராஜாதி ராஜனாம்
நித்தியமானவராம்...
அவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை செலுத்த வேண்டாம்...
அவருக்கு சமமாய்
புகழவும் வேண்டாம்...
மற்றவர்கள் நம்மை
புகழ்வதற்கு விரும்பவும்
வேண்டாம்...
அது ஆபத்து...
தேவன் எல்லாவற்றையும்
நமக்கு தருவார்...
ஆனால் அவருடைய மகிமையை ஒருவருக்கும் தருவதில்லை...
ஆகவே விழிப்போடிருப்போம்...
ELAG - mdtp

Permissions in this forum:
You cannot reply to topics in this forum