ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு ...
Mon Aug 10, 2015 8:36 pm
மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு 1064 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) தற்போது ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான தேர்வை அறிவித்து உள்ளது. 'ஸ்டெனோகிராபர்ஸ் எக்ஸாமினேசன்-2015' எனும் இந்த தேர்வின் அடிப்படையில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள 'கிரேடு-சி' மற்றும் 'கிரேடு-டி' தரத்திலான ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது.
மொத்தம் 1064 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 'கிரேடு-சி' ஸ்டெனோகிராபர் பணிக்கு 50 இடங்களும், 'கிரேடு-டி' ஸ்டெனோகிராபர் பணிக்கு 1014 இடங்களும் உள்ளன. 'கிரேடு-டி' பணியிடங்களில் ஒதுக்கீடு வாரியாக பொதுப்பிரிவினருக்கு 642 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 198 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 113 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 61 இடங்களும் உள்ளன. கிரேடு-சி பணியிடங்கள் பெரும்பாலும் டெல்லியிலும், கிரேடு-டி பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 1-8-15 தேதியில் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-8-1988 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
'கிரேடு-சி' ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவும், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். 'கிரேடு-டி', ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மற்றவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியில் விண்ணப்பிப்பவர்கள் கட்டணத்தை, மத்திய ஆட்தேர்வு அஞ்சல் முத்திரையாக குறுக்கீடு செய்து இணைக்க வேண்டும். இணையதளம் வழியிலும் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் மற்றும் தபால் ஆகிய இரு வழிகளிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பங்கள் இணையதளத்திலும், எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழிலும் காணப்படு கிறது. இணையதளத்தில் பார்ட்-1, பார்ட்-2 முறையில் 2 நிலையில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, chennai , Tamilnadu600006 என்ற முகவரிக்கு தபால் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 7-9-15
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 27-12-2015
இது பற்றிய விரிவான விவரங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum