அப்பா கொடுத்த அறையை எதைக் கொண்டு நிரப்பப் போகிறாய்?
Tue Aug 11, 2015 12:23 am
ஒரு செல்வந்தருக்கு மூன்று மகன்கள். மூவருமே இளைஞர்கள். அவருக்கு வயதானது. வியாபாரத்தை கவனிக்க யாரை நியமிக்கலாம் என்று குழம்பினார். ஒருவர் பொறுப்பேற்றால் மற்ற இருவரும் அவருக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் யாரைப் பொறுப்பேற்கச் சொல்வது? வயதின் அடிப்படையில் பார்த்தால் திறமை அடிபட்டுப்போகலாம்.
ஒரு முடிவுக்கு வந்தார். ஒரே அளவில் மூன்று பெரிய அறைகள் கட்டினார். மூவரையும் அழைத்தார்.
" பிள்ளைகளே! என் ஆஸ்தியெல்லாம் உங்களுக்கே. ஆனால் உங்களில் மிகச்சிறந்தவனிடமே என் வியாபாரத்தை ஒப்படைக்க விரும்புகிறேன். இதோ மூன்று அறைகள் கட்டி வைத்திருக்கிறேன். . ஆளுக்குப் பத்தாயிரம் . . ரூபாயும் தருகிறேன். . . போட்டி இதுதான் , நான் தரும் பணத்தைக் கொண்டு எவன் தனது அறையை முழுமையாக நிரப்புகிறானோ அவனே வென்றவன் . மற்ற இருவரும் அவனுக்கு உதவியாக இருக்கணும் சரியா? என்றார். ஓ இவ்வளவுதானா என்றபடி சகோதரர்கள் கலைந்து சென்றனர்.
மூத்தவன் யோசித்தான். என்ன வாங்கலாம் ,எது நிறைய கிடைக்கும்? சந்தோஷமாய் ஒரு முடிவுக்கு வந்தான். பத்தாயிரத்துக்கும் வைக்கோலை வாங்கி அறையை நிரப்பினான். கதவைக் கூட மூடமுடியாதபடி அறை நிறைந்தது.
அடுத்தவன் இதைக் கேட்டதும் மிரண்டு போனான். இந்த அருமையான ஐடியா நமக்கு எட்டாம போச்சே என்று புலம்பினான். சட்டென்று வந்த ஒரு யோசனையில் அவன் முகம் மலர்ந்தது. எழுந்து ஓடினான்.
அவன் நின்ற இடம் வறட்டி விற்கும் , இடம்.
"ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு வறட்டி குடுங்க" என்றான். வறட்டி விற்கும் பாட்டிக்கு சிரிப்பு வந்தது. அம்பது காசுக்கு வாங்கினாலே அஞ்சாறு நாளைக்கு வரும்.
சரி! பெரிய இடத்துப் பிள்ளை கேக்குது , ஒரு வாரம் கழிச்சி வா ராசா, என்று சொல்லி நாலே நாளில் பத்து வண்டி நிறைய அனுப்பி வைத்தது.
இரண்டாவது மகனின் அறையும் நிரம்பி வழிந்தது. அண்ணனை விட நான்தான் அதிக அளவில் நிரப்பிருக்கேன் என்று பெருமைப் பட்டுக்கொண்டான். அண்ணனுக்கும் கொஞ்சம் நடுக்கந்தான்.
"சரி. சின்னவன் என்ன செய்தான்? அப்பா நாளைக்கு வந்து பாக்கப் போறதா சொல்லிருக்காரே!"
சின்னவன் அறையை மெதுவாக எட்டிப் பார்த்தான். ஆனால் அங்கு எதுவும் இல்லை.
பயல் பயந்து போய் கலந்துக்கவே இல்லையோ! எப்படியும் வெற்றி நம்ம ரெண்டு பேருல ஒருத்தனுக்கு தான்.
சந்தோஷமாய்ப் போனார்கள்.
போட்டி முடியும் நாள் வந்தது. அப்பா மூன்று அறைகளையும் பார்வையிட ஆவலாக வந்தார்.
முதலாவது அறை. மூத்தவன் "அப்பா அப்படியே அசந்து போய் நான்தான் வியாபாரத்தைப் கவனிக்கணும்னு சொல்லப் போறார்". மனதில் கற்பனை செய்து கொண்டே தந்தையை அழைத்துச் சென்றான். அறையைப் பார்த்ததும் அப்பா சிரித்துக் கொண்டார். முழுசா நிரப்பிட்டே. ஆனா இந்த சரக்கை வித்தா எத்தனை சதவீதம் லாபம் கிடைக்கும்?
அவரது கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
அப்பா அடுத்த மகனின் அறைக்குப் போனார்.
அறையை நெருங்கும் முன்பே சாணத்தின் நாற்றம்.
அப்பா தலையில் அடித்துக் கொண்டார்.
" பத்தாயிரம் ரூபாய்க்கும் இதையா வாங்கினே?
நீ அண்ணனை விட புத்திசாலிதான் என்றார். இருவருக்குமே ஒரு விஷயம் புரியவில்லை.
"பத்தாயிரம் ரூபாயில் ஒரு பெரிய அறையை நிரப்பச் சொன்னால் வேறு எப்படித்தான் நிரப்ப முடியும்?
வேறு எதுவும் வாங்கினால் பாதி கூட நிரப்ப முடியாதே! அப்புறம் ஏன் அப்பா அப்படி சொன்னார்.?
இப்போது மூவருக்கும் ஒரே எண்ணம்.
தம்பி என்ன செய்திருப்பான்? நேற்று வரை ஏதும் செய்யவில்லை .
மூவரும் இளையவன் அறைக்குப் புறப்பட்டனர்.
நெருங்கும் போதே இனிமையான பாடல் சத்தம் காதில் விழுந்தது. மூவருக்கும் மனதுக்குள் இனம்புரியாத சந்தோஷம்.
வேகமாக அறையை நெருங்கினார்கள்.
உள்ளே இளையவனுடன் இன்னும் பத்து பேர் இருந்தனர். இவர்கள் வந்தது கூடத் தெரியாமல் மனமுருகி ஆராதித்துக் கொண்டே இருந்தனர். அவர்களும் அசையாமல் அமர்ந்து விட்டனர். திடீரென இளையவன் அவர்களை கவனித்து விட்டான். ஓடிவந்து அவர்களை முன்னால் அழைத்துச் சென்றான்.
அப்பா கேட்பதற்கு முன்பு அவனே பதில் சொன்னான். "அப்பா! உங்கள் பத்தாயிரம் ரூபாயில் இந்த அறை முழுவதும் தேவ பிரசன்னத்தால் நிரம்பி வழிகிறது. துதியினாலும் ஜபங்களாலும் நிரம்பி வழிகிறது. போதகர் கொடுக்கப்படும் செய்தியினால் இவர்கள் ஆத்துமா சமாதானத்தால் நிரம்பும்.
கூட்ட முடிவில் கொடுக்கப்படும் உணவால் இவர்கள் வயிறும் மனசும் நிரம்பும். ஏசுவின் நிமித்தமாக வந்திருக்கிற இவர்களுக்கு உணவு கொடுப்பதால் நம்முடய வாழ்க்கை ஆசீர்வாதங்களால் நிரம்பும்.
அவன் சொல்லி முடிக்கும் முன்பே அண்ணன்கள் சொன்னார்கள்
"அப்பா! இவனே தகுதியுள்ளவன்.இவனுக்கு உதவியாக இருப்போம்".
செல்லமே! உனக்கு அப்பா கொடுத்த அறையை எதைக் கொண்டு நிரப்பப் போகிறாய்? உலகின் குப்பைகளாலா? கர்த்தருக்குப் பிரியமான காரியங்களாலா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum