கேட் தேர்வு அறிவிப்பு
Tue Sep 01, 2015 11:59 am
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய அறிவியல் மையம் (ஐ.ஐ.எஸ்) கிராஜூவேட் ஆப்டிடியூடு டெஸ்ட் இன் என்ஜினீயரிங் (GATE) எனப்படும் கேட் தேர்வை நடத்துகிறது. பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள், கட்டிடக்கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதி முதுகலை படிப்பு மற்றும் முனைவர் படிப்புக்கான உதவித் தொகையைப் பெறலாம்.
பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் இந்த தேர்வு மதிப்பெண்களை அடிப்படை எழுத்து தேர்வு போல பயன்படுத்திக் கொண்டு, தங்கள் நிறுவன பணியிடங்களை நிரப்பிக் கொள்கின்றன. தனியார் நிறுவனங்கள், கல்வி மையங்களிலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்களில் முன்னுரிமை கிடைக்கும்.
தற்போது 2016-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்...
என்ஜினீயரிங்/டெக்னாலஜி துறையில் டிப்ளமோ (3 ஆண்டு) மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். ஆர்கிடெக்சர் 5 ஆண்டு படிப்பை முடித்தவர்கள் மற்றும் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர் களும் எழுதலாம். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.750-ம் மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணம் செலுத்தி
விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 1-9-15-ந் தேதி முதல் 1-10-15-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கேட் தேர்வு 2016 பிப்ரவரி முதல் வாரத்திற்குள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://gate.iisc.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

- டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு
- இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்
- 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்
- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய TET தேர்வு-2012 கேள்விகள்
- OLX - காவல்துறை அறிவிப்பு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum