சபை கூடி வருதலில்
Wed Aug 12, 2015 7:08 am
ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டி வைத்தார்கள். அது கொஞ்சம் வித்தியாசமான போட்டி .
மாணவர்களை எல்லாம் ஒரு ரயிலில் பயணம் செய்ய வைத்து வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களைக் கட்டுரையாக எழுத வேண்டும்.
ஒரு மாணவன் ரயில் பயணத்தில் சந்தித்த மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதினான். இன்னொருவன் ரயிலில் ஏறி இறங்கிய வியாபாரிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் பற்றி எழுதினான். இன்னும் சிலர் வழியில் கண்ட இயற்கைக் காட்சிகள் பற்றி அழகாக எழுதியிருந்தார்கள்.
எல்லாருமே அழகாக எழுதியிருந்தார்கள். ஆசிரியர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாசித்தார் . ஒரு மாணவனின் கட்டுரையைப் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அந்த மாணவன் தன் கட்டுரையின் துவக்கம் முதல் முடிவு வரை எழுதியிருந்தது இதுதான் ,
" தடக் தடக். தடக் தடக். தடக் தடக் ".
நேராக அந்த மாணவனிடம் போய் சொன்னார் ,
"முட்டாப் பயலே ! உன் கூட வந்தவர்களெல்லாம் இந்தப் பயணத்தின் இனிமையான நினைவுகளை ரொம்ப அழகா எழுதி இருக்காங்க . ஆனா நீ மட்டும் ரயிலோட சத்தத்தை மட்டுமே கவனிச்சு அனுபவத்தை
இழந்துட்டியே ! " என்றார்.
செல்லமே ! ஒரு சிலர் இப்படித்தான் சபை கூடி வருதலில் உள்ள சந்தோஷத்தையும் , ஆராதனையில் இருக்கும் பிரசன்னத்தையும் அனுபவிக்காமல் ஏதேனும் குறையை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதுமே
"தடக் தடக் " சத்தத்தை மட்டுமே எழுதிக் கொண்டு திரிகிறார்கள்.
இந்தக் கோமாளிகள் கூட்டத்திற்கு விலகியிருப்பாயா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum