வீடு கட்ட சதுராடிக்கு எவ்வளவு ?
Wed Sep 30, 2015 4:03 pm
வீடு கட்டனும் சதுர அடிக்கு என்ன Rate ? எல்லா வீடு கட்டும் நபர்களும் கேற்கும் ஒரே கேள்வி.
கட்டிடத்தின் (Plinth Area) சதுர அடியை அளப்பது எப்படி?கட்டிடத்தின் வெளிப்புற நீளம் மற்றும் அகலம் கொண்டு பரப்புக் கணக்கிடப்படும், வாகன நிறுத்தம் மற்றும் வெளிப்புற மாடிப்படி பரப்பில் பாதி... ஜன்னல் Sunshade, Balcony, அகலம் இரண்டு அடிக்கும் குறைவாக இருந்தால் பரப்பை கணக்கிடக் கூடாது.
சதுர அடியின் விலையை எப்படி மதிப்பிட வேண்டும்?ஒரு கட்டிடத்தின் மொத்தக்கட்டுமான செலவு அதன் (Plinth Area) சதுர அடிக்கும் உள்ள விகிதம். குறிப்பு இதன் மதிப்பு ஒரேமதரியான Specification இருக்க வேண்டும்.
Plinth Area Sqft Rate கட்டிட ஒப்பந்தத்திக்கு சரியா?இல்லை! இந்த Plinth Area Sqft Rate, ஒரு தோரயமதிப்பிடு மிகச் சரியான மதிப்பிடு அல்ல இது கட்டிடம் கட்டும் முன் வரைபடம் தயாரிக்கும் முன் சொல்லப்படும் தோரயமதிப்பிடு மட்டுமே.
ஏன் தவறு ?
உங்கள் கட்டிட வரைபடத்தின் படி உள்ள அறைகள் சதுரமாக இல்லாமல் செவ்வகமாக இருப்பின் அதன் பரப்பை சரி சமமாக இருப்பின் சதுர வடிவ அறைகள் அமைப்பதுக்கு அதிக Labour மற்றும் Material Cost தேவைப்படும் சதுரத்தின் சுற்றளவு அதிகம், சுவர், பூச்சு, Slab Two way வருவதால் அதன் கம்பி மற்றும் Concrete செலவுகள் அதிகம் பிடிக்கும்.
உதாரணம்
ஒப்பந்தகாரர்கள் Plinth Area Sqft Rateல் வேலை செய்கிறார்களே அது எப்படி?
· சில ஒப்பந்தகாரர்கள் முதலில் அவரது வேலையின் Specification கொடுப்பது இல்லை.
அப்படியே கொடுத்தால் அவர்களது பரப்பளவு கணக்கிடும் முறையில் மற்றம் இருக்கும். அது கட்டிட வரைபடம் முடியும் முன் அல்லது பின்னும் சதுர அடியின் விலை (Sqft Rate ) மட்டுமே பேசப்படும். மொத்ததொகை சொல்லபடாது.
விலை மற்றும் பரப்பு கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப்பட்டால் Finishing வேலை வரும் பொழுதுTiles, Wood கட்டிட உரிமையாளர் பொறுப்பு என்றும், வங்கி கொடுத்தால் நாங்கள் பொருத்தி கொடுப்போம் என்றும் சொல்லப்படும்.
விலை, மற்றும் பரப்பை கணக்கிடும் முறை முதலில் தெரிவிக்கப்பட்டால் பொருட்களின் பொறுப்பு ஒப்பந்ததாரர் எனினும், ஒப்பந்த பத்திரத்தில் பொருட்களின் அடிப்படை விலை கொடுக்கப்படும் அது இன்றைய சந்தை விலையை விடக் குறைவாக இருக்கும். வேலை நடக்கும் பொழுது விலை வேறுபாடு காரணம் தெரிவித்து மேலும் பணம் வசூல் செய்யப்படும்.
Roof Slab கணம் 5” (125MM) கொடுக்கப்படும் ஆனால் உங்கள் கட்டிடதிக்கு 6” (150MM) கணம் தேவைப்பட்டால் அதிகப் பணம் வசூல் செய்யப்படும் அல்லது 5” (125MM) கணம் போட்டு விடுவர் அது தவறான கட்டுமான முறை.
Plinth Area Sqft Rate பற்றி Book: Estimating and Costing in Civil Engineering- B.N.Dutta
சொல்லபட்டது கீழ் உள்ளது.
Plinth Area Sqft Rate கட்டிட ஒப்பந்தம் தவறு எனில் எந்த முறை சரி?
ஒரு பொறியாளர் உங்கள் வீட்டின் வரைபடம் தயாரித்தபின் அதக்கு Qty எடுக்க வேண்டும், அதக்குத் தேவைப்படும் Labour, Material Cost மற்றும் Profit சேர்த்து மொத்த மதிப்பு கணக்கிட வேண்டும்.
உதாரணம் கீழ் உள்ள வரைபடம் Plan A மற்றும் Plan B இந்த இரண்டு வரைபடத்தில் உள்ளவாறு Plinth Area201.25 Sqft வரும் ஆனால் Plan A இல் இரண்டு அறைகளாகப் பிரிக்கும் பொழுது அந்தச் சுவரின் கட்டுமனத்திக்கு தேவையான செங்கல் , மணல், சிமென்ட், இதைச் செய்வதுக்குத் தேவையான தொழிலாளர் சம்பளம் அதிகம்.
இப்பொழுது சொல்லுங்கள் Plinth Area Sqft Rate சரியா என்று?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum